அந்த படத்துக்காக 55 நாள் குளிக்காம நடிச்சேன்!- அதிர்ச்சியை கிளப்பிய பால சரவணன்!
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் பால சரவணன். இவர் என் பெயர் மீனாட்சி என்கிற சீரியலில் முதன் முதலாக தோன்றினார். அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்தவர் இதுவரை 40க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். போன வருடம் வெளியான விலங்கு வெப் சீரிஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பால சரவணன். பலரும் அந்த சீரிஸிற்காக அவரை பாராட்டினர். 2014 ஆம் ஆண்டு இவர் விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில்…
