Tag Archives: ராமராஜன்

என் மகளை நினைச்சாதான் கஷ்டமா இருக்கு.. கண் கலங்கிய ராமராஜன்.!

கரகாட்டகாரன், பாட்டுக்கு நான் அடிமை மாதிரியான திரைப்படங்கள் மூலமாக எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றவர் நடிகர் ராமராஜன். ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்தும் கமலஹாசனுமே பார்த்து பயந்த ஒரு நடிகர் என்று ராமராஜனை கூறலாம்.

ஏனெனில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருபதுக்கும் அதிகமான படங்களை வெற்றி படங்களாக கொடுத்த ஒரு நடிகராக ராமராஜன் இருக்கிறார். ராமராஜன் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் அவர் அளவிற்கு கமல் மற்றும் ரஜினி கூட வளர்ச்சி அடையவில்லை என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு வெற்றியை கொடுத்த நடிகராக ராமராஜன் இருந்து வந்தார் ஆனால் அவருக்கு உடல் எடை கூடிய பிறகு அவரின் வயது காரணமாக அவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு குறைய தொடங்கியது. இந்த நிலையில் சமீபத்தில் ராமராஜன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அவர் நடிகை நளினியை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவர் திருமணத்தையும் நடிகர் எம் ஜி ஆர் தான் செய்து வைத்தார். ஏனெனில் பெண் வீட்டார் சார்பில் நிறைய பிரச்சனைகள் இருந்தன.

அதிலிருந்து எம்.ஜி.ஆர்தான் இவர்களை காப்பாற்றி திருமணம் செய்து வைத்தார். ராமராஜனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இது குறித்து அவர் பேட்டியில் பேசும் பொழுது எனது மகன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டான்.

மகளும் நல்ல வேலையில் இருக்கிறாள் இருவருமே செட்டில் ஆகிவிட்டார்கள் அதை பொருத்தவரை மகிழ்ச்சி தான். ஆனால் எனது மகளுக்கு இன்னமும் குழந்தை இல்லை அதுதான் எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்று தெரிவித்திருக்கிறார் ராமராஜன்.

 

என்ன கேட்காம எவண்டா என் பாட்டுல கை வச்சது!.. இயக்குனரால் கடுப்பான இளையராஜா..!

இளையராஜா இசையில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான பாடல்கள் வந்துள்ளன. இசைக்கே தமிழில் அவர்தான அரசர் என்கிற ரீதியில் அவருக்கு சினிமாவில் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஒரு காலக்கட்டத்தில் இளையராஜாவின் இசைக்காக திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டங்களும் உண்டு.

ராஜ்கிரண் கூட ஒரு பேட்டியில் கூறும்போது நான் நடிக்கும் திரைப்படங்களுக்கு பேனர் வைக்கும்போது அதில் இளையராஜாவின் போட்டோக்கள்தான் பெரிதாக இருக்கும் என கூறியுள்ளார். அப்படியான மக்கள் விரும்பும் நபராக இருந்தவர் இளையராஜா.

ilayaraja

நடிகர் ராமராஜனின் திரைப்படங்களில் பல பாடல்களுக்கு இசையமைத்து ஹிட் அடிக்க செய்துள்ளார் இளையராஜா. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து ராமராஜன் மீண்டும் தற்சமயம் நடித்த திரைப்படம் சாமானியன். இந்த திரைப்படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்து கொடுத்தார்.

இந்த படம் குறித்து சுவாரஸ்யமான அனுபவங்களை இயக்குனர் பகிர்ந்துள்ளார். சாமானியன் படத்தின் இசை வேளைகள் நடந்து கொண்டிருந்தப்போது அந்த திரைப்படத்தில் ஒரு பாடலை கொஞ்சம் ட்ரிம் செய்ய சொல்லிவிட்டு சென்றுள்ளார் இளையராஜா.

ஆனால் இயக்குனர் அந்த பாடலை கொஞ்சம் நகர்த்தி வைத்துவிட்டார். ஒரு இரண்டு நொடிகள் முன்னோக்கி நகர்த்தி வைத்துவிட்டார். அதனை சரியாக அடையாளம் கண்டுக்கொண்ட இளையராஜா யார் இதை மாற்றி வைத்தது என மிக சரியாக கேட்டுள்ளார். அந்த அளவிற்கு நுட்பமாக வேலை பார்ப்பவர் இளையராஜா என கூறியுள்ளார் இயக்குனர்.

அந்த காமெடி நடிகர் நடிச்சா நான் நடிக்கமாட்டேன்!.. கரகாட்டக்காரனில் இருந்து நடிகரை தூக்கிய ராமராஜன்..!

ராமராஜன் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வந்தன. முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு இவர் வந்தப்போது இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராகதான் வந்தார்.

அதற்கு பிறகுதான் அவருக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராமராஜன் கதாநாயகனாக நடிக்க துவங்கியப்போது அவர் பார்ப்பதற்கு கிராமங்களில் இருக்கும் இளைஞர்களை போலவே இருந்ததால் அவரை மக்கள் நேசித்தனர்.

மிக சீக்கிரத்திலேயே கமல், ரஜினிகாந்தை தாண்டிய ஒரு உச்சத்தை தொட்டார் ராமராஜன். இந்த நிலையில் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படம் என்றால் அது கரகாட்டக்காரன் திரைப்படம்தான்.

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முதலில் கவுண்டமணி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகர் எஸ்.எஸ் சந்திரன் தான். ஆனால் ராமராஜனும் எஸ்.எஸ் சந்திரனும் வேறு வேறு கட்சியில் அப்போது இருந்து வந்தனர். இது தொடர்பாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்தது.

எனவே அந்த கதாபாத்திரத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்கும்படி கூறியுள்ளார் ராமராஜன். ஆனால் படக்குழு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே எஸ்.எஸ் சந்திரன் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார் ராமராஜன். அதன் பிறகுதான் படத்தில் கவுண்டமணியை நடிக்க வைத்துள்ளனர்.

இவ்வளவு வருஷம் கழிச்சி வர்ற படம் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாமோ!.. ராமராஜனின் சாமானியன் எப்படி இருக்கு?

பல வருடங்களுக்கு பிறகு ராமராஜன் நடிப்பில் தயாராகி இன்று திரையில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சாமானியன். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராகேஷ் இயக்கியுள்ளார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த கதாநாயகனாக ராமராஜன் இருந்தார்.

ஆனால அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என இப்போது இருக்கும் எந்த ஒரு இயக்குனருக்கும் தோன்றாதது வருத்தமான விஷயம்தான். இந்த நிலையில் இயக்குனர் ராகேஷ் இயக்கிய சாமானியன் எப்படி இருக்கு என பார்க்கலாம்.

சாமானியன் கதையை பொறுத்தவரை மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வரும் ராமராஜன் பணம் எடுப்பதற்காக ஒரு வங்கிக்கி செல்கிறார். அப்போது அந்த வங்கிக்குள் ஒரு மர்ம கும்பல் நுழைந்து பணத்தை திருட பார்க்கிறது.

இதற்கு நடுவே ராமராஜன் என்ன செய்கிறார் என்பதை வைத்து கதை செல்கிறது. இதில் பல நல்ல கருத்துக்களை மக்களிடம் சொல்ல வேண்டும் என ராமராஜன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இப்போதைய தலைமுறையினருக்கு அது அவ்வளவாக ஒத்து வரவில்லை என்றே கூற வேண்டும்.

படத்தின் இசையமைப்பாளராக இளையராஜா இருந்தது இயக்குனருக்கு ஒரு சாதகமான அம்சமாக மாறிவிட்டது. எனவே படம் முழுக்க இளையராஜாவின் இசையில் வந்த ராமராஜன் பாடல்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

பொதுவாக ராமராஜன் திரைப்படங்கள் கிராமத்தைதான் கதை களமாக கொண்டிருக்கும். ஆனால் இதில் சென்னைதான் கதைகளமாக இருக்கிறது. மேலும் வழக்கமாக ராமராஜன் படத்தில் வரும் கலர் கலர் ஆடைகள், கதாநாயகிகள், பாடல்கள் இது எதுவுமே இந்த திரைப்படத்தில் கிடையாது.

படம் முழுக்க எக்கச்சக்கமான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே போல நகைச்சுவை காட்சிகளும் அந்த அளவிற்கு ஒட்டவில்லை என்றே கூற வேண்டும். இப்போதைய தலைமுறையினருக்கு ஏற்றாற் போல இந்த படம் வந்திருந்தால் இன்னமும் வரவேற்பை பெறும் படமாக இருந்திருக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பழைய ராமராஜன் பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்த படமாக இருக்கும். ஆனால் இப்போதைய தலைமுறையினருக்கு பிடித்த படமாக இருக்குமா? என்பது சந்தேகமே

அந்த நாலு வருஷம்தான்.. என் வாழ்க்கையே மாறி போச்சு!. ஓப்பன் டாக் கொடுத்த ராமராஜன்!..

சினிமாவில் ஒரு நடிகர் பெரும் உயரத்தை தொடுவது என்பது அவரது வெற்றியின் விகிதத்தை பொறுத்தே அமைகிறது. தொடர்ந்து ஒரு நடிகர் வெற்றி படங்களாக நடித்து வருகிறார் என்றால் கண்டிப்பாக அவர் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு விடுவார்.

அப்படி சினிமாவில் பெரும் உயரத்தை குறைந்த காலங்களிலேயே பெற்றவர்தான் ராமராஜன். ஆரம்பத்தில் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் ராமராஜன் வாய்ப்பு தேடி வந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

ramarajan

அதனை தொடர்ந்து உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் ராமராஜன். அதற்கு பிறகுதான அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதாநாயகனாக நடிக்க துவங்கி சில வருடங்களிலேயே சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார் ராமராஜன்.

இதுக்குறித்து அவர் தனது பேட்டியில் பேசும்போது என்னுடைய மொத்த சினிமா வாழ்க்கை என்பதே வெறும் 4 வருடங்கள்தான். 1986 இல் கதாநாயகனாக முதல் படத்தில் நடித்தேன். அதற்கு பிறகு 1990 வரை எனது படங்கள் எல்லாம் நல்ல வெற்றியை கொடுத்தன.

அதற்கு பிறகு எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. ஏன் அவ்வளவு சீக்கிரத்தில் நான் வாய்ப்பை இழந்தேன் என எனக்கே தெரியவில்லை. ஆனால் எனது படத்தின் வெற்றிக்கு அண்ணன் இளையராஜாவின் பாடல்களும் முக்கிய காரணம் என கூறுகிறார் ராமராஜன்.

என் படம் 450 நாள் ஓடுனப்ப இடையில் பத்து படம் சம்பவம் பண்ணுனுச்சு!.. இதெல்லாம் ராமராஜனுக்கு மட்டும்தான் நடந்துருக்கு!.

தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு நடிகராலும் செய்ய முடியாத சாதனைகளை எல்லாம் செய்தவர்தான் நடிகர் ராமராஜன். பெரும்பாலும் ராமராஜன் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது கூட்டம் அலைமோதும் நிலைதான் இருந்தது. ராமராஜன் படங்களின் முதல் நாள் ஓப்பனிங் கலெக்‌ஷனை பார்த்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களே ஆடிப்போன சம்பவங்கள் அப்போது நடந்தது.

ராமராஜன் முதலில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராகதான் பணிப்புரிந்து வந்தார். அப்போது இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. ஆனால்  எதிர்பாராத விதமாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் ராமராஜன்.

karakaarta-kaaran

பார்ப்பதற்கு கிராமத்து ஆள் போல இருப்பதாலும், சூது வாது தெரியாத கதாபாத்திரமாக படங்களில் நடித்ததாலும் குறுகிய காலங்களிலேயே அவருக்கான ரசிக பட்டாளங்கள் அதிகரித்தது. இந்த நிலையில்தான் மொத்த தமிழ் சினிமாவையும் திருப்பி போடும் படமாக கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியானது.

400 நாட்களை தாண்டி ஓடிய கரகாட்டக்காரன் ஒரு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் அப்போது நடந்த இன்னொரு அதிசயத்தையும் ராமராஜன் கூறுகிறார். கரக்காட்டக்காரன் திரைப்படத்திற்கு பிறகு என்னுடைய நடிப்பிலேயே 10 திரைப்படங்கள் அந்த 400 நாட்களில் வெளியாகின.

கரகாட்டக்காரனோடு சேர்ந்து அவையும் கூட 100 நாட்கள் எல்லாம் ஓடி வெற்றி கொடுத்தன என்றால் மக்களின் ஆதரவுதான் அதற்கு காரணம் என்கிறார் ராமராஜன்

என்னய்யா இந்த கோலத்துல வந்து நிக்கிற!.. ராமராஜன் செயலால் கடுப்பாகி சட்டையை கிழித்த இயக்குனர்!..

ஒரு காலத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசனையே மார்க்கெட்டில் பின் தள்ளி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் இயக்குனர் ஆக வேண்டும் என்பதுதான் ராமராஜனின் ஆசையாக இருந்தது. எனவே இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் ராமராஜன்.

நிறைய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஊர்களில் திரியும் கிராமத்து ஆண்களின் தோற்றத்தை ராமராஜனிடம் பார்க்க முடிந்தது.

அது ராமராஜனுக்கு அதிகமான ரசிகர்களை உருவாக்கியது. அப்போது ரஜினி கமலின் திரைப்படங்கள் எல்லாம் லட்சங்களில் ஓடியப்போது ராமராஜனின் கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு கோடியை தாண்டி வசூல் கொடுத்தது.

ramarajan

அவ்வளவு வெற்றிகளை கொடுத்தப்போதும் கூட ராமராஜன் மிகவும் எளிமையாகவே இருந்து வந்துள்ளார். கங்கை அமரன் ராமராஜனை வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்திருக்கின்றன.

இந்த நிலையில் எங்க ஊரு பாட்டுக்காரன் என்கிற திரைப்படத்தை ராமராஜனை வைத்து இயக்க இருந்தார் கங்கை அமரன். அந்த திரைப்படத்தின் கதைப்படி பாலக்காரனாக நடிக்கவிருந்தார் ராமராஜன். ஆனால் பால்க்காரன் எப்படி இருப்பான் என்று அறியாத ராமராஜன் வழக்கமாக வருவது போலவே பச்சை சட்டை, பேண்ட், ஷூ என ஸ்டைலாக வந்து நின்றார்.

Enga-Ooru-Pattukaran

அப்போது ஏற்கனவே வேறு விஷயங்கள் காரணமாக கடுப்பில் இருந்த கங்கை அமரனுக்கு இதை பார்த்ததும் கடுப்பாகிவிட்டது. ஏன்யா எவனாவது இப்படி ட்ரெஸ் போட்டுக்கிட்டு பால் கறப்பானா என சத்தம் போட்டு அவரது சட்டையை அங்கேயே கழட்ட சொல்லி அவரை அனுப்பியிருக்கிறார்.

அப்படியும் கூட கோபப்படாமல் கங்கை அமரன் கூறுவதை கேட்டு நடித்து கொடுத்துள்ளார் ராமராஜன்.

2 லட்சம் கொடுத்துட்டு எடுத்துக்க!.. ரஜினி படத்தால் கோடி ரூபாய் வசூல் செய்த படத்தை இழந்த இயக்குனர்!.

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் மார்க்கெட் குறையாமல் இளம் நடிகர்களுக்கு போட்டியாக வந்து நிற்கிறார் ரஜினிகாந்த்.

தற்சமயம் வேட்டையன் என்கிற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். எவ்வளவு பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தோல்வி படம் என்பது இருந்துக்கொண்டுதான் இருக்கும். அப்படியான ரஜினிகாந்தின் ஒரு தோல்வி படம் ஒரு இயக்குனருக்கு பெரும் சம்பவத்தை செய்திருக்கிறது.

தமிழில் பிரபலமான இயக்குனரான ஆர்.வி உதயக்குமாருக்கு அப்போது திரைப்படம் விநியோகம் செய்வதன் மீது ஆர்வம் ஏற்பட்டு வந்தது. அந்த சமயத்தில் இயக்குனர் ராம நாராயணன் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து தனக்கு தெரிந்த நபர்களுக்கு அவற்றை பரிந்துரை செய்து வந்தார்.

rajinikanth

இந்த நிலையில் ரஜினிகாந்த் படத்தை விநியோகம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என நினைத்த ஆர்.வி உதயக்குமார் முதல் படமாக தர்மத்தின் தலைவன் திரைப்படத்தை வாங்கியுள்ளார். ஆனால் அப்போது தயாரிப்பாளார்கள் தரப்பில் ஏதோ பிரச்சனை இருந்த காரணத்தினால் அந்த திரைப்படம் வெளியாவதில் பிரச்சனை ஆனது.

இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி கொண்டார் ஆர்.வி உதயக்குமார். இந்த நிலையில் அவரது நிலையை புரிந்துக்கொண்ட ராம நாராயணன், ராமராஜனின் படம் ஒன்னு இருக்கு, விநியோக தொகை 7 லட்சம் தான் நீ முதல்ல 2 லட்சம் மட்டும் கொடுத்து படத்தை எடுத்துக்க என கூறியுள்ளார்.

ஆனால் ரஜினி படத்தை வாங்கிவிட்டு பிறகு ராமராஜன் படத்தை வாங்குவது சரியாக இருக்காது என நினைத்த ஆர்.வி உதயக்குமார் அதை மறுத்துவிட்டார். இந்த நிலையில் வெளியான ராம ராஜன் திரைப்படம் ஒரு கோடி ரூபாயை தாண்டி ஹிட் கொடுத்தது, கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கரகாட்டக்காரன் திரைப்படம்தான் அது.

ராமராஜனை பார்த்து பயந்த ரஜினி.. அந்த ஒரு விஷயம்தான் காரணம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து கொண்டிருந்தன. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்தவர் கமல்ஹாசன்.

அந்த காலக்கட்டத்தில் உண்மையில் பல நடிகர்கள் போட்டி நடிகர்களாக போட்டி போட்டு கொண்டிருந்தனர். அப்படியான நடிகர்களில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்களும் இருந்தனர். இவர்களும் கூட கமல் ரஜினியுடன் போட்டி போட்டனர்.

rajinikanth

ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இவர்கள் அனைவரையும் பின்னால் தள்ளி தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமானவர்தான் ராமராஜன். இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த ராமராஜனுக்கு சினிமாவிற்கு வந்த உடனேயே எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன.

அவரது முதல் நாள் வசூலை பெரிய நடிகர்களால் கூட பெற முடியவில்லை. இந்த நிலையில் ராமராஜனை பார்த்து ஆடிப்போன ரஜினிகாந்த் பின்பு ஒருமுறை கே.எஸ் ரவிக்குமாரிடம் பேசும்போது ராமராஜனை பார்த்தப்போது உண்மையில் எனக்கு பயமாக இருந்தது. வந்த வேகத்திற்கு ஒரு நடிகன் இவ்வளவு வரவேற்பு பெருகிறாரே என்று பயந்தேன் என கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை கே.எஸ் ரவிக்குமாரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த விஷயத்துக்காக ராமராஜனை தப்பா நினைக்க வேண்டாம்!.. அந்த விபத்துதான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிப்படையாக கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சினிமாவில் ஒரு காலத்தில் பெரும் புகழோடு இருந்தவர் நடிகர் ராமராஜன். ராமராஜன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 20க்கும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன் மட்டுமே.

அவ்வளவு வெற்றிகளை கொடுத்த ராமராஜன் எவ்வளவு வேகத்திற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டாரோ அதே வேகத்திற்கு சரிவையும் கண்டார். சில வருடங்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்புகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது.

ராமராஜன் வயதான தோற்றத்தை அடைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்சமயம் சாமானியன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ராமராஜன். இந்த படம் விரைவில் திரைக்கும் வரவிருக்கிறது.

வெகு வருடங்கள் கழித்து ராமராஜனுக்கு இது ஒரு கம் பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராமராஜன் குறித்து பேசிய கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது, படத்திற்காக நான் முதன் முதலில் க்ளாப் தட்டினேன் என்றால் அது ராமராஜன் படத்திற்காகதான். அதற்கு பிறகுதான் புரியாத புதிர் திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது.

ramarajan

எனவே இப்போது 40க்கும் மேற்பட்ட படத்திற்கு நான் இயக்குனராக இருந்தாலும் நான் க்ளாப் தட்டிய முதல் ஹீரோ ராமராஜன் தான். அதனால்தான் அவரது படம் என கூறியதுமே ஒரே ஒரு காட்சி நடித்தாலும் சரி நான் அவரது திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என கூறி இந்த படத்தில் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

மேலும் அவர் கூறும்போது படத்தில் ராமராஜன் கால்களை கொஞ்சம் உந்திதான் நடப்பார். ஆனால் அதற்காக யாரும் அவரை தவறாக நினைக்க வேண்டாம். அவருக்கு இடையில் நடந்த விபத்தின் காரணமாகதான் அப்படி நடக்கிறார். அந்த விபத்தில் அவருடன் பயணித்தவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர்.

ஆனால் ராமராஜன் மட்டும்தான் பிழைத்துக்கொண்டார். அவர் இளையராஜாவின் இசையில் இன்னொரு படம் நடிக்க வேண்டும் என விதி உள்ளது என கூறியுள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

ராமராஜன் நடித்து வெளிவராத திரைப்படங்கள்?.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!..

Ramarajan Movies : தமிழ் சினிமாவில் தொடர்ந்து வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். ஒரு சமயத்தில் கமல் ரஜினிகாந்தே பயப்படும் அளவிற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டவர் ராமராஜன். ராமராஜன் நடித்தால் மட்டும் போதும் அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துவிடும்.

ஆனால் யானைக்கும் அடி சருக்கும் என்பது போல காலம் செல்ல செல்ல அவரது திரைப்படங்களுக்கு இருந்த வரவேற்பும் குறைய துவங்கின. தொடர்ந்து ஒரே மாதிரியான கதைக்களத்தை அவர் தேர்ந்தெடுத்ததே இதற்கு காரணம் என பேச்சுக்கள் உண்டு.

இப்படி அவரது வீழ்ச்சி துவங்கிய காலத்தில் அவர் நடித்த பல திரைப்படங்கள் திரைக்கே வராத சம்பவங்களும் நடந்தன. அப்படியான திரைப்படங்களை இப்போது பார்ப்போம்.

வேலா, தங்கநிலா, தர்மன், காவலன், பெத்தவ மனசு, சத்திய தாய், காங்கேயன் காளை, கண்ணுபட போகுது,தம்பிக்கு தாய் மனசு, நான் உங்கள் பக்கம், கூவுங்கள் சேவல்களே, மண்ணுக்கேத்த மைந்தன், நம்ம ஊர் சோழவந்தான், கும்பாபிஷேகம், பல்லவன் பாண்டியன், மதுரை தங்கம், ஆகிய திரைப்படங்கள் எல்லாம் இவர் நடித்தும் வெளிவராத திரைப்படங்களாக உள்ளன.

இந்த படங்களில் சில திரைப்படங்கள் படப்பெயரை அறிவித்ததுமே படப்பிடிப்பு நடக்காமல் நின்றுவிட்டன. அப்போதெல்லாம் முதலில் படத்திற்கு பெயர் வைத்துவிடுவார்கள். பிறகுதான் படப்பிடிப்பே துவங்கும். இன்னும் சில படங்கள் படப்பிடிப்பு துவங்கி அதற்கு பிறகு தடைப்பட்டன. சில படங்களில் பாடல்கள் எல்லாம் வெளியாகி படங்கள் மட்டும் வெளியாகாமல் போனது.

அப்போதெல்லாம் ரஜினி கமல்ஹாசன் பெரும் நடிகர்களாக இருந்ததால் ராமராஜனின் வராத திரைப்படங்களை மக்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டனர். இருந்தாலும் இப்போது வரை ராமராஜனை போல தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்த இன்னொரு நடிகர் வரவில்லை என்றே கூற வேண்டும்.

என் படத்துக்கு வந்து வேலை பாருங்க!.. ராமராஜனுக்கு வாக்கு கொடுத்து பிறகு ஏமாற்றிய பார்த்திபன்!..

Actor Ramarajan : ரஜினி கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதே காலகட்டத்தில் அவர்களுக்கே போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் ராமராஜன். ராமராஜனை பொறுத்தவரை அவர் கமல் ரஜினி மாதிரியான பெரும் நடிகர்களுக்கே பயம் காட்டியவர் என்று கூறலாம்.

ஏனெனில் தொடர்ந்து ஒரு வருடம் முழுவதும் அவர் நடித்து வெளியான அனைத்து திரைப்படங்களும் பெரும் வெற்றி படங்களாகவே அமைந்தன. ராமராஜன் தமிழ் சினிமாவிற்கு வரும்பொழுது நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் வரவில்லை.

அவர் ஒரு இயக்குனர் ஆகவே ஆசைப்பட்டார் எனவே ஆரம்பத்தில் இயக்குனர் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ராமநாராயணனிடம் பணிபுரிந்த காலகட்டத்தில் பல திரைப்படங்களில் அவர் உதவி இயக்குனராகப் பணி புரிந்ததன் மூலம் திரைப்படம் எடுப்பதற்கான அறிவை பெற்றார்.

இருந்தாலும் அதற்குப் பிறகு திரைப்படம் எடுப்பதை காட்டிலும் படங்கள் நடிப்பதிலேயே அவருக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகன் ஆனார் ராமராஜன். ஆரம்பகட்டத்தில் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்தில் இருந்து நடிகர் பார்த்திபன் மற்றும் செந்திலுடன் ராமராஜனுக்கு நல்ல பழக்கம் இருந்தது.

இருவரும் பக்கத்து அறையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். இந்த நிலையில் ஒருமுறை காமராஜர் நடிகர் பாண்டியனை கதாநாயகனாக வைத்து மண்ணுக்கேத்த பொண்ணு என்கிற திரைப்படத்தை இயக்க நினைத்தார்.

அந்த திரைப்படத்தை இயக்க ஆரம்பித்த நேரத்திலேயே பார்த்திபனிடம் சென்று என்னுடைய திரைப்படத்தில் நீங்கள் உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும் அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ராமராஜன்.

பார்த்திபனும் அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் படப்பிடிப்பு துவங்கிய காலகட்டத்தில் பார்த்திபனுக்கு வேறு ஒரு திரைப்படத்தில் உதவி இயக்குனராக சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த இயக்குனர் ராமராஜனை விட கொஞ்சம் பெரிய ஆள் என்பதால் ராமராஜன் படத்தில் பணி புரியாமல் அவர் அந்த இயக்குனர் படத்தில் பணிபுரிய சென்று விட்டார்.

அது வேறு யாரும் இல்லை இயக்குனர் பாக்யராஜ் தான் பாக்கியராஜின் திரைப்படத்தில் உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்ததால் அப்போது அங்கு சென்று விட்டார் பார்த்திபன். இந்த விஷயத்தை ராமராஜனே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.