12 நாளில் பெரிய வசூல்.. தலைவன் தலைவி வசூல் நிலவரம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்த திரைப்படம் தான் தலைவன் தலைவி.பொதுவாக இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப படங்களாகவே எடுக்க கூடியவர்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. பொதுவாக குடும்ப கதைகளங்களை கொண்ட திரைப்படங்களை எடுத்தால் ஓடாது என ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை ஆக்‌ஷன் திரைப்படங்களை பார்க்கும் அதே சமயம் மக்கள் குடும்ப கதைகளையும் விரும்புகின்றனர் என்பதை தனது திரைப்படங்களின் வெற்றி மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்த நிலையில் தற்சமயம் வெளியான திரைப்படம்தான் தலைவன் தலைவி. ஏற்கனவே விஜய் சேதுபதி கருப்பன், சேதுபதி, தர்மதுரை மாதிரியான குடும்ப படங்களில் நடித்திருப்பதால் அவருக்கு இந்த படத்தில் கதாபாத்திரம் நன்றாகவே செட் ஆகிவிட்டது.

நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இதுவரை 75 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் 100 கோடிக்கு ஓடி வெற்றி கொடுக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதியும் 100 கோடி வசூல் நாயகர்களில் ஒருவராக மாறிவிடுவார்.