ஹாலிவுட் பிரபலமான மர்ம எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் ஸ்டீபன் கிங்.
ஸ்டீபன் கிங் கதைகள் பெரும்பாலும் ஹாலிவுட்டில் திரைப்படம் ஆக்கப்பட்டு வந்துள்ளன. அந்த வகையில் ஏற்கனவே இட் என்கிற ஒரு பேய் படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
இட் படத்தின் கதைப்படி ஒரு கிராமத்தில் திடீரென்று மர்மமான முறையில் அங்கு இருக்கும் சிறுவர் சிறுமியர்கள் காணாமல் போவார்கள். அதற்கான காரணம் என்ன என்பதை அடிப்படையாகக் கொண்டு கதைக்களம் செல்லும்.
ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளிவந்து பெரும் வெற்றியை கொடுத்துள்ளது இட் திரைப்படம். இந்த நிலையில் தற்சமயம் IT: Welcome to Derry என்கிற இன்னொரு திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் அதாவது அவர்களுடைய காலகட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவது போலவே அதற்கு முன்பும் நடந்திருக்கும்.
எனவே அந்த முன் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த படம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு வந்த இட் படங்களை விடவும் இதில் அதிகமான அமானுஷ்ய காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் இப்பொழுது படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது.