Tag Archives: don

2022 இல் வசூல் சாதனை செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனின் சம்பளம் துவங்கி, இயக்குனரின் சம்பளம் வரை அனைத்தும் படத்தின் வசூலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

எனவே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்பது திரையுலகில் முக்கியமான விஷயமாக உள்ளது.

இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் செய்த டாப் 10 திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.

10.விருமன்

2டி எண்டர்டெயின்மெண்ட் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி சங்கர் எடுத்திருந்தனர். இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படமாக  விருமன் உள்ளது.

09.லவ் டுடே

இந்த வருடம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபம் பார்த்த திரைப்படம் லவ் டுடே. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி அவரே நடித்திருந்த படமாக லவ் டுடே உள்ளது.

படத்தின் கதைப்படி இரு காதலர்கள் ஒரு நாளைக்கு இருவரது மொபைல் போன்களையும் மாற்றி கொள்கின்றனர். அதனால் அவர்களுக்குள் ஏற்படும் விரிசல்களை மையமாக வைத்து கதை செல்கிறது.

ஐந்து கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது.

08.வெந்து தணிந்தது காடு

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்தார். ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

மும்பைக்கு கூலி வேலைக்கு செல்லும் கதாநாயகன் எப்படி அங்கு கேங்ஸ்டர் ஆகிறான் என்பதாக கதை செல்கிறது. இந்த படம் 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்தது.

07.சர்தார்

தமிழில் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படமெடுக்கும் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.

சர்தார் என்னும் உளவாளி நாட்டிற்காக ஒரு உளவு வேலைக்கு செல்கிறார். அதில் தண்ணீர் தொடர்பான கார்பரேட் சதியை கண்டறியும் சர்தார் பிறகு அதை எப்படி தடுக்கிறார் என கதை செல்கிறது.

இந்த படம் 90 கோடி வசூல் சாதனை படைத்தது.

06.டான் மற்றும் மாநாடு

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தயாரான திரைப்படம் டான். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக கூறும் திரைப்படம் டான்.

மாநாடு திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவால் எடுக்கப்பட்ட முதல் தமிழ் டைம் லூப் திரைப்படமாகும். ஒரு மாநாட்டில் பெரிய மத கலவரம் நடக்க இருக்கும், அதை டைம் லூப் சக்தியை பயன்படுத்தி கதாநாயகன் எப்படி தடுக்கிறார் என்பதே கதை.

இந்த இரண்டு படங்களுமே 100 கோடி வசூல் செய்த படங்களாக உள்ளன.

05.திருச்சிற்றம்பலம்

நடிகர் தனுஷ் சிம்பிளான டெலிவரி பாயாக நடித்த படம் திருச்சிற்றம்பலம், படத்தில் ஒரு சண்டை காட்சிகள் கூட கிடையாது என்றாலும் எதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாய் படம் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

thiruchitrambalam poster

காதலிக்க ஒரு பெண்ணை தேடி வரும் கதாநாயகன், அதே சமயம் சிறு வயது முதல் அவருக்கு தோழியாக இருக்கும் கதாநாயகி, இவர்களின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் செல்கிறது.

இந்த படம் 90 முதல் 100 கோடி ஹிட் அடித்ததாக கூறப்படுகிறது.

04.வலிமை

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. பல காலங்களாக ரசிகர்கள் காத்திருப்புக்கு பிறகு இந்த படம் வெளியானது.

படத்தின் கதைப்படி ஊருக்குள் திருட்டை செய்வதற்கு ஒரு பைக்கர் கும்பல் கிளம்பியுள்ளது. அந்த கும்பலை பிடிப்பதற்கு ஐ.பி.எஸ் அதிகாரியான கதாநாயகன் முயற்சிப்பதே கதை.

இந்த படம் கிட்டத்தட்ட 163 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது.

03.பீஸ்ட்

தளபதி விஜய் நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட்.

தீவிரவாதிகளால் சூழப்படும் சூப்பர் மார்க்கெட், அங்கு மாட்டிக்கொண்டு இருப்பவர்களில் ராணுவ வீரரான கதாநாயகனும் மாட்டிக்கொள்கிறார். அவர் அனைவரையும் காப்பாற்றுவதே படக்கதை

மொத்தம் 227 கோடிக்கு ஓடியுள்ளது பீஸ்ட்

02. விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். கைதி படத்தின் அடுத்த பாகமாக விக்ரம் எடுக்கப்பட்டது.

போதை பொருள் கடத்து கும்பலை எதிர்த்து நிற்கும் ஏஜெண்ட் விக்ரம் மற்றும் அவரது அணியை வைத்து கதை செல்கிறது. கமல்ஹாசன் எதிர்பார்த்ததை விடவும் இந்த படம் நல்ல வசூல் தந்தது.

மொத்தமாக 420 கோடி வசூல் செய்தது விக்ரம்.

01.பொன்னியின் செல்வன்

இந்த வருடம் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன். ராஜ ராஜ சோழன் குறித்து கல்கி எழுதிய புனைவு நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

சோழர்களை வீழ்த்துவதற்கு நடக்கும் சூழ்ச்சி. அதனை கண்டறிந்து சோழர்களிடம் சொல்ல பயணப்படும் வந்தியதேவன். ஆகிய விஷயங்களை கொண்டு இந்த படம் செல்கிறது.

கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்.

க்ரிஞ்ச், ஓவர் ஆக்டிங்னு சொல்றவங்களை இப்படிதான் டீல் பண்ணுவேன் – சிவாங்கியின் பதில்

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் அறிமுகமானவர் சிவாங்கி.

பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அவரது தனிப்பட்ட குழந்தை பாணியிலான ரியாக்‌ஷன்களே மக்களை வெகுவாக கவர்ந்தது என கூறலாம்.

அதிகமாக 2கே கிட்ஸ் இவருக்கு ரசிகர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அடுத்து இவருக்கு டான் திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அடிக்கடி பலரும் சிவாங்கியை கலாய்ப்பது உண்டு. அவரது ரியாக்‌ஷன்கள் செயற்கை தனமாக உள்ளது. க்ரிஞ்சாக நடிக்கிறார் என்றெல்லாம் கூறுவதுண்டு. எனவே சமூக வலைத்தளங்களில் ஒருவர் சிவாங்கியிடம் “உங்களை க்ரிஞ்ச், ஓவர் ஆக்டிங் என கூறுபவர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என கேட்க அதற்கு சிவாங்கி ஒரு ரியாக்‌ஷனை பதிவிட்டுள்ளார்.”

டான் படத்த பார்த்தேன், ஆனா சிரிப்பே வரல – சிவகார்த்திகேயனை கலாய்த்த உதயநிதி

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நல்ல வசூல் சாதனை படைத்த திரைப்படம் டான். இந்த படத்தில் காலேஜ் ஸ்டூடண்டாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். 

எஸ்.ஜே சூர்யா, சிவாங்கி, பிரியங்கா மோகன் என பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். மேலும் 100 கோடி வசூல் சாதனை செய்தது இந்த திரைப்படம். இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்திதான் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்ட திரைப்படம் டான். ஆனால் ஒரு யூ ட்யூப் பேட்டியில் உதய் டான் படத்தை பற்றி கூறும்போது “நாங்கள்தான் டான் படத்தை வாங்கினோம். அதனால் படத்தை வெளியிடுவதற்கு முன்பே ஒருமுறை பார்க்கலாம் எனப் பார்த்தோம். எங்கயாவது நகைச்சுவை வரும். சிரிக்கலாம் என பார்த்தால் காமெடியே வரவில்லை” என வெளிப்படையாக கூறிவிட்டார் உதயநிதி.

இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். பலரும் இதுக்குறித்து உதயநிதியை விமர்சித்து வருகின்றனர்.

என் படம்னா பட்ஜெட் அதிகமா இருக்கணும் –  விஜய் இடத்துக்கு குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்?

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருக்கிறார். அடுத்து அடுத்து வெளியாகும் திரைப்படங்களும் அவருக்கு நல்ல வெற்றியை அளித்து வருகின்றன.

சமீபத்தில் சிவ கார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடித்து டான் திரைப்படம் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்தது டான் திரைப்படம்.

இதையடுத்து இனி பெரிய ஹீரோக்கள் போல அதிக பட்ஜெட் திரைப்படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளாராம். 

எனவே அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் பட்ஜெட் 50 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும் என கூறுகிறாராம்.

பொதுவாக விஜய், அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள்தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும். தற்சமயம் சிவக்கார்த்திகேயன் இவ்வாறு கூறுவதால் அவரும் கூட பெரிய ஹீரோக்கள் இடத்தை பிடிக்க நினைக்கிறாரா? என திரைத்துறையில் பேச்சு உள்ளது.

டான் 13 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? – மாஸ் காட்டும் எஸ்.கே..!

தமிழ் சினிமாவில் காமெடி கான்செப்ட்களை கொண்டும் கதாநாயகன் ஆக முடியும் என நிரூபித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் அவர் நடித்து வெளியான டான் திரைப்படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். அவருக்கு இது முதல் படமாகும்.

பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு செண்டிமெண்ட் வராது என பேசப்பட்டு வந்தது. அதற்கு சவால் விடும் விதமாக டான் திரைப்படத்தில் அதிக செண்டிமெண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி இன்னும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ளனர்.

நடிகர் எஸ்.ஜே சூர்யா இதில் பிரின்சிபலாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. 

ஏனெனில் ஏற்கனவே எஸ்.ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து இருந்தார். இந்த நிலையில் வெளியான டான் திரைப்படம் 12 நாள் முடிவில் 100 கோடி வசூலை எட்டியது.

தற்சமயம் 13 நாள் வரை மொத்தமாக 102 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது டான் திரைப்படம். 

வசூலில் வலிமையை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயனின் டான்


சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் டான். திரை துறையில் வந்த காலம் முதலே ரசிகர்களிடம் ஒவ்வொரு திரைப்படத்தின்போதும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் நடிகர் சிவகார்த்திகேயன்.


பொதுவாக திரைப்படங்களில் மக்கள் கதையை எதிர்ப்பார்ப்பதுண்டு. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் அதிகப்பட்சம் காமெடியை எதிர்ப்பார்த்தே மக்கள் செல்கின்றனர். ஆனால் தற்சமயம் நம்ம வீட்டு பிள்ளை, ஹீரோ போன்ற படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.


அந்த வரிசையில் டான் திரைப்படமும் கூட மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு செண்டிமெண்ட் வராது என பேசப்பட்டு வந்தது. அதற்கு சவால் விடும் விதமாக டான் திரைப்படத்தில் அதிக செண்டிமெண்ட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் நல்ல வசூலை கொடுத்த டான் திரைப்படம் வெளிநாட்டிலும் கூட நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இலண்டனில் இந்த வரும் அதிகமாக ஓடிய டாப் 3 படங்களில் முதல் இடத்தில் பீஸ்ட், இராண்டாம் இடத்தில் டான், மூன்றாம் இடத்தில் வலிமை உள்ளது.

விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன்..? – டாப் வசூலுக்கு வந்த டான்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளியான படம் டான். இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த வாரத்தில் வெளியானது. கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் காமெடி மற்றும் அப்பா செண்டிமெண்ட் காட்சிகளும் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் டான் நல்ல வசூலை நிகழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் கவனிக்கத்தக்க வசூலை டான் நிகழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகம் வசூலித்த படமாக முதல் இடத்தில் பீஸ்ட் உள்ளது. மொத்தமாக 1.38 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள அஜித்தின் வலிமை 410K டாலர்களை வசூலித்துள்ளது.

மூன்றாவது இடத்தை பிடித்துள்ள டான் 353K டாலர்களை வசூலித்துள்ளது. வரும் வார இறுதியில் இது மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மார்க்கெட்டில் விஜய், அஜித்துக்கு நிகரான இடத்தை சிவகார்த்திகேயனும் பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் இப்படி பண்ணிட்டிங்களே – கண்ணீர் விட்ட ரஜினி


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். தற்சமயம் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.


இந்த படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வந்தது. இந்த படத்தின் கதைப்படி சிவகார்த்திகேயன் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆவார். அவருடைய கண்டிப்பான அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார்.


கல்லூரி பிரின்ஸ்பலாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். பலரும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது ”இந்த படம் உங்களுக்கு பழைய கல்லூரி நியாபகங்களை நினைவுப்படுத்தும் திரைப்படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.


அதே போலவே இந்த படத்தில் எமோசனலான இடங்கள் பலவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர். இந்நிலையில் டான் படத்தை திரையரங்கில் பார்த்த நடிகர் ரஜினி அதன் கடைசி காட்சிகளை பார்க்கும்போது கண்ணீர் விட்டு அழுததாகவும், இறுதி 30 நிமிடங்கள் உணர்வு பூர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

5 நாள்ல அசால்ட்டான வசூல்.. சாதித்த “டான்”! – வசூல் நிலவரம் இதுதான்!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் டான்.

இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

சமூக கருத்துக்களுடன், காமெடியையும் கலந்து படத்தை கொண்டு போன விதம் மக்களுக்கு பிடித்திருக்கவே ஆரம்பம் முதலாக நல்ல விமர்சனத்தை டான் எதிர்கொண்டு வருகிறது.

முக்கியமாக குழந்தைகளுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. வழக்கம்போல சிவகார்த்திகேயன் ஒரு டீசண்டான வசூலை டான் படத்தில் கொடுத்துள்ளார்.

படம் வெளியாகி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை 5.75 கோடி ரூபாயும், செவ்வாய்கிழமை 4.50 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மொத்தமாக 5 நாட்களில் தமிழகத்தில் 41 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

டான் ரிலீஸ் – திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர்

சின்னத்திரை வழியாக வந்து வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.
மக்களை நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் பிறகு அதையே தனக்கான தனி திறமையாக மாற்றி நடிக்கும் கதைகளிலும் கூட தன்னை ஒரு காமெடி கதாநாயகனாக மாற்றிக்கொண்டு வெற்றி பெற்று வருகிறார்.


வரிசையாக வந்த நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் சொல்லும் படங்களாக அமைந்த நிலையில் டான் திரைப்படம் எப்படி இருக்கும் என்று பொதுவாக பேச்சு இருந்தது.


தற்சமயம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது டான் திரைப்படம். இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு இது முதல் படமாகும். இந்த திரைப்படத்திற்காக அவர் வெகுவாக உழைத்து உள்ளதாக சிவகார்த்திகேயன் டான் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திரையரங்கில் டான் திரைப்படத்தை காண சிபி சக்ரவர்த்தி சென்றுள்ளார்.

அங்கே அவரது பெயர் திரையில் வரும்போது அதை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர். இதை கண்ட சிபி சக்ரவர்த்தி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

தனது கனவு நினைவானது குறித்து பெருமகிழ்ச்சி கொண்ட சிபி சக்ரவர்த்தி, இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

குக்கு வித் கோமாளியை பரபரப்பாக்கிய டான் குழு


இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.


குக்கு வித் கோமாளி சீரியல் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு தொடராகும். எனவே பல திரைப்படங்களுக்கு ஒரு ப்ரோமோஷனாக அந்த திரைப்பட நடிகர்கள் குக் வித் கோமாளி ஷோவிற்கு வருவது வழக்கமாகிவிட்டது.


ஏற்கனவே ஹே சினாமிகா குழு இதே போலவே குக் வித் கோமாளியில் எண்ட்ரி கொடுத்த நிலையில் இன்றைய குக் வித் கோமாளி ஷோவில் டான் பட குழுவினர் குக் வித் கோமாளியில் எண்ட்ரி கொடுக்கின்றனர்.


டான் படத்தின் கதாநாயகனான சிவகார்த்திகேயன் மற்றும் ப்ரியங்கா மோகன் குக் வித் கோமாளியில் பங்கேற்றுள்ளனர். இதனால் இன்றைய குக் வித் கோமாளி ஷோவிற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.
மேலும் டான் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சிவாங்கி, முனிஸ்காந்த் மற்றும் சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கின்றனர்.