Tag Archives: Sasikumar

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தால் கடன்காரங்க கிட்ட மாட்டிகிட்டேன்.. உண்மையை கூறிய சசிக்குமார்..!

நடிகர் சசிக்குமார் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இயக்குனராகவும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார். தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் சசிக்குமார் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடித்த திரைப்படம் தாரை தப்பட்டை.

இந்த திரைப்படத்தை சசிக்குமார்தான் தயாரித்தார். அந்த படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து நடந்த பிரச்சனையில் சசிக்குமாரின் உறவினரான அசோக் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து சினிமாவை விட்டு விலகி திரும்ப மதுரைக்கே சென்றுவிட்டார் சசிக்குமார். இப்போது வரை சசிக்குமார் சென்னையில் இருப்பது கிடையாது. படப்பிடிப்புக்கு மட்டுமே சென்னை வந்த வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் இப்போது இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான படங்களாக இருக்கின்றன.

அவர் சமீபத்தில் நடித்த நந்தன் திரைப்படம் வெகுவாக பேசப்பட்டது. அதற்கு பிறகு வந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 10 கோடிக்கு எடுக்கப்பட்டு 90 கோடி ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சசிக்க்குமார் கூறும்போது இந்த படம் ஹிட் கொடுத்ததால் எனது சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் பேசிய சசிக்குமார் கூறும்போது சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என கூறியதற்காக நண்பர்கள் எல்லாம் என்னை திட்டினார்கள். நீ என்ன காந்தியா? சினிமாவில் எல்லா நடிகர்களும் சம்பளத்தை உயர்த்தும் போது நீயும் உயர்த்த வேண்டியதுதானே என கேட்டனர்.

இது இல்லாமல் இன்னும் சிலருக்கு நான் வட்டி கொடுக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் எல்லாம் என்னிடம் வந்து படம் வெற்றியடைந்துவிட்டது. வட்டி காசை கொடுங்கள் என கேட்கிறார்கள். அந்த படம் வெற்றியடைந்தால் எனக்கா காசு வருகிறது தயாரிப்பாளருக்குதானே வருகிறது என கூறியுள்ளார் சசிக்குமார்.

 

 

மீண்டும் இலங்கை அகதியாக சசிக்குமார்.. வெளியான Freedom பட ட்ரைலர்..!

சசிக்குமார் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு என்பது கிடைக்க துவங்கியுள்ளது. முன்பு போல் இல்லாமல் அவரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இயக்குனராகதான் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிக்குமார். ஆனால் அவருக்கு நடிப்பதன் மீதும் ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் அவர் நடித்த நாடோடி, சுப்புரமணியப்புரம் மாதிரியான படங்களுக்கு நல்ல வரவேற்பும் கூட கிடைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இலங்கையில் அதிக பஞ்சத்தின் காரணமாக தமிழ்நாடு வரும் சசிக்குமாரின் குடும்பம் எப்படி பிழைக்கிறார்கள் என்பதாக கதை செல்லும்.

இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இப்போது அவரது நடிப்பில் அடுத்து வருகிற 10 ஆம் தேதி Freedom என்கிற திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

கதைப்படி ஒரு முக்கிய பிரமுகரின் இறப்புக்கு இலங்கை அகதிகள்தான் காரணம் என முடிவு செய்து அவர்களை கைது செய்கிறது போலீஸ். அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதாக கதை செல்கிறது.

4 மடங்கு லாபம்… டூரிஸ்ட் பேமிலி செய்த மொத்த வசூல்..!

சமீபத்தில் நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது.

அபிஷன் ஜீவிந்த் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வரும் ஒரு குடும்பத்தை அடிப்படையாக கொண்டு இதன் கதைக்களம் செல்லும்.

மிக குறைந்த பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் மொத்தமாக 91 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது டூரிஸ்ட் பேமிலி திரைப்படம்.

ரெட்ரோவும், டூரிஸ்ட் பேமிலியும் – 4 நாள் வசூல் நிலவரம்..!

சமீபத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மூன்று திரைப்படங்கள் மே 1 அன்று திரையரங்கிற்கு வந்தன. ஹிட் 3, டூரிஸ்ட் பேமிலி, ரெட்ரோ. இதில் ஹிட் 3 மட்டும் தெலுங்கு திரைப்படமாகும்.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ திரைப்படத்திற்கு ஏற்கனவே வரவேற்புகள் இருந்து வந்தன. சூர்யாவுக்கும் கூட இது ஒரு முக்கியமான படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இதற்கு நடுவே நடிகர் சசிக்குமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் மே 1 அன்று வெளியானது. இந்த திரைப்படத்தை 24 வயதே ஆன அபிஷன் ஜீவந்த் என்கிற இயக்குனர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் ரெட்ரோ திரைப்படம் முதல் நாளே 19 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டாம் நாளே வசூல் குறைந்தது. கடந்த நான்கு நாட்களில் மொத்தமாக 76.3 கோடி வசூல் செய்துள்ளது ரெட்ரோ.

டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்திற்கு ரெட்ரோவிற்கு கிடைத்த அளவிற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. எனவே முதல் நாளே 2 கோடிதான் வசூல் செய்தது. இதுவரை மொத்தமாக 12 கோடி வசூல் செய்துள்ளது டூரிஸ்ட் பேமிலி.

சிம்ரன் குறித்து நிருபர் கேட்ட எதிர்பாராத கேள்வி.. பதிலடி கொடுத்த சசிக்குமார்.!

சமீப காலங்களாகவே கதைகளை தேர்ந்தெடுத்துதான் அதில் நடித்து வருகிறார் நடிகர் சசிக்குமார். நடிகர் சசிக்குமார் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராகதான் அறிமுகமானார். அவரது இயக்கத்தில் வந்த திரைப்படங்களுக்கு ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது.

அதற்கு பிறகு கதாநாயகனாகவே நல்ல வரவேற்பை பெற்றார் சசிக்குமார். ஆரம்பத்தில் அவர் நடித்த சுப்ரமணியப்புரம், நாடோடிகள், சுந்தர பாண்டியன், போராளி மாதிரியான திரைப்படங்களுக்கு எல்லாம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து வரிசையாக கதாநாயகனாக நடித்து வந்தார் சசிக்குமார். இடையில் கொஞ்சம் ஆக்‌ஷன் படங்களாகவும் நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த அயோத்தி என்கிற திரைப்படம் தமிழ்நாட்டு அளவில் வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.

அதனை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் சசிக்குமார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. அதில் நிருபர் ஒருவர் கேட்கும்போது சிம்ரனுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என கேட்டார். அதற்கு பதிலளித்த சசிக்குமார் சந்தோஷமாகதான் இருந்தது. முதலில் கதை சொல்லும்போது அதில் சிம்ரன் நடிக்கிறார் என்பது முடிவு செய்யவில்லை.

பிறகு இயக்குனர் கூறியதற்கு பிறகுதான் சிம்ரனை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தோம். அவரும் சிறப்பாக நடித்திருந்தார் என பதில் கூறியுள்ளார் சசிக்குமார்.

நல்லதை சொன்னா கூட அப்படி பேசுறானுங்க.. 2கே கிட்ஸை மேடையிலேயே வச்சி செய்த விஜய் ஆண்டனி.!

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டும் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அப்படியாக நடித்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனி முக்கியமானவர்.

ஆரம்பத்தில் இசை அமைப்பாளராக நிறைய வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. அதற்கு பிறகு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார்.

அப்படியாக அவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு ஆன்லைன் மீடியாக்களில் அதிகமாக தோன்றி வருகிறார் விஜய் ஆண்டனி. முன்பெல்லாம் பேட்டிகளுக்கு வந்தால் விஜய் ஆண்டனி பெரிதாக பேசவே மாட்டார்.

ஆனால் இப்போதெல்லாம் பேட்டிகளுக்கு வந்தால் ட்ரெண்டாகும் அளவிற்கு ஜாலியாக அவர் பேசிவிடுவதுண்டு. அப்படியாக சமீபத்தில் சசிக்குமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு பேசியிருந்தார் நடிகர் விஜய் ஆண்டனி.

அதில் அவர் கூறும்போது இப்போதெல்லாம் நல்ல விஷயங்களை பேசினால் கூட க்ரிஞ்ச் என கூறிவிடுகின்றனர். ஆனால் சசிக்குமார் சார் முன்னாடி நடித்த அயோத்தி திரைப்படத்திலும் சரி. இப்போது நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் சரி நல்ல நல்ல விஷயங்களாக பேசி வருகிறார்.

அடுத்து அவர் நடிக்க இருக்கும் படங்கள் பற்றியும் எனக்கு தெரியும். அதிலும் கூட அவர் நல்ல கதைகளைதான் வைத்துள்ளார் என கூறியுள்ளார் விஜய் ஆண்டனி. க்ரிஞ்ச் என்கிற வார்த்தையே 2கே கிட்ஸ்கள்தான் இங்கு அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களை தாக்கும் விதமாகவே விஜய் ஆண்டனி இந்த விஷயத்தை பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

ஏன்யா உன் ஊர்ல நல்லவனே கிடையாதா?.. சசிக்குமார் படத்தில் சண்டை போட்ட நடிகர்!.

ஆடுகளம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஆடுகளம் நரேன். சிறு வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்பது இவரது ஆசையாக இருந்ததால் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்து வந்தார்.

ஆனால் மிக தாமதமாக இயக்குனர் வெற்றிமாறன் மூலமாகதான் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருக்கு ஏராளமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதிலும் முக்கியமாக கதாநாயகனின் தந்தையாக பல படங்களில் நடித்துள்ளார் ஆடுகளம் நரேன்.

அப்படியாக சசிக்குமார் நடித்த சுந்தரப்பாண்டியன் திரைப்படத்திலும் கதாநாயகனின் தந்தையாக நடித்திருப்பார். இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரனின் முதல் படமாக சுந்தரப்பாண்டியன் இருந்தது. அவர் ஆடுகளம் நரேனிடம் பேசும்போதே ஒரு பெரிய நடிகரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டோம்.

அவர் ஒப்புக்கொள்ளாததால்தான் உங்களிடம் வந்தோம் என கூறியுள்ளார். இதை கேட்டு கடுப்பான ஆடுகளம் நரேன் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதற்கு பிறகு அவரை சமாதானப்படுத்திதான் அந்த  திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

முதல் காட்சியே பெண் வீட்டுக்கு போய் பெண் கேட்கும் காட்சிதான் படமாக்கப்பட்டது. அந்த காட்சியை படித்த ஆடுகளம் நரேன் ஏன்யா அந்தாளு அவர் ஊர்ல பெரிய ஆளு. அவர்கிட்ட போய் நீ பொண்ண கொடுக்கலைனா பொண்ண தூக்கிடுவேன்னு சொன்னா அவங்க ஈகோவை டச் பண்ற மாதிரி இருக்காதா என கேட்டுள்ளார் நரேன்.

அதற்கு பதிலளித்த இயக்குனர் இல்ல சார் எங்கூர்ல அப்படிதான் பேசுவாங்க என கூற ஏன்யா உன் ஊர்ல நல்லவங்களே கிடையாதா என வம்பு செய்துள்ளார் ஆடுகளம் நரேன். இந்த தகவலை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார்.

ஹாட்ஸ்டார் செய்த சம்பவத்தால் சிக்கலில் மாட்டிய சூரி படம்!.. படம் வெளியிடுவதில் பிரச்சனை!.

Soori Garudan movie: கொரோனா காலகட்டம் துவங்கியது முதலே ஓ.டி.டி உரிமத்திற்கான மதிப்பு என்பது தமிழ் சினிமாவில் அதிகரித்துவிட்டது. ஒரு திரைப்படம் பெரிதாக திரையரங்கில் ஓடவில்லை என்றாலும் கூட ஓ.டி.டி விற்பனை மூலமாக அந்த திரைப்படத்திற்கு ஒரு நல்ல லாபத்தை பார்க்க முடியும்.

உதாரணமாக அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஓ.டி.டி மூலமாக ஒரு தொகை கிடைத்தது. ஆனால் ஓ.டி.டிக்கு திரைப்படங்களை விற்கும் தொகை என்பது போக போக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெரிய கதாநாயகர்களின் கதைகள் படங்கள் எல்லாம் 80 கோடி 100 கோடி என்று விலை வைக்கப்படுவதால் ஓ.டி.டி நிறுவனங்களே திணறுகின்றன.

Soori at Marudhu Press Meet

இந்த நிலையில் இனி அதிக விலைக்கு திரைப்படங்களை வாங்கக்கூடாது என்று ஓடிடி நிறுவனங்கள் முடிவு செய்து இருக்கின்றன. மேலும் வேற்று மொழியில் வந்த திரைப்படங்களை டப்பிங் செய்து அவர்கள் ஓ.டி.டியில் போட்டுக் கொள்வது எளிதாக இருப்பதால் அந்த முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

தேதி மாற்றமடைந்த கருடன் திரைப்படம்:

முக்கியமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் மலையாளத்தில் வந்த நிறைய திரைப்படங்களை தமிழ் டப்பிங் செய்து தனது ஓடிடி தளத்தில் போட்டு வருகிறது. இந்த நிலையில் சூரி சசிகுமார் இணைந்து நடிக்கும் கருடன் திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாக இருந்தது.

ஆனால் அந்த திரைப்படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. முதலில் இதை ஹாட்ஸ்டார் நிறுவனம்தான் வாங்க இருந்தது ஆனால் ஹாட்ஸ்டார் நிறுவனம் தற்சமயம் ஜியோ நிறுவனத்துடன் சேர இருப்பதால் தற்சமயம் வாங்கவிருக்கும் படங்களை நிறுத்தி வைத்திருக்கிறது ஹாட்ஸ்டார் நிறுவனம்.

கருடன் திரைப்படம் அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்டதால் ஓ.டி.டியில் அதை விற்காமல் வெளியிட முடியாது. எனவே ஓ.டி.டி நிறுவனங்களிடம் இதுக்குறித்து பேசி வருகின்றனர். அதற்கு பிறகுதான் கருடன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்கிட்ட மறைச்சிதான் சசி படம் பண்ணுனான்!.. என்ன காரணம்.. விளக்கிய இயக்குனர் அமீர்!..

Director Sasikumar : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழில் பெரும் இயக்குனராக தனது காலடித்தடத்தை பதித்தவர் இயக்குனர் அமீர். அமீர் முதல் முதலாக மௌனம் பேசியதே என்னும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

பாலாவிற்கும் சரி அமீருக்கும் சரி அவர்களது முதல் படம் துவங்கிய காலகட்டம் முதலே அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் சசிகுமார். மௌனம் பேசியதே படத்திலும் அவர் வேலை பார்த்தார். அதன் பிறகு அமீர் இயக்கிய ராம் திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்தார்.

அதன் பிறகு மூன்றாவது படமாக அமீர் பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கும்போது சசிகுமார் தனது சொந்த படத்திற்கான கதையை எழுத சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமுத்திரகனியை உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டார் அமீர்.

இந்த நிலையில்தான் சசிகுமார் சுப்பிரமணியபுரம் திரைப்படத்தின் கதையை எழுதினார். அந்தப் படத்தை முதலில் அமிர்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் பருத்திவீரன் படத்தில் நடந்த பிரச்சனை காரணமாக அந்த திரைப்படத்தை அமீரால் தயாரிக்க முடியவில்லை.

எனவே சசிக்குமாரே அந்த படத்தை தயாரிக்கிறேன் என்று அமீரிடம் கூறிவிட்டு சுப்பிரமணியபுரம் திரைப்படத்தை தயாரித்தார். படத்தை தயாரிக்கும் பொழுது அதில் சசிகுமார் நடிப்பதை அமீரிடம் கூறவே இல்லை. அதன் பிறகு படபிடிப்பு எல்லாம் முடிந்த பிறகுதான் அந்த படத்தில் தான் நடித்திருப்பதையே சசிகுமார் அமீரிடம் கூறினார்.

முதலில் இதை கேட்டு அமீர் கோபமடைந்தாலும் சுப்ரமணியம் திரைப்படத்தை பார்த்தபொழுது அமீருக்கே மிகவும் வியப்பாக இருந்தது சசிகுமார் இந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவர் என்பதை அப்போதுதான் அமீர் தெரிந்துக் கொண்டார் இந்த விஷயத்தை அமீரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

என் முதல் கதையை எடுத்து படமாக்கிட்டாங்க!.. விருப்பம் இல்லாமல்தான் சூர்யா படம் பண்ணுனேன்!.. மனம் திறந்த அமீர்!.

Director Ameer : தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தற்சமயம் பேசுபொருளாக இருந்து வருபவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்கள் தான் என்றாலும் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை கடந்த இரண்டு வாரங்களாக பெரும் பிரச்சனையாக சென்று கொண்டுள்ளது.

முதல் படம் எடுப்பதில் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அமீர். அதில் அவர் கூறும் பொழுது முதலில் காதல் படம் எடுப்பதற்கு எனக்கு எந்த ஒரு விருப்பமுமே கிடையாது. குற்றவாளி என்கிற ஒரு திரைப்படத்தின் கதையைதான் நான் எழுதி வைத்திருந்தேன்.

அதன் கதைப்படி மதுரையில் குற்றங்கள் எப்படி நடக்கின்றன ஒரு குற்றவாளி எப்படி உருவாகிறான் என்பதை சொல்லும் விதமாக அந்த கதையை எழுதினேன். அதில் ஒரு பாடல் கூட நான் வைக்கவில்லை. ஆனால் எந்த தயாரிப்பாளரும் அந்த கதையை ஒப்புக்கொள்ளவில்லை.

காதல் தொடர்பான கதையை சொன்னால் ஏற்றுக் கொள்கிறோம் என கூறியதால் எனது முதல் படத்தை காதல் படமாக அமைத்தேன். எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கூட அந்த படத்திற்கு அனைவரது மத்தியிலும் வரவேற்பு இருந்ததால் அதையே நான் படமாக்கினேன்.

பிறகு இரண்டாவதாக ராம் திரைப்படத்தை இயக்கினேன். ராம் படத்தை இயக்கும் பொழுதும் ஒரு 12 வயது சிறுவனாக தான் கதாநாயகனை வைக்க இருந்தேன். ஆனால் என்னுடைய உதவி இயக்குனர் சசிகுமார் அந்த மாதிரி வைத்தால் படம் ஓடாது என்று கூறியதால் ஜீவாவை கதாநாயகனாக வைத்தேன.

அதற்குப் பிறகுதான் சொந்த தயாரிப்பில் யாருடைய இடையூறும் இல்லாமல் ஒரு முழு படைப்பாக எனக்கு பிடித்த மாதிரி படத்தை எடுக்க வேண்டும் என்று பருத்தி வீரன் திரைப்படத்தை எடுத்தேன். என்று கூறியிருக்கிறார் மேலும் அவர் கூறும் பொழுது ஏன் குற்றவாளி படத்தை எடுக்கவில்லை என்பது குறித்தும் கூறியிருந்தார்.

அதாவது குற்றவாளி கதையின் மையக்கருத்தை எடுத்துக் கொண்டு ஏற்கனவே நாடோடிகள் சுப்பிரமணியபுரம் போன்ற திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. அதற்குப் பிறகு திரும்ப குற்றவாளி திரைப்படத்தை எடுப்பது சரியாக இருக்காது என்று நினைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

ஏன் உங்களது கதையை அவர்கள் படமாக்கினார்கள் என்று நீங்கள் கேட்கவில்லையா என்று அமீரிடம் கேட்கும் பொழுது இதை கதை திருட்டு என்று கூற முடியாது. அவர்கள் ஒட்டுமொத்தமாக கதையவே மாற்றி இருந்தார்கள் அதன் பின்புலம் மட்டும்தான் என்னுடைய கதையோடு சாயலாக இருந்தது என்று கூறி இருக்கிறார்.

யாருக்கிட்ட ப்ரோ உருட்டுறீங்க!.. ஞானவேல்ராஜாவின் மன்னிப்பு கடிதத்தால் கடுப்பான சசிக்குமார்!..

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் பிரச்சனையாக சென்று கொண்டிருப்பது இந்த அமீர் மற்றும் ஞானவேல்ராஜா பிரச்சனைதான். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வந்த பருத்திவீரன் திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.

இந்த படம் அவர்கள் அனைவருக்குமே முக்கியமான படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசும்போது இயக்குனர் அமீர் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார் ஞானவேல்ராஜா.

இதனையடுத்து அமீரை அப்படி பேசியது தவறு என குறிப்பிட்டு இயக்குனர் சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இயக்குனர் பாரதிராஜாவும் கூட இதுக்குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. இதுவரை நான் அதுக்குறித்து பேசியது இல்லை. ஆனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் என்மீது சுமத்திய பொய்யான குற்றசாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும்போது எனது வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.

இதற்கு பதிலளித்த இயக்குனர் சசிக்குமார், அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு என்ன? திட்டமிட்டு அவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன நியாயம் என கேள்விகளை எழுப்பியுள்ளார் சசிக்குமார்.

இதனையடுத்து இந்த சண்டை இப்போது முடிவதற்கு வாய்ப்பில்லை என பேசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அந்த தயாரிப்பாளர் சொன்னது பொய்… இயக்குனர் அமீர் மீது விழுந்த பழியை துடைத்த சசிகுமார்…!

Ameer, Sasikumar and Gnanavelraja: இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல்ராஜாவிற்கு இருக்கும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருத்திவீரன் படம் எடுத்த போது நடந்த பிரச்சனையில் ஞானவேல் ராஜா மீது இயக்குனர் அமீர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் கடந்தும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நடிகர் கார்த்திக்கின் 25ஆவது படம் மற்றும் ஜப்பான் படம் பிரமோசனில் கார்த்திக்கை இயக்கிய அனைத்து இயக்குனர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது ஆனால் இயக்குனர் அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

அதற்கான காரணம் பருத்திவீரன் படப்பிரச்சனைதான் என்பதை இயக்குனர் அமீர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் மாறி மாறி தங்கள் பக்கம் இருக்கும் வாதத்தை மீடியாவில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கிடையேயான பிரச்சனையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவக்குமார் சம்பந்தப்பட்டள்ளதாக இயக்குனர் அமீர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஞானவேல்ராஜாவும் தன் பங்கிற்கு அமீர் பொய்கணக்கு காண்பித்து பணம் பெற்றதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதற்கிடையே இயக்குனரும், நடிகருமான சசிக்குமார் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு ஞானவேல் ராஜாவால் தான் பாதியில் நின்றது, அதன்பிறகு நான் தான் அமீர் அண்ணனுக்கு பணம் கொடுத்து இப்படத்தை முழுமையாக முடிக்க உதவி செய்தேன். ஞானவேல் ராஜா அமீர் பற்றி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் மாறி மாறி எதிர்தரப்பு தவறை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க இந்த பிரச்சனைக்கான முடிவு நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.