சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக இறங்கும் அடுத்த ஹீரோ நடிகர்.. யார் தெரியுமா?

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் தான் குட் நைட் திரைப்படம். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது அதிகமாக பேசப்பட்ட படமாக இருந்தது.

நடிகர் மணிகண்டனுக்கும் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது சாதாரண ஒரு குடும்ப கதையை எடுத்து அதை வைத்து ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுத்திருந்தார் விநாயக் சந்திரசேகரன்.

இதனை தொடர்ந்து அவருக்கு நிறைய நடிகர்களிடமிருந்து பட வாய்ப்புகள் என்பது வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவரிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.

இந்த நிலையில் சிவக்கார்த்திகேயனுக்காக ஒரு கதையை எழுதியிருந்தார் விநாயகர் சந்திரசேகரன். ஆனால் சிவகார்த்திகேயன் ஏற்கனவே இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு ஒரு திரைப்படம் நடித்து கொடுப்பதாக கூறியிருந்தார்.

ஏனெனில் டான் திரைப்படம் மூலமாக சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தார் அதற்குப் பிறகு சிபி சக்கரவர்த்திக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை ரஜினியை வைத்து ஒரு திரைப்படம் செய்வதாக இருந்தார்.

ஆனால் அந்த வாய்ப்பும் கைநழுவி சென்று விட்டது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் யாருக்கு முதலில் வாய்ப்பை கொடுப்பது என்கிற குழப்பத்தில் இருந்தர். இப்பொழுது விநாயகர் சந்திரசேகரனுக்கு முதலில் வாய்ப்பு அளிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version