நடிகர் தனுஷ் நடித்து இயக்கி வரும் திரைப்படம் இட்லி கடை. தொடர்ந்து தனுஷ் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் வெறும் ஆக்ஷன் திரைப்படங்கள் என்று மட்டும் நடிக்காமல் வெவ்வேறு வகையான திரைப்படங்களை எடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்சமயம் அவர் நடித்து வரும் இட்லி கடை திரைப்படம் ஆனது ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் தனுஷுக்கு நல்ல வரவேற்பு பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் நடிகை நித்யா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
அருண் விஜய் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தனுஷின் வொண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே நித்யா மேனன் கதாநாயகியாக நடித்த தலைவன் தலைவி என்கிற திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் சரி இட்லி கடை திரைப்படத்திலும் சரி கதாநாயகன் ஹோட்டல் வைத்திருப்பது போல தான் கதைகளம் செல்கிறது.
இந்த நிலையில் ஒரே நேரத்தில் இந்த இரண்டு படங்களும் வெளியாவது எந்த அளவிற்கு படத்திற்கு வெற்றியை பெற்று தரும் என்று தெரியவில்லை என்பது மக்களது கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் இட்லி கடை திரைப்படத்தின் பாடல் ஒன்று இப்பொழுது வெளியாகி இருக்கிறது.