நடிகர் சசிக்குமார் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இயக்குனராகவும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார். தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் சசிக்குமார் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடித்த திரைப்படம் தாரை தப்பட்டை.
இந்த திரைப்படத்தை சசிக்குமார்தான் தயாரித்தார். அந்த படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து நடந்த பிரச்சனையில் சசிக்குமாரின் உறவினரான அசோக் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதனையடுத்து சினிமாவை விட்டு விலகி திரும்ப மதுரைக்கே சென்றுவிட்டார் சசிக்குமார். இப்போது வரை சசிக்குமார் சென்னையில் இருப்பது கிடையாது. படப்பிடிப்புக்கு மட்டுமே சென்னை வந்த வண்ணம் இருக்கிறார். இந்த நிலையில் இப்போது இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வித்தியாசமான படங்களாக இருக்கின்றன.
அவர் சமீபத்தில் நடித்த நந்தன் திரைப்படம் வெகுவாக பேசப்பட்டது. அதற்கு பிறகு வந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 10 கோடிக்கு எடுக்கப்பட்டு 90 கோடி ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சசிக்க்குமார் கூறும்போது இந்த படம் ஹிட் கொடுத்ததால் எனது சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் பேசிய சசிக்குமார் கூறும்போது சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என கூறியதற்காக நண்பர்கள் எல்லாம் என்னை திட்டினார்கள். நீ என்ன காந்தியா? சினிமாவில் எல்லா நடிகர்களும் சம்பளத்தை உயர்த்தும் போது நீயும் உயர்த்த வேண்டியதுதானே என கேட்டனர்.
இது இல்லாமல் இன்னும் சிலருக்கு நான் வட்டி கொடுக்க வேண்டி இருக்கிறது. அவர்கள் எல்லாம் என்னிடம் வந்து படம் வெற்றியடைந்துவிட்டது. வட்டி காசை கொடுங்கள் என கேட்கிறார்கள். அந்த படம் வெற்றியடைந்தால் எனக்கா காசு வருகிறது தயாரிப்பாளருக்குதானே வருகிறது என கூறியுள்ளார் சசிக்குமார்.