ராமராஜனை பார்த்து பயந்த ரஜினி.. அந்த ஒரு விஷயம்தான் காரணம்!.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்து கொண்டிருந்தன. அப்போது அவருக்கு போட்டி நடிகராக இருந்தவர் கமல்ஹாசன்.

அந்த காலக்கட்டத்தில் உண்மையில் பல நடிகர்கள் போட்டி நடிகர்களாக போட்டி போட்டு கொண்டிருந்தனர். அப்படியான நடிகர்களில் சரத்குமார், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நடிகர்களும் இருந்தனர். இவர்களும் கூட கமல் ரஜினியுடன் போட்டி போட்டனர்.

rajinikanth

ஆனால் அப்போதைய காலக்கட்டத்தில் இவர்கள் அனைவரையும் பின்னால் தள்ளி தமிழ் சினிமாவில் புதுமுகமாக அறிமுகமானவர்தான் ராமராஜன். இயக்குனர் ராம நாராயணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்த ராமராஜனுக்கு சினிமாவிற்கு வந்த உடனேயே எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன.

அவரது முதல் நாள் வசூலை பெரிய நடிகர்களால் கூட பெற முடியவில்லை. இந்த நிலையில் ராமராஜனை பார்த்து ஆடிப்போன ரஜினிகாந்த் பின்பு ஒருமுறை கே.எஸ் ரவிக்குமாரிடம் பேசும்போது ராமராஜனை பார்த்தப்போது உண்மையில் எனக்கு பயமாக இருந்தது. வந்த வேகத்திற்கு ஒரு நடிகன் இவ்வளவு வரவேற்பு பெருகிறாரே என்று பயந்தேன் என கூறியுள்ளார்.

இந்த விஷயத்தை கே.எஸ் ரவிக்குமாரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.