ஒழுங்கா கதை எழுதலைனா செருப்பால அடிப்பேன்!.. மிஸ்கினுக்கு போன் செய்து மிரட்டிய நடிகை…

தமிழில் திரைப்படம் எடுப்பதில் தங்களுக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்கள் சிலர் உண்டு. அவர்களது திரைப்படத்தை பார்த்தாலே இது அவர்கள் இயக்கியதுதான் என தெரிந்துவிடும். அப்படி தனக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின்.

பல காட்சிகளில் வெறும் காலை மட்டும் காட்டினால் அது மிஸ்கின் படம் என கூறிவிடலாம். தமிழ் சினிமாவில் புதுமையான விஷயங்களை முயற்சி செய்பவர் மிஸ்கின். ஐட்டம் பாடல்களில் மஞ்சள் புடவை கட்டி ஆட வைத்த முதல் இயக்குனர் மிஸ்கின் தான்.

அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு இவர் வெகுவாக பிரபலமானார். ஒரு பேட்டியில் அவருக்கு பிடித்த நடிகைகள் பற்றி கேட்கும்போது பாவனா, பூர்ணா ஆகிய நடிகைகளின் நடிப்பு பிடிக்கும் என கூறியிருந்தார்.

ஆனால் தற்சமயம் நித்யா மேனனைதான் மிகவும் பிடிக்கும். அவள் நடிப்பதில் பேய் மாதிரி.. சில நாட்கள் எனக்கு போன் செய்து எனக்கு ஒழுங்கா கதை எழுது இல்லைனா செருப்பால அடிப்பேன் என மிரட்டுவாள் என தன் பேட்டியில் மிஸ்கின் பகிர்ந்துள்ளார்.