Tag Archives: idly kadai

என்ன அந்த படம் மாதிரியே இருக்கு.. தனுஷின் இட்லிகடை என்ன சுகம் பாடல் வெளியானது..!

நடிகர் தனுஷ் நடித்து இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. தொடர்ந்து தனுஷ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வெறும் ஆக்ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் நடிக்காமல் வெவ்வேறு வகையான திரைப்படங்களை எடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் ஆனது ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் தனுஷுக்கு நல்ல வரவேற்பு பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அருண் விஜய் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே நித்யா மேனன் கதாநாயகியாக நடித்த தலைவன் தலைவி என்கிற திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் சரி இட்லி கடை திரைப்படத்திலும் சரி கதாநாயகன் ஹோட்டல் வைத்திருப்பது போல தான் கதைகளம் செல்கிறது.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களும் வெளியாவது எந்த அளவிற்கு படத்திற்கு வெற்றியை பெற்று தரும் என்று தெரியவில்லை என்பது மக்களது கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் இட்லி கடை திரைப்படத்தின் பாடல் ஒன்று இப்பொழுது வெளியாகி இருக்கிறது.

தனுஷ் செய்த அந்த தப்பு.. வேறு படத்திற்கு நடிக்க சென்ற நித்யா மேனன்.!

நடிகை நித்யா மேனன் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். பெரும்பாலும் நித்யா மேனன் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வகையிலான வெற்றியை கொடுத்து வருகின்றன.

தமிழில் ஓ.கே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன்.

ஆனால் அந்த படம் சுமாரான வரவேற்பைதான் பெற்று இருந்தது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் காம்போ நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

எனவே தனுஷும் நித்தியா மேனனும் இணைந்து அடுத்து நடித்து வரும் திரைப்படம் இட்லி கடை திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிய நித்தியா மேனன் ஆரம்பத்திலேயே அதற்கு கால் சீட் கொடுத்திருந்தார்.

ஆனால் தனுஷ் படம் இயக்கும்பொழுது நித்தியா மேனனின் கால் சீட்டை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட தேதியில் அவருக்கான படைப்பிடிப்பை தனுஷ் நடத்தவில்லை.

இதனால் பொருத்து பார்த்து நித்தியாமேனன் பாதியிலேயே விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார். விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தில்  தற்சமயம் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனால் கதாநாயகிக்கான பகுதிகள் எல்லாம் இன்னும் இட்லி கடை திரைப்படத்தில் எடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பட வெளியீட்டிலும் இதனால் தாமதம் ஏற்படும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.