Tag Archives: எங்க ஊரு பாட்டுக்காரன்

என்னய்யா இந்த கோலத்துல வந்து நிக்கிற!.. ராமராஜன் செயலால் கடுப்பாகி சட்டையை கிழித்த இயக்குனர்!..

ஒரு காலத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசனையே மார்க்கெட்டில் பின் தள்ளி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் ராமராஜனின் ஆசையாக இருந்தது. எனவே இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் ராமராஜன்.

நிறைய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஊர்களில் திரியும் கிராமத்து ஆண்களின் தோற்றத்தை ராமராஜனிடம் பார்க்க முடிந்தது.

அது ராமராஜனுக்கு அதிகமான ரசிகர்களை உருவாக்கியது. அப்போது ரஜினி கமலின் திரைப்படங்கள் எல்லாம் லட்சங்களில் ஓடியப்போது ராமராஜனின் கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு கோடியை தாண்டி வசூல் கொடுத்தது.

ramarajan

அவ்வளவு வெற்றிகளை கொடுத்தப்போதும் கூட ராமராஜன் மிகவும் எளிமையாகவே இருந்து வந்துள்ளார். கங்கை அமரன் ராமராஜனை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில் எங்க ஊரு பாட்டுக்காரன் என்கிற திரைப்படத்தை ராமராஜனை வைத்து இயக்க இருந்தார் கங்கை அமரன். அந்த திரைப்படத்தின் கதைப்படி பாலக்காரனாக நடிக்கவிருந்தார் ராமராஜன். ஆனால் பால்க்காரன் எப்படி இருப்பான் என்று அறியாத ராமராஜன் வழக்கமாக வருவது போலவே பச்சை சட்டை, பேண்ட், ஷூ என ஸ்டைலாக வந்து நின்றார்.

Enga-Ooru-Pattukaran

அப்போது ஏற்கனவே வேறு விஷயங்கள் காரணமாக கடுப்பில் இருந்த கங்கை அமரனுக்கு இதை பார்த்ததும் கடுப்பாகிவிட்டது. ஏன்யா எவனாவது இப்படி ட்ரெஸ் போட்டுக்கிட்டு பால் கறப்பானா என சத்தம் போட்டு அவரது சட்டையை அங்கேயே கழட்ட சொல்லி அவரை அனுப்பியிருக்கிறார்.

அப்படியும் கூட கோபப்படாமல் கங்கை அமரன் கூறுவதை கேட்டு நடித்து கொடுத்துள்ளார் ராமராஜன்.