Tag Archives: இன்றைய செய்திகள்

ஜெய்பீம் மாதிரி கதை அமைப்பில் களம் இறங்கிய பருத்திவீரன் சரவணன்…  சட்டமும் நீதியும் ட்ரைலர்..!

தமிழில் அஜித் விஜய் காலகட்டங்களில் இருந்து கதாநாயகனாக நடித்து வந்தவர் நடிகர் சரவணன்.

ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது. கமர்சியல் திரைப்படங்களை காட்டிலும் குடும்ப திரைப்படங்கள் மீது அவர் அதிக ஈடுபாடு காட்டியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரவணன் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். சித்தப்பு என்கிற அவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டது. அதனை தொடர்ந்து நிறைய வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் சரவணன்.

இந்த நிலையில் தற்சமயம் அவர் நடித்து வரும் வெப் சீரிஸ் ஒன்று அதிக வரவேற்பு பெற துவங்கி இருக்கிறது. சட்டமும் நீதியும் என்கிற ஜீ5 வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் சரவணன்.

இந்த வெப் சீரிஸை பாலாஜி செல்வராஜ் என்பவர் இயக்குகிறார். நீதிமன்றத்தில் சின்ன வேலைகளை பார்த்து வரும் ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார் சரவணன். இந்த நிலையில் ஒரு நபர் தீக்குளித்து இறந்து விடவே அந்த வழக்கை கையில் எடுக்கிறார் சரவணன்.

அதில் அவர் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பதாக கதை செல்கிறது ஏற்கனவே ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரும் கிரிமினல் ஜஸ்டிஸ் என்கிற தொடருக்கு இணையான ஒரு தொடராக இது இருக்கிறது. எப்படியும் இது சரவணனுக்கு வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கொடுமையை நீங்கதான் கேட்கணும்.. விஜய்க்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்த இளைஞன்..!

புதுச்சேரியில் உள்ள குயவர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விக்ரம். இவர் அந்த பகுதியிலேயே உள்ள இறைச்சி கடையில் பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய் மீது அதிக பிரியம் கொண்டவர் விக்ரம்.

எனவே அவரது கட்சியில் தொண்டராக இருந்துள்ளார். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு மினி டெம்போ ஒன்று சொந்தமாக வாங்கி தொழில் செய்யலாம் என கந்து வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் அவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக அவரால் வட்டியை கட்ட முடியவில்லை. இதனையடுத்து விரக்தியடைந்த விக்ரம் தற்கொலை செய்துகொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது, ”கந்து வட்டி தொல்லையால் மனம் உடைந்துதான் தற்கொலை செய்து கொள்கிறேன். விஜய் அண்ணா இனி வரும் ஆட்சி உங்களுடையதுதான்.

உங்கள் ஆட்சியில் கந்துவட்டிக்கு விடவே அனைவரும் பயப்பட வேண்டும். என் குழந்தைகள் மற்றும் மனைவியின் படிப்பு மற்றும் வாழ்க்கைக்கு உதவுங்கள் அண்ணா. எனது மகள் ஏஞ்சல் நன்றாக படிப்பாள். அவளை படிக்க வையுங்க அண்ணா என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியளித்த நிலையில் விஜய் இதற்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

என் உடையை பத்தி ஏன் கேக்குறீங்க..! பத்திரிக்கையாளர் கேள்வியால் கடுப்பான தொகுப்பாளினி..!

முன்பெல்லாம் தமிழ் சினிமா பிரபலங்கள்தான் சர்ச்சையாக ஏதாவது பேசி அது மக்கள் மத்தியில் பிரபலமாகும். ஆனால் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு பத்திர்க்கையாளர்களே அந்த வேலைகளை செய்கின்றனர்.

ஏனெனில் முக்கிய பத்திரிக்கைகள் அனைத்துமே யூ ட்யூப் மாதிரியான சமூக வலைத்தளங்களிலும் சேனல் வைத்துள்ளன. இந்த சேனலில் பதிவேற்றும் வீடியோக்களுக்கு சுவாரஸ்யமான டைட்டில் வைக்க வேண்டும் என்பதற்காகவே சர்ச்சையான கேள்விகளை கேட்கின்றனர்.

அங்கு சர்ச்சையாக எதுவும் நடக்காவிட்டாலும் கூட அவர்கள் அதை கேட்கிறார்கள். சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்காக நடந்த விழாவில் இப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அம்பி என்கிற திரைப்படத்திற்கான ப்ரெஸ் மீட் சமீபத்தில் நடந்தது.

அதில் தொகுப்பாளினியாக பேசிய பெண் திரைப்படம் குறித்து பேசியதற்கு நடுவே வெயில் காலத்தில் உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் ஆடையை குறிப்பிட்ட ஒரு பத்திர்க்கையாளர் நீங்கள் அணிந்திருக்கும் ஆடை கூட வெயில் காலத்திற்கு ஏற்ற ஆடைதான் போல என கேட்டிருந்தார். அந்த கேள்வியின் அர்த்தம் முதலில் தொகுப்பாளினிக்கு புரியவில்லை.

ஆனாலும் அவர் இந்த கேள்விக்கு பதிலளிக்க எனக்கு விருப்பம் இல்லை என கூறிவிட்டார். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் ஏன் இப்போதெல்லாம் இப்படி அத்துமீறி கேள்வி கேட்கின்றனர் என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

சிம் பயன்பாட்டில் புது கட்டுபாடு.. எஸ்.எம்.எஸ் மற்றும் கால்களுக்கு லிமிட் செய்த அரசு..!

சிம் நிறுவனங்கள் இந்தியாவில் தொடர்ந்து ரீச்சார்ச் விலைகளை மாற்றி அமைத்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் இவற்றின் திட்டங்கள் அனைத்துமே ட்ராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு கீழ்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் பயனாளர்களுக்கு உதவும் வகையில் தொடர்ந்து ட்ராய் விதிமுறைகளை வகுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் துவங்கியது முதலே அதிரடி விதிமுறைகளை விதித்து வருகிறது ட்ராய். அந்த வகையில் ஜனவரியிலேயே ட்ராய் இணையம் இல்லாத கால் வசதி மட்டும் கொண்ட டாரிஃப் ப்ளான்களை கொண்டு வர வேண்டும் என பகீரங்கமாக அறிவித்தது.

 

அதன்படி அனைத்து சிம் நிறுவனங்களும் கால் பேசுவதற்கு மட்டும் உரிய ப்ளானை அறிவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக ப்ரோமோஷன் கால்களுக்கு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது ட்ராய். அதன்படி ப்ரோமோஷன் கால்கள் மற்றும் எஸ்.எம்.எஸ்களுக்கு நிறுவனங்கள் இனி பத்து இலக்க மொபைல் எண்களை பயன்படுத்த முடியாது.

10க்கும் குறைவான இலக்கங்களை கொண்ட எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ப்ரோமோஷன் மற்றும் விளம்பர கால்களை பயனர்கள் எளிதாக அடையாளம் காண முடியும். அப்படியான கால்களை அவர்கள் எளிதாக தவிர்க்கவும் முடியும்.

இந்த நிலையில் ட்ராயின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்புகள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த மாதிரி கதை இருக்குறதால நடிகைகள் நடிக்க ஒத்துக்கல.. இயக்குனர் கொடுத்த சர்ச்சை பேட்டி..!

புது புது கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருந்தாலும் அதில் ஒரு சில திரைப்படங்கள் தான் வெற்றியை பெறுகின்றன.

கடந்த 2024 ஆம் ஆண்டு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியானது. அவற்றில் 18 திரைப்படங்கள்தான் நல்ல வெற்றியை கொடுத்தன. மேலும் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்ற திரைப்படங்கள் என்று பார்த்தால் 50 திரைப்படங்கள் கூட அதில் இல்லை.

இப்படித்தான் தற்சமயம் தமிழ் சினிமாவின் நிலை இருந்து வருகிறது நிறைய இயக்குனர்கள் நிறைய திரைப்படங்களை இயக்குகின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் சில திரைப்படங்கள் மட்டுமே கவனம் ஈர்க்கின்றன.

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் அவற்றின் கதை நன்றாக இருக்கும். பட்சத்தில் அவற்றிற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. போன வருடம் வெளியான லப்பர் பந்து மாதிரியான திரைப்படங்கள் அப்படித்தான் வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் எக்ஸ்ட்ரீம் என்கிற ஒரு திரைப்படம் தற்சமயம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் குறித்து படத்தின் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா பேசும் பொழுது சில சர்ச்சைக்குரிய விஷயங்களை கூறியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது இந்த திரைப்படத்தை இயக்கும்போது இதில் நடிப்பதற்கு நடிகைகளே கிடைக்கவில்லை. ஏனெனில் நடிகைகள் எல்லாம் அவர்களது ஆடை சுதந்திரத்திற்கு எதிரான திரைப்படம் இது என்று நினைத்தனர். எனவே இந்த படத்திற்கு நடிகைகள் கிடைப்பது சிரமமான விஷயமாக ஆகிவிட்டது என்று கூறி இருக்கிறார் இயக்குனர்.

கேன்சரால் இனி உயிர் போகாது..அனைவருக்கும் ஊசி இலவசம்.. மிரள வைத்த ரஷ்யா..!

தொடர்ந்து மனிதர்களுக்கு எதிராக உருவாகும் உயிர் கொல்லி நோய்களை சமாளிப்பதன் மூலமாகதான் மனித இனம் தொடர்ந்து பெருகி வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு தொற்று நோய்க்கும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து நாம் பிறக்கும் போதே நமக்கு அதை செலுத்திவிடுகின்றனர். அதன் மூலமாக அந்த நோய் நம் மீது பரவாத அளவிற்கு உடலை மாற்றுகிறது தடுப்பூசி.

இதற்கு முன்பு மனிதர்களை அதிகமாக இறப்புக்கு உள்ளாக்கிய காலரா, அம்மை நோய் போன்ற நோய்களை எல்லாம் இப்படித்தான் சரி செய்தனர் ஆனாலும் நூற்றாண்டு காலமாக மனிதர்களால் சரி செய்ய முடியாத பிரச்சனையாக இருப்பது இந்த புற்றுநோய்.

புற்றுநோய்க்கு மருந்து:

புற்றுநோய் வந்து விட்டது என்றாலே அவர் சீக்கிரத்தில் இறந்து விடுவார் என்பதுதான் இப்போதைய நிலை ஆக இருக்கிறது. அதற்கான தடுப்பூசிகள் எல்லாம் இருக்கிறது என்றாலும் அவை முழுதாக புற்றுநோயை தடுக்கக்கூடியது கிடையாது.

நமது வாழ்நாளை கொஞ்சமாக அது நீட்டிக்கும் அவ்வளவுதான் இப்படி இருக்கும் நிலையில் உலகம் முழுவதும் புற்றுநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கான தடுப்பூசியை கண்டறிவது குறித்த ஆய்வுகள் சென்று கொண்டிருந்தன.

இந்த நிலையில் ரஷ்யாவின் அதிபராக புதின் ஒரு விழாவில் பேசும்பொழுது புற்றுநோய்க்கான தடுப்பூசியை பொருத்தவரை நாங்கள் வெற்றியை நெருங்கி விட்டோம். இன்னும் சில நாட்களில் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறி இருக்கிறார்.

மேலும் அதை இலவசமாக வழங்க ரஷ்யா அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது இது மருத்துவத் துறையில் கண்டிப்பாக மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அடுத்து வெற்றி இயக்குனருடன் இணையும் சிம்பு.. செம கூட்டணியாச்சே..!

நடிகர் சிம்பு தற்சமயம் நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்பெல்லாம் சிம்பு என்றாலே தமிழ் சினிமாவில் அவரை குறித்து கெட்ட பெயர்தான் நிறைய இருந்தது. குறித்த சமயத்தில் படப்பிடிப்புக்கு வர மாட்டார் சிம்பு என்கிற நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் இப்போது மிகவும் சின்சியராக நடிப்பில் இறங்கியுள்ளார் சிம்பு. குறித்த நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வருவது, படத்துக்காக உடல் எடையை அதிகரிப்பது, குறைப்பது போன்ற விஷயங்களை கூட செய்து வருகிறார் சிம்பு.

தற்சமயம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தோடு சேர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் திரைப்படத்திலும் சிம்பு நடித்து வருகிறார்.

நடிகர் சிம்பு அடுத்த படம்:

இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்து பார்க்கிங் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு.

ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் வந்த பார்க்கிங் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தே அவருக்கு சிம்பு இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சிம்பு இனி கதைகளின் மீது ஈடுபாடு காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவை மிஞ்சிய காதல் கதை.. வீடு கட்டி துரத்திய உறவினர்கள்.. ஆர்.ஜே பாலாஜிக்கு நடந்த சம்பவம்.!

சாதாரணமாக வானொலியில் வேலை பார்த்து அதன் மூலமாக பிரபலமடைந்து பிறகு சினிமாவிற்கு வந்து இப்பொழுது பெரிய நடிகராக மாறியிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜே பாலாஜியை பொறுத்தவரை மற்ற சினிமா நடிகர்களை போல சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்கிற கனவில் சினிமாவிற்கு வந்தவர் கிடையாது. அவருக்கு முதலில் தமிழில் காமெடியனாகதான் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அதனை பயன்படுத்திக்கொண்டு உள்ளே வந்த ஆர்.ஜே பாலாஜி காமெடியனாக திரைப்படங்களில் நடிப்பதை விட காமெடி கதாநாயகனாக நடிப்பது அதிக வரவேற்பு கொடுக்கும் என்று நினைத்தார். அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி காமெடி கதாநாயகனாக மாறினார்.

தொடர்ந்து அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்தனர். இப்பொழுது ஒரு சக்சஸ்ஃபுல் கதாநாயகனாக இருக்கும். ஆர்.ஜே பாலாஜி அடுத்தது திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனக்கு நடந்த காதல் கதையை அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

rj balaji

ஆர்.ஜே பாலாஜியின் காதல் கதை:

ஆர்.ஜே பாலாஜி கல்லூரியில் படித்த காலத்திலேயே அவரது வகுப்பில் படிக்கும் இன்னொரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் சில காலங்களிலேயே இந்த விஷயம் பெண் வீட்டாரருக்கு தெரிந்து விட்டது அதனை தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டனர்.

அதன் பிறகு ஆர்.ஜே பாலாஜி படிப்புக்காக கோயம்புத்தூர் சென்று விட்டார் சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று அவருடைய காதலி போன் செய்து நான் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். ஆர்.ஜே பாலாஜி அங்கே இவர்கள் சென்ற இடமெல்லாம் பெண்ணின் வீட்டார் தொடர்ந்து துரத்தி வந்தனர்.

அந்த பெண் அவருடைய தந்தை குறித்து கூறும்பொழுது எனது தந்தை மிகவும் மோசமானவர் நம்மை கண்டுபிடித்துவிட்டால் கொன்றுவிடுவார் என்றெல்லாம் பேசியிருக்கிறார் கடைசியில் அவர்களை சந்தித்த பொழுது அவர்கள் மிக அமைதியாக பேசி இருக்கின்றனர். அந்த பெண்தான் அவரது காதல் மனைவி. இந்த நிகழ்வை ஆர்.ஜே பாலாஜி அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

ஒரு வழியாக ஓ.டி.டிக்கு வந்த லக்கி பாஸ்கர்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் பெரிதாக விளம்பரமே இல்லாவிட்டாலும் கூட நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லக்கி பாஸ்கர்.

லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்தார். இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே அதிக வரவேற்பை பெற தொடங்கியது. அதனை தொடர்ந்து எல்லா திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆனதை அடுத்து திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

அமரன் திரைப்படம் வெளியான அதே சமயத்தில் வெளியானாலும் கூட லக்கி பாஸ்கர் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டது.

லக்கி பாஸ்கர்:

lucky bhaskar

இந்த நிலையில் இந்த திரைப்படம் பண மோசடி சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். கிட்டத்தட்ட ஒரு நெகட்டிவ்வான கதாபாத்திரம் தான் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் கூட படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்த நிலையில் திரையரங்குகளில் இந்த திரைப்படத்தை தவறவிட்ட ரசிகர்கள் பலரும் இப்பொழுது இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் எங்கள் திரைப்படத்தை வாங்கி இருக்கிறது. வருகிற நவம்பர் 30ஆம் தேதி இந்த திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து ரசிகர்கள் இதற்காக காத்திருக்கின்றனர்.

ஜிவி பிரகாஷை அவமானப்படுத்திய அனிரூத்?.. திட்டமிட்டு செய்யப்பட்டதா?.

தமிழில் பெரிய ஹீரோக்கள் திரைப்படம் என்றாலே அதற்கு இசையமைக்கும் இசையமைப்பாளராக அனிருத் மாறி இருக்கிறார் பெரும்பாலும் இப்பொழுது மற்ற இசையமைப்பாளர்களுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

அதற்கு முக்கிய காரணம் அனிருத் இசையமைத்தார். கண்டிப்பாக அந்த திரைப்படத்தில் இரண்டிலிருந்து மூன்று பாடல்கள் பெரிய ஹிட் கொடுத்துவிடும். அந்த பாடல்களை படத்திற்கு பெரிய விளம்பரத்தை பெற்று கொடுத்துவிடும்.

உதாரணத்திற்கு வேட்டையன் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதுவே அந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்தது. சொல்ல போனால் வேட்டையன் திரைப்படத்திற்கு பெரிதாக விளம்பரம் கூட அதுவரை செய்யவில்லை.

அனிரூத் செய்த காரியம்:

sivakarthikeyan

இந்த மாதிரியான காரணங்களால் அனிருத் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனாலும் அனிருத்துக்கு போட்டி போடும் அளவிற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாசும் தொடர்ந்து வெற்றி பாடல்களை கொடுத்து வருகிறார்.

முக்கியமாக மெலோடி பாடல்களில் ஜிவி பிரகாஷ் தொடர்ந்து அனிருத்தை விடவுமே சிறப்பாக கொடுத்து வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி இருப்பதாக கூறப்பட்டது. அது உண்மை என்கிற வகையில் அனிருத் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்தான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் தற்சமயம் நல்ல வெற்றியை பெற்று வருகிறது.

இதிலும் இந்த படத்திலும் ஒரு காதல் பாடல் வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பட குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து அனிருத் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் படத்தில் பணிபுரிந்த பலரது பெயரையும் குறிப்பிட்ட அனிருத், ஜிவி பிரகாஷின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.

எனவே வெளிப்படையாகவே இவர்கள் இருவருக்கும் இடையே போட்டியிருப்பது தெரிகிறது என்று ரசிகர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த மோசடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. ரசிகர்கள் நம்ப வேண்டாம்… பகீரங்கமாக அறிவித்த நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் நடிப்பின் மீது மட்டுமின்றி மற்ற துறைகளின் மீதும் அதிக ஆர்வம் காட்டி வரும் ஒரு நபராக நடிகர் அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் நடிகர் என்றாலே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருவதுண்டு.

ஆனால் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீதும் ஆர்வம் செலுத்தி வருவதால் அஜித்துக்கான ரசிகர்கள் என்பது எப்பொழுதுமே அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்கள் தன்னால் எந்த ஒரு நஷ்டத்தையும் அடையக்கூடாது என்பதற்காகவே அஜித் தனக்கு என ரசிகர் மன்றம் வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

பதில் கொடுத்த அஜித்:

அப்படி இருக்கும் பொழுது அஜித்தின் பெயரில் ஒரு புது வெப்சைட் ஒன்று தற்சமயம் உருவாகி இருக்கிறது. அந்த வெப்சைட் அஜித் உடையது என்றும் வதந்திகள் பரவி வந்தன.

ajith

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அஜித் தரப்பிலிருந்து பதில் கொடுத்திருக்கின்றனர். அதில் எந்த ஒரு இணையதளத்தையும் நாங்கள் உருவாக்கவில்லை.

அப்படி அஜித் உருவாக்கினார் என்றால் எங்களது அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து அது குறித்த செய்திகள் வரும். இப்போது உள்ள இந்த தளத்துக்கும் அஜித்துக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்று அவர்கள் அறிவித்து இருக்கின்றனர்.

அஜித் ரசிகர்கள் இதன் மூலமாக மோசடிக்கு இந்த வலைத்தளம் உள்ளாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் முன்கூட்டியே அஜித் தரப்பிலிருந்து இந்த பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.கேவுக்கு டஃப் கொடுக்கும் போல இருக்கே.. லக்கி பாஸ்கர் பட விமர்சனம்.!

இன்று தீபாவளியை முன்னிட்டு நிறைய திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. தமிழில் அமரன், ப்ளடி பெக்கர், ப்ரதர் போன்ற திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம் மலையாளத்தில் பிரபல நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் என்கிற திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகமாக திரையரங்குகள் கிடைக்கவில்லை.

ஆனால் அதே சமயம் இந்த படம் முதல் காட்சிகளிலேயே அதிக வரவேற்பை பெற துவங்கியுள்ளது.

படத்தின் கதை:

லக்கி பாஸ்கர் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படத்தில் துல்கர் சல்மான் ஒரு நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த நபராக இருக்கிறார். வங்கியில் அவர் 6000 ரூபாய் சம்பளத்திற்கு பணிப்புரிந்து வருகிறார். ஆனால் பொருளாதார ரீதியான தேவை என்பது துல்கருக்கு அதிகமாகவே இருக்கிறது.

வருகிற வருமானம் அவருக்கு குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை. இந்த நிலையில்தான் ராம்கியிடம் இவருக்கு பழக்கம் கிடைக்கிறது. ராம்கி தவறான வழியில் பணத்தை முதலீடு செய்து பணம் சம்பாதிப்பவராக இருக்கிறார்.

அதற்கு பணத்தை கொடுத்து துல்கர் உதவுகிறார். வார இறுதியில் வெள்ளி கிழமையில் வங்கி மூடும்போது அதில் இருந்து பணத்தை எடுத்து ராம்கியிடம் கொடுத்து விடுவார் துல்கர். அதற்கு பிறகு ராம்கி இரு நாட்களில் அதன் மூலமாக பணம் ஈட்டி விடுவார்.

பிறகு திங்கள் காலையில் மீண்டும் அந்த பணத்தை வைத்துவிடுவார் துல்கர் சல்மான். கதை 1985 களில் நடப்பதால் அப்போது சிசிடிவி கேமரா கூட கிடையாது. இதன் மூலமாக பணக்காரர் ஆகிறார் துல்கர். ஆனால் பணம் அவர் குணத்தை மாற்றுகிறது.

அதனை தொடர்ந்து என்னவெல்லாம் நடக்கிறது என்பதாக படத்தின் கதை செல்கிறது. இந்த படத்தின் கதை சதுரங்க வேட்டை பாணியில் அமைந்துள்ளது. எனவே படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.