Tag Archives: pon vannan

உங்க திமீர் பேச்சு ரொம்ப வக்கிரமா இருக்கு!.. கடுப்பான அடுத்த நடிகர். அமீர் விஷயத்தில் க்ரைம் ரேட் ஏறிகிட்டேயிருக்கு!..

Ameer and Gnanavel raja Issue : கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த ஒரு பேட்டியானது மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தியின் நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் பருத்திவீரன்.

இந்த திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகும் ஆனால் அந்த திரைப்படத்தின் பொழுது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது இதனை அடுத்து அவர்கள் நிரந்தரமாக பிரிந்து விட்டனr.

இப்போது வரை அவர்கள் ஒன்று சேரவே இல்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும் பொழுது அமீரை மிகவும் தரகுறைவாக பேசி இருந்தார். அவருக்கு படம் எடுக்கவே தெரியாது என்கிற ரீதியில் அவர் அமீரை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவரை திருடர் என்றெல்லாம் இவர் பேசியிருந்தார்.

ameer

தயாரிப்பு செலவுகளை சரியாக கணக்கு காட்டவில்லை என்று அமீர் மீது பழி போட்டு இருந்தார். இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக குரல்கள் வர துவங்கின. நடிகர் சசிகுமார் இது குறித்து கூறும் பொழுது படத்தை எடுப்பதற்கான முழு தொகையையும் முதலில் ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை.

என்னிடம் கொஞ்சம் கடன் வாங்கித்தான் அமீர் படத்தையே முடித்தார். என்று கூறியிருந்தார் சசிகுமார். அதேபோலவே சமுத்திரகனியும் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் பொழுது கடைசியில் படப்பிடிப்பை முடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் அமீர். அதற்காக அவர் நிறைய இடங்களில் கடன் வாங்கினார். என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் பொன்வண்ணனும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அமீர் எவ்வளவு கஷ்டப்பட்டார் எவ்வளவு செலவு செய்தார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். எனவே உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல, உங்களது உடல் மொழியும் பேச்சுத் திமிரும் அந்த பேட்டியில் வக்கிரமாக இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

தங்கள் தயாரிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை போன்று பருத்தி வீரனையும் அதனுடைய படைப்பாளியையும் எடை போட்டு விட்டீர்களா என்று பேசி இருந்தார் பொன்வண்ணன். மேலும் இனியும் இந்த பிரச்சனையை பற்றி பேசுவதாக இருந்தால் அதை நேர்மையான முறையில் அணுகுங்கள் என்று கூறியிருக்கிறார் பொன்வண்ணன். இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்னும் சூடு பிடித்துள்ளது ஆனால் அதிகபட்சம் அமீருக்குதான் இந்த படம் குறித்து அதிக ஆதரவுகள் வந்துள்ளன.