Tag Archives: சிபி சக்ரவர்த்தி

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக இறங்கும் அடுத்த ஹீரோ நடிகர்.. யார் தெரியுமா?

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் தான் குட் நைட் திரைப்படம். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அப்பொழுது அதிகமாக பேசப்பட்ட படமாக இருந்தது.

நடிகர் மணிகண்டனுக்கும் இது ஒரு முக்கியமான படமாக அமைந்தது சாதாரண ஒரு குடும்ப கதையை எடுத்து அதை வைத்து ஒரு நல்ல வெற்றி படத்தை கொடுத்திருந்தார் விநாயக் சந்திரசேகரன்.

இதனை தொடர்ந்து அவருக்கு நிறைய நடிகர்களிடமிருந்து பட வாய்ப்புகள் என்பது வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் அவரிடம் வாய்ப்பு கேட்டிருந்தார்.

இந்த நிலையில் சிவக்கார்த்திகேயனுக்காக ஒரு கதையை எழுதியிருந்தார் விநாயகர் சந்திரசேகரன். ஆனால் சிவகார்த்திகேயன் ஏற்கனவே இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு ஒரு திரைப்படம் நடித்து கொடுப்பதாக கூறியிருந்தார்.

ஏனெனில் டான் திரைப்படம் மூலமாக சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனுக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருந்தார் அதற்குப் பிறகு சிபி சக்கரவர்த்திக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை ரஜினியை வைத்து ஒரு திரைப்படம் செய்வதாக இருந்தார்.

ஆனால் அந்த வாய்ப்பும் கைநழுவி சென்று விட்டது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் யாருக்கு முதலில் வாய்ப்பை கொடுப்பது என்கிற குழப்பத்தில் இருந்தர். இப்பொழுது விநாயகர் சந்திரசேகரனுக்கு முதலில் வாய்ப்பு அளிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினி கைவிட்டா என்ன நான் உதவுறேன்!.. இயக்குனருக்கு நன்றிக்கடன் செய்த சிவகார்த்திகேயன்!

டான், மாவீரன் என தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வரிசையாக வெற்றி படங்களாக அமைந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் வந்து தற்சமயம் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நபராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.

இறுதியாக நடித்த அயலான் திரைப்படம் மட்டும் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெற்று தரவில்லை என கூறலாம். இந்த நிலையில் அடுத்து தற்சமயம் சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் இயக்கத்தில் அமரன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்பு அவர் நடித்த ப்ரின்ஸ் மாதிரியான சில படங்கள் தொடர்ந்து வேற்று மொழி தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில் இனி அதிகப்பட்சம் தமிழ் தயாரிப்பாளர்கள் திரைப்படத்தில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம் சிவகார்த்திகேயன்.

கை கொடுக்கும் எஸ்.கே:

இதற்கு நடுவே அவரை வைத்து தனது முதல் படத்திலேயே பெரும் ஹிட் கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி. சிபி சக்ரவர்த்தி சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய டான் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை பெற்றுக்கொடுத்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ரஜினி தன்னை வைத்து படம் இயக்க வாய்ப்பு கொடுத்தார்.

sivakarthikeyan

அதற்கான திரைக்கதை வேலையெல்லாம் நடந்து வந்த நிலையில் அந்த கதை பிடிக்கவில்லை என நிராகரித்த ரஜினிகாந்த் இயக்குனர் தா.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் கமிட் ஆனார். இதற்கு பிறகு சிபி சக்ரவர்த்திக்கு எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அவருக்கு உதவும் வகையில் தன்னை வைத்து திரைப்படம் இயக்குமாறு கேட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிபி சக்ரவர்த்தி நல்ல வெற்றியை கொடுத்தால் கண்டிப்பாக அது அவரது சினிமா வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்த படத்திற்கு தயாராகும் ரஜினி..! – அடுத்த மாதம் பூஜை

தற்சமயம் ரஜினி நடித்து நெல்சன் இயக்கி கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில் கைதிகளை கண்காணிக்கும் ஜெயிலராக ரஜினி நடிக்கிறார் என கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் சில நாட்களுக்கு முன்புதான் துவங்கியது. 

இந்த படத்திற்கு பிறகு ரஜினி தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டான் திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு கொடுத்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு போய் கொண்டிருக்கும் போதே சிபி சக்ரவர்த்தி திரைப்படத்திற்கு பூசை போடும் வேலை நடந்து வருகிறதாம்.

அடுத்த மாதம் அந்த படத்திற்கான பூஜையை போட போவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து சினி வட்டாரத்தில் கூறும்போது எப்படியும் ஜெயிலர் படத்திற்கு ரஜினி 2 மாதம் கால் ஷீட் கொடுத்திருப்பார்.

அது நவம்பரில் முடிந்துவிடும். பிறகு டிசம்பரில் சிபி சக்ரவர்த்தி படத்தில் நடிப்பார் என கூறுகின்றனர். 

சிபி சக்ரவர்த்தி தனது முதல் படமான டான் படத்தையே 100 கோடி ஓட செய்தவர் என்பதால் அவர் மீது பெரிய நம்பிக்கையில் உள்ளாராம் ரஜினி.

சம்பளம்லாம் ஒன்னும் இல்லங்க – டான் இயக்குனருக்கு நடந்த சோகம்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து 100 கோடி வசூல் செய்த திரைப்படம் டான். இந்த படத்தை இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இயக்கினார்.

சினிமாவை பொறுத்தவரை அதிக உழைப்பை போட்டு மிகவும் குறைவான சம்பளம் பெறுபவர்களாக இயக்குனர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் டான் படத்தில் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு மிகவும் குறைவான அளவில் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

படத்தின் மொத்த பட்ஜெட்டில் முக்கால்வாசி தொகை சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக போய்விட்டதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 55 கோடி, அதில் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் மட்டும் 30 கோடி ரூபாயாம். படத்தின் கதாநாயகி ப்ரியங்கா மோகனுக்கு 50 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது.

ஆனால் இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு வெறும் 15 லட்சம் மட்டுமே சம்பளமாக தரப்பட்டதாம். ஒரு நிகழ்ச்சியில் சிபி சக்ரவர்த்தியை பேட்டி எடுக்கும்போது “டான் படம் எடுத்துவிட்டீர்கள். லைஃப் செட்டில்தான” என கேட்க, அதற்கு இயக்குனர் மிகவும் வெறுப்பாக “சம்பளத்துல ஒண்ணுமே கைல இல்லங்க” என கூறியுள்ளார்.

படத்திற்காக முழுதாக உழைப்பவர்கள் இயக்குனர்கள் என்கிற போதும் அவர்களுக்கு அதற்கான சம்பளம் கிடைக்கவில்லை என்பது தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது.