Tag Archives: thalaivan thalaivi

12 நாளில் பெரிய வசூல்.. தலைவன் தலைவி வசூல் நிலவரம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்த திரைப்படம் தான் தலைவன் தலைவி.பொதுவாக இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப படங்களாகவே எடுக்க கூடியவர்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. பொதுவாக குடும்ப கதைகளங்களை கொண்ட திரைப்படங்களை எடுத்தால் ஓடாது என ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை ஆக்‌ஷன் திரைப்படங்களை பார்க்கும் அதே சமயம் மக்கள் குடும்ப கதைகளையும் விரும்புகின்றனர் என்பதை தனது திரைப்படங்களின் வெற்றி மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்த நிலையில் தற்சமயம் வெளியான திரைப்படம்தான் தலைவன் தலைவி. ஏற்கனவே விஜய் சேதுபதி கருப்பன், சேதுபதி, தர்மதுரை மாதிரியான குடும்ப படங்களில் நடித்திருப்பதால் அவருக்கு இந்த படத்தில் கதாபாத்திரம் நன்றாகவே செட் ஆகிவிட்டது.

நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இதுவரை 75 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் 100 கோடிக்கு ஓடி வெற்றி கொடுக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதியும் 100 கோடி வசூல் நாயகர்களில் ஒருவராக மாறிவிடுவார்.

பல பேரிடம் கை மாறிய தலைவன் தலைவி திரைப்படம்.. இப்படி பண்ணிட்டாங்களே..!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்சமயம் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி.

தலைவன் தலைவி திரைப்படத்தைப் பொறுத்தவரை அது வெளியான சமயத்தில் முதலில் அதிகமாக பேசப்படவில்லை என்றாலும் கூட போக போக படத்திற்கான வரவேற்பு என்பது அதிகரிக்க துவங்கியது.

இப்போது திரையரங்குகளில் தொடர்ந்து அதிக வசூல் செய்து வருகிறது தலைவன் தலைவி திரைப்படம். தொடர்ந்து குடும்ப படமாக எடுத்து வரும் பாண்டிராஜ் மீண்டும் எடுத்திருக்கும் குடும்ப திரைப்படம் தான் தலைவன் தலைவி திரைப்படம்.

இதில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பு மிக சிறப்பாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் எவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட இந்த கதையை ஆரம்பத்தில் பலரும் நிராகரித்து இருக்கின்றனர்.

குடும்ப திரைப்படங்கள் எல்லாம் இப்போது ஓடாது என்கிற கருத்து பலரது மத்தியில் இருந்து வந்தாலும் கூட தொடர்ந்து குடும்ப படங்களாக எடுத்து ஹிட் கொடுத்து வருகிறார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த வகையில் தலைவன் தலைவி திரைப்படமும் கூட எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுத்து வருகிறது.

தற்சமயம் இந்த படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்த படம் பல தயாரிப்பாளர்களிடம் சென்று பிறகு கைமாறிதான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வசம் வந்துள்ளது.

இதற்கு முன்பு இந்த திரைப்படம் மாஸ்டர் லியோ போன்ற திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமாரிடம் சென்றிருக்கிறது. ஆனால் அந்த படத்தை அவர் எடுக்கவில்லை.

பிறகு சக்தி பிலிம்ஸ் ஃபேக்டரி எங்கிருந்த நிறுவனமும் இந்த படத்தை வேண்டாம் என்று கூறியிருக்கிறது. அதேபோல ஜெயம் ரவியின் முன்னாள் மாமியாரிடமும் இந்த கதை சென்று இருக்கிறது. அப்பொழுது இந்த படத்தில் ஜெயம் ரவி தான் கதாநாயகனாகவும் நடிக்க நடிப்பதாக இருந்தது.

ஆனால் பட்ஜெட் ரீதியாக ஏற்பட்ட குழப்பத்தினால் அவரிடம் இருந்தும் விலகி விட்டார் பாண்டிராஜ். இப்படி பலரிடம் கைமாறிதான் கடைசியாக சத்யஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது.

அஜித் படத்தின் வசூலை தொட்ட தலைவன் தலைவி.. சிறப்பான சம்பவம் போலயே..!

தற்சமயம் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான திரைப்படம் தலைவன் தலைவி.

தலைவன் தலைவி திரைப்படம் ட்ரெய்லர் வெளியான சமயத்தில் இருந்தே அதிக வரவேற்பை பெற்றது. ஏனெனில் இயக்குனர் பாண்டிராஜை பொறுத்தவரை குடும்ப கதைகளை மிகச் சிறப்பாக படமாக்க கூடியவர்.

அப்படி அவர் எடுத்த படங்கள் பெரும்பாலும் வெற்றியை தான் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் தலைவன் தலைவி படமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குடும்பங்களுக்குள் நடக்கும் குடும்ப பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்தபடத்தின் கதைகளம் அமைந்து இருக்கிறது.

இந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சில படங்கள் மட்டும் தான் பெரிய வெற்றி படங்களாக அமைந்து இருக்கின்றன. இதற்கு முன்பு விஸ்வாசம் அவர்களுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

தற்சமயம் அந்த வரிசையில் தலைவன் தலைவி திரைப்படமும் வந்துள்ளது என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு தலைவன் தலைவி திரைப்படம் நல்ல வசூலை பெற்று இருக்கிறது.

37 வயதாகியும் திருமணமாகாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய நித்யா மேனன்..

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலுமே பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். ஒரு தனிப்பட்ட நடிப்பு திறனை கொண்டவர் என்று கூறலாம்.

பெரும்பாலும் நடிகைகள் என்றால் உடல் எடையை குறைவாக வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை உண்டு. ஆனால் அதை எல்லாம் நித்யா மேனன் கடைபிடிப்பது கிடையாது. இருந்தாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் என்பது கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.

அவர் நடிக்கும் திரைப்படங்கள் தமிழில் குறைவானதாக இருந்தாலும் கூட அவற்றில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் காரணத்தினால் மக்கள் மத்தியில் தனித்து தெரிந்து வருகிறார்.

தற்சமயம் அவரது நடிப்பில் தலைவன் தலைவி என்கிற திரைப்படம் கூட வெளியாகியிருந்தது. இந்த நிலையில் 37 வயது ஆகியும் கூட இன்னமும் நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நித்யா மேனன் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலே அவரை தோல்வி அடைந்தவராக பார்க்கிறார்கள் எல்லோருமே அவர்களது காதலை தேடிப் பிடித்து எளிதாக திருமணம் செய்து கொள்வதே கிடையாது.

எனக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் இல்லை என்றாலும் எனக்கு அதைவிட சந்தோசம்தான் என்று கூறியிருக்கிறார் நித்யா மேனன்.

போட்டாலே மூட்டைய.. பாடலிலேயே தெரிந்த கதை… விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி..!

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கி வரும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்ததாக பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் பிறகு இந்த படம் விஜய் சேதுபதிக்கு வந்தது. இந்த பாடத்தின் பாடலான போட்டாலே மூட்டையை என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அந்த பாடலை பார்த்தவரை படத்தின் கதை என்ன என்பதை ரசிகர்கள் ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது என்று கூறலாம்.

படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் கணவன் மனைவியாக இருக்கின்றனர். இருவரும் ஒரு உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். வில்லன் கதாபாத்திரம் என்று எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் பாண்டிராஜை பொறுத்தவரை அவர் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களை தான் எடுத்து வருகிறார் எனவே இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் உறவுகளின் சிக்கலை தான் திரைப்படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார்.