தமிழில் காதல் மற்றும் க்ரைம் திரைப்படங்களை எடுப்பதில் மிகப் பிரபலமானவர் இயக்குனர் கௌதம் மேனன். அவரது திரைப்படங்களில் எந்த அளவிற்கு காதல் ரொமான்ஸ் மாதிரியான விஷயங்கள் இருக்கின்றதோ அதே அளவிற்கு க்ரைம் ரத்தம் போன்றவையும் மிக அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.
கௌதம் மேனனிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டவர் வெற்றிமாறன். வெற்றிமாறன் காட்டும் மனிதர்களின் வாழ்க்கை வேறு விதமாக இருக்கும். ஆனால் கௌதம் மேன்ன் தற்சமயம் புது பாணியை கையாள இருக்கிறார்.
பாரதிராஜாவை போல கௌதம் மேனன் வெளியிலிருந்து கதைகளை வாங்கி படமாக்குவது என்று திட்டமிட்டு இருக்கிறார். ஏனெனில் எல்லா இயக்குனர்களுக்குமே கதை எழுதுவதற்காக வாய்ப்புகள் அமைவது இல்லை.
கௌதம் மேனன் முடிவு:
பாரதிராஜா நிறைய வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் கூட அவர் பெரும்பான்மையான கதைகளை வெளியில் இருந்து வாங்கி படமாக்குவதைதான் வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்சமயம் கௌதம் மேன்ன் அந்த ஒரு வழக்கத்தை கொண்டு வர இருக்கிறார்.
அந்த வகையில் வெற்றிமாறன் தற்சமயம் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை கௌதம் மேனன் படமாக்க போவதாக கூறப்படுகிறது. இருவருமே வெவ்வேறு விதமான படம் எடுக்கக் கூடியவர்கள் என்பதால் இந்த கூட்டணி எப்படி வேலை செய்ய போகிறது என்று தெரியவில்லை. ஆனால் வெளிவரும் படம் கண்டிப்பாக இதுவரை கௌதம் மேனன் இயக்கிய திரைப்படங்களில் இருந்து வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.