தமிழில் குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். சேரன் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. ஆட்டோகிராஃப் திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் அது மிகவும் பிரபலமாக இருந்தது.
அப்போது அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடலை அனைவருமே கேட்டிருப்போம். ஒரு அளவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார் சேரன். அந்த சமயத்தில் சில படங்களில் மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது.
சேரன் நடித்த படங்களில் ராமன் தேடிய சீதை திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் சேரன் குறித்து சர்ச்சையை கிளப்பும் செய்தி ஒன்றை ரிப்போர்ட்டர் எழுதிவிட்டார்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் மீட்டிங் நடந்தப்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் கெட்ட வார்த்தையில் திட்டினார் சேரன். இப்போது பிரபலமாக இருக்கும் வலைப்பேச்சு அந்தனனும் அந்த மீட்டிங்கில் இருந்தார்.
இந்த பேச்சால் கடுப்பான அவர், தப்பு செஞ்சவங்களை மட்டும் பேசுங்க. பொதுவா எல்லாரையும் எப்படி நீங்க திட்டலாம். என அவர் கேட்க சேரனுக்கும் அவருக்கும் சண்டை ஆனது. இதை அவரே தனது பேட்டியில் கூறியுள்ளார்.
Seran and Mysskin: தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கிய பல படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இயக்குனராக இருந்த மிஷ்கினுக்கு நடிப்பின் மீதும் அதிக ஆர்வம் இருந்தது.
அதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்க துவங்கினார். தற்சமயம் அவரது நடிப்பிற்குமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே பெரும் ஹீரோக்கள் படங்களில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார்.அதனை தொடர்ந்து லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மிஷ்கின்.மிஸ்கினுக்கும் இயக்குனர் சேரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பேச்சு இருந்தது.
எனவே இது குறித்து ஒரு பேட்டியில் கேட்கும் பொழுது சேரன் இருக்கும் சமயத்தில் நான் எனது உதவி இயக்குனரை திட்டினேன், அப்பொழுது சேரன் என்னிடம் வந்து நான் இருக்கும்போது இப்படி எல்லாம் திட்டாமல் இருங்களேன் சார் என கூறினார்.
அதற்கு நான் இது எனக்கும் உதவி இயக்குனருக்கும் இருக்கும் பிரச்சினை அதற்குள் நீங்கள் தலையிடாதீர்கள், உங்களை திட்ட வேண்டும் என எனக்கு தோன்றினால் நேரடியாக திட்டி விடுவேன் என்று பதில் அளித்துள்ளார் மிஷ்கின். இதனை மிஷ்கினே அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் பல படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி பல படங்கள் இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற அவரது திரைப்படங்கள் வந்த காலத்தில் மக்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
நடுநிலை வர்க்கத்தை சேர்ந்த மக்களின் குடும்ப பிரச்சினைகளை பிரதிபலிக்கும் விதமாகவே சேரனின் திரைப்படங்கள் அமைந்திருந்தன. இதுவரை அதிக பட்ஜெட்டில் ஒரு மாஸ் திரைப்படத்தை சேரன் இயக்கியதே கிடையாது. இந்த நிலையில் தற்சமயம் கர்நாடகாவில் புகழ்பெற்ற நடிகரான கிச்சா சுதீப் வைத்து சேரன் திரைப்படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி என கூறப்படுகிறது இதுவரை சேரன் இவ்வளவு அதிகபட்சத்தில் எந்த ஒரு திரைப்படமும் இயக்கியது கிடையாது. எனவே இந்த திரைப்படம் நிச்சயமாக ஒரு கமர்சியல் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது சேரன் திரைப்படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் ஒரு வரவேற்பு இருப்பதால் இந்த திரைப்படம் குறித்தும் அவர்களிடம் வரவேற்பு இருந்து வருகிறது.
பொதுவாக சினிமா என்றாலே கற்பனையான கதைகளை படமாக்கக்கூடியவர்கள்தான். அதிகமான திரைப்படங்கள் மக்களின் கற்பனைக்கு தீனி போடும் விதத்தில்தான் இருக்கும். இதில் சேரன், தங்கர் பச்சன் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் விதி விலக்கு.
ஏனெனில் இவர்கள் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் சாதரண மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்களும் கூட மிடில் க்ளாஸ் மனிதனின் வாழ்க்கையை கூறும் விதத்தில் அமைந்திருக்கும்.
ஆட்டோ கிராப் திரைப்படத்திற்கு பிறகு சேரனுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆட்டோகிராப் திரைப்படம் அப்படியொரு ஹிட் கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார். எனவே சேரனை அழைத்து பேசினார்.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படத்தின் கதையை கூறியுள்ளார் சேரன். அதை அப்படியே கேட்டுக்கொண்டிருந்த விஜய் கதை பிடித்திருக்கிறது என கூறியுள்ளார். பொதுவாக பெரும் கதையாக இருந்தால் அதை சுருக்கி கூறுமாறு ஹீரோக்கள் கேட்பார்கள். ஆனால் விஜய் அந்த விஷயத்தில் மிகவும் பொறுமையானவர். இதற்கு முன்பு சிவாஜி கணேசன் இதே போல கதை கேட்பவராக இருந்தார்.
அவருக்கு பிறகு அதே குணத்தை விஜய் கொண்டுள்ளார் என ஒரு பேட்டியில் சேரன் கூறியுள்ளார். ஆனால் கதை பிடித்திருந்தும் சேரன் இயக்கத்தில் நடிக்க இருந்த அந்த படத்தில் விஜய் நடிக்கவே இல்லை. அப்போது தவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரன் பிஸியாக இருந்ததால் அடுத்த இயக்குனரை நோக்கி நகர்ந்துவிட்டார் விஜய்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips