சிவாஜி சாருக்கு அப்புறம் அப்படி ஒரு ஆளுனா அது விஜய்தான் – விஜய் குறித்து இயக்குனர் சேரனின் பார்வை!

பொதுவாக சினிமா என்றாலே கற்பனையான கதைகளை படமாக்கக்கூடியவர்கள்தான். அதிகமான திரைப்படங்கள் மக்களின் கற்பனைக்கு தீனி போடும் விதத்தில்தான் இருக்கும். இதில் சேரன், தங்கர் பச்சன் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் விதி விலக்கு.

ஏனெனில் இவர்கள் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் சாதரண மனிதனின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். இயக்குனர் சேரன் இயக்கிய ஆட்டோ கிராப், தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்களும் கூட மிடில் க்ளாஸ் மனிதனின் வாழ்க்கையை கூறும் விதத்தில் அமைந்திருக்கும்.

ஆட்டோ கிராப் திரைப்படத்திற்கு பிறகு சேரனுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆட்டோகிராப் திரைப்படம் அப்படியொரு ஹிட் கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து நடிகர் விஜய் சேரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார். எனவே சேரனை அழைத்து பேசினார்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படத்தின் கதையை கூறியுள்ளார் சேரன். அதை அப்படியே கேட்டுக்கொண்டிருந்த விஜய் கதை பிடித்திருக்கிறது என கூறியுள்ளார். பொதுவாக பெரும் கதையாக இருந்தால் அதை சுருக்கி கூறுமாறு ஹீரோக்கள் கேட்பார்கள். ஆனால் விஜய் அந்த விஷயத்தில் மிகவும் பொறுமையானவர். இதற்கு முன்பு சிவாஜி கணேசன் இதே போல கதை கேட்பவராக இருந்தார்.

அவருக்கு பிறகு அதே குணத்தை விஜய் கொண்டுள்ளார் என ஒரு பேட்டியில் சேரன் கூறியுள்ளார். ஆனால் கதை பிடித்திருந்தும் சேரன் இயக்கத்தில் நடிக்க இருந்த அந்த படத்தில் விஜய் நடிக்கவே இல்லை. அப்போது தவமாய் தவமிருந்து படப்பிடிப்பில் சேரன் பிஸியாக இருந்ததால் அடுத்த இயக்குனரை நோக்கி நகர்ந்துவிட்டார் விஜய்.