Tag Archives: பிரசாந்த் நீல்

2000 கோடி பட்ஜெட் படத்தில் களமிறங்கிய எஸ்.கே பட நடிகை.!

பெரிய இயக்குனர்கள் படங்களில் நடிப்பதன் மூலம் சில நடிகைகள் அதிக வரவேற்பை பெறுகின்றனர். அப்படியாக வரவேற்பை பெறும் ஒரு நடிகையாக இருப்பவர்தான் நடிகை ருக்மணி வசந்த்.

இவர் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ஆவார். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பது அதிகமாக கிடைக்க துவங்கியது.

இந்த நிலையில் அடுத்து தமிழில் ஏஸ் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடித்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்.கே 23 திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்சமயம் இவருக்கு பேன் இந்தியா திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்துள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஜுனீயர் என்.டி.ஆரின் பிறந்தநாளின் போதே இந்த திரைப்படம் குறித்த செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். பிரசாந்த் நீல் படம் என்பதால் படம் கண்டிப்பாக பெரிய படமாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ஒரு படத்துக்காக ரஜினி பட வாய்ப்பையே இழந்தேன்.. இப்ப இயக்குனர்கிட்ட சிக்கிட்டாரு!.. நடிகர் மைம் கோபிக்கு வந்த சிக்கல்!.

பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பது என்பது பல நடிகர்களுக்கும் கனவாக இருக்கும். ஏனெனில் பெரிய படங்களில்தான் அதிகமான வரவேற்புகள் கிடைக்கும். அப்படி சின்ன திரைப்படங்களில் எல்லாம் வாய்ப்பு பிடித்து பிடித்து தற்சமயம் மக்கள் மத்தியில் அறியப்படும் நடிகராக இருப்பவர் நடிகர் மைம் கோபி.

மெட்ராஸ் திரைப்படத்தில் இவர் நடித்த பெருமாள் கதாபாத்திரம் வரவேற்பை பெற்றது. மேலும் கபாலி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது வளர்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் முக்கிய பங்குண்டு

இந்த நிலையில் சலார் திரைப்படத்தில் நடித்ததால் 18 படங்களில் வாய்ப்பை இழந்ததாக கூறுகிறார் மைம் கோபி. கே.ஜி.எஃப் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான திரைப்படம் சலார் சீஸ் ஃபயர்.

இந்த திரைப்படத்தில் பிரபாஸின் நண்பராகவும் முக்கிய கதாபாத்திரமாகவும் மைம் கோபி நடித்திருந்தார். இதுக்குறித்து அவர் கூறும்போது சலார் படத்துக்காக அந்த சமயத்தில் வந்த 18 படங்களில் நான் நடிக்கவில்லை.

ரஜினியுடன் நடிப்பதற்கு கூட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சலார் காரணமாக அதை நிராகரித்தேன். ஏனெனில் படப்பிடிப்பு துவங்கும்போது சில காரணங்களால் சலார் படத்தில் நடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் அந்த சிக்கல் வரக்கூடாது என்பதற்காக நான் மற்ற படங்களில் நடிக்கவில்லை.

இப்போதும் கூட அடுத்து இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்பதால் என்னை தாடி எடுக்க கூடாது என இயக்குனர் கூறியுள்ளார். மேலும் வேறு படங்களில் கமிட் ஆவதற்கு நான் அவரிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறார் மைம் கோபி..

3 மணிநேர படத்துல ஹீரோ அதை பண்ணவே இல்ல!.. சலார் படத்தில் புது சாதனை படைத்த இயக்குனர்!..

Salaar Movie: தென்னிந்தியாவில் பெரும் இயக்குனர்களில் முக்கியமானவராக பிரசாந்த் நீல் இருக்கிறார். அவர் இயக்கி இந்திய அளவில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படம் கே.ஜி.எஃப். கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்து இயக்கி வந்த திரைப்படம் சலார்.

இதனாலேயே சலார் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவல் அதிகமானது. சலார் திரைப்படத்தை பொறுத்தவரை இந்த படம் கே.ஜி.எஃப் மாதிரி இல்லாமல் இரு நண்பர்களின் நட்பை பேசும் திரைப்படமாக இருக்கிறது.

கிட்டத்தட்ட மூன்று பாகத்திற்கு ப்ளான் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் மட்டுமே தற்சமயம் வெளியாகியுள்ளது. தெலுங்கிலும் சரி , கன்னடத்திலும் சரி பொதுவாகவே கதாநாயகர்கள் அடுக்கடுக்காக பஞ்ச் டயலாக் பேசுவார்கள்.

salaar2

அதனாலேயே புதிதாக திரைப்படம் பார்க்க போகிறவர்களுக்கு திரைப்படம் மீதே கோபம் வந்துவிடும். ஆனால் சலார் திரைப்படத்தில் அந்த விஷயத்தில் சிறப்பான ஒன்றை செய்திருந்தார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதாவது இந்த படத்தின் மொத்த நேரம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஆகும். அதில் மொத்தமாகவே 2 நிமிடம் 33 நொடிகள்தான் நடிகர் பிரபாஸ் பேசியிருக்கிறார்.

மீத நேரங்களில் அமைதியாகவே இருந்து வரும் ஒரு கதாபாத்திரமாக இருந்து வருகிறார். ஆக்‌ஷன் படத்தில் கதாநாயகனுக்கு டயலாக்கே கொடுக்காமல் மாஸ் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல்.

சலார் படத்தில் முதல் பாதியில் தூக்கம் வர இதுதான் காரணம்!.. ரசிகர்கள் அதிருப்தி!..

Salaar Movie : கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளியாகியிருக்கும் திரைப்படம் சலார். சலார் திரைப்படம் வெளியானது முதல் நாளே 170 கோடிக்கு ஓடி பெரும் வெற்றியை கொடுத்துள்ளது. இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மொத்தம் 3 பாகங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கே.ஜி.எஃப் திரைப்படத்தை விடவும் இதில் கதை மாந்தர்கள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாதி அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக பலரும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

என்னவென்று பார்க்கும்போது மூன்று பாகத்திற்கான அறிமுகமாக இந்த முதல் பாதி இருப்பதால்தான் அந்த தொய்வு ஏற்பட்டுள்ளது. முக்கியமாக படம் முழுக்க சுருதி ஹாசன் யார் என்றே கூறவில்லை. ஆனால் ஒரு கிராமத்தில் எந்த வித சண்டையும் போடாமல் வாழும் பிரபாஸை ஒரு கூட்டம் தேடி கொண்டிருக்கிறது.

salaar2

அதே போல சுருதி ஹாசனையும் அதே கூட்டம் தேடி கொண்டிருக்கிறது. இந்த தேடுதலை வைத்தே முதல் பாதி சென்றுவிட்டது. பெரிதாக கதை எதுவும் நகரவில்லை. இரண்டாம் பாதியில்தான் பிரபாஸ் கன்சார் நகருக்குள்ளேயே செல்கிறார்.

எனவே திரைப்படத்தில் அது ஒரு பெரும் தொய்வாக அமைந்துவிட்டது. மேலும் இந்த படத்தின் ஏன் அந்த கூட்டம் பிரபாஸை தேடி வருகிறது என்றும் தெரியவே இல்லை. பிறகுதான் தெரிகிறது. கன்சாரில் நடக்கும் மீதி விஷயங்களே அடுத்த பாகத்தில்தான் வருகிறது என்று. எனவே நமக்கு முதல் பாதியில் காண்பித்தது அனைத்துமே மூன்றாம் பாகத்தில் வரும் காட்சிகளாகும். இதுதான் இந்த படம் முதல் பாதியின் தொய்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

அநேகமாக மூன்றாவது பாகத்தில்தான் சுருதிஹாசன் யார் என்பதே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Salaar : முதல் நாளே கோடிகளில் அள்ளிய சலார்!.. 1000 கோடிக்கு போகுமோ!..

Salaar: கே.ஜி.எஃப் இயக்குனரின் மற்றுமொரு படைப்பாக தயாரான திரைப்படம்தான் சலார். இரு நண்பர்களுக்கு இடையே இருக்கும் ஆழமான நட்பை அடிப்படையாக கொண்டு பிரசாந்த் நீல் எழுதிய கதைதான் சலார். சலார் படத்தின் கதையை கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு முன்பே எழுதிவிட்டார் இயக்குனர்.

ஆனால் அப்போது அதை இயக்குவதற்கு சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் அந்த படத்தை இயக்கவில்லை. இந்த நிலையில் தற்சமயம் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது சலார்.

பழங்குடிகளின் ஆட்சியின் கீழ் இருக்கும் கான்சார் என்னும் பகுதியை யார் ஆள்வது என்பதை வைத்து செல்லும் சண்டைதான் இதற்கு காரணமாக இருக்கிறது. படத்தை மூன்று பாகத்திற்கு எடுக்க இருப்பதால் இதன் முதல் பாதி படத்தின் அறிமுகத்திற்கே சென்றுவிட்டது.

salaar1

இதனால் முதல் பாதி கொஞ்சம் தொய்வாக இருந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படத்தின் புக்கிங் துவங்கியப்போதே உலக அளவில் 30.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்த நிலையில் ப்ரீ புக்கிங் மூலம் மட்டுமே 95 கோடிக்கு டிக்கெட் விற்றது.

அதனை தொடர்ந்து நேற்று படம் வெளியாகிய நிலையில் தற்சமயம் உலக அளவில் மொத்தம் 175 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது சலார். இப்படியே போனால் அடுத்து இந்த படமும் 1000 கோடி வசூல் சாதனை செய்வதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இரு நண்பர்களால் ராஜ்ஜியமே அழிந்த கதை!.. அனலை கிளப்பிய சலார் ரிலீஸ் ட்ரெய்லர்!.. இதுதான் கதையா?..

Salaar Trailer: கே.ஜி.எஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் இயக்கிய கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் அவர் இயக்கி வெளியாகவிருக்கும் திரைப்படம் சலார்.

இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கே.ஜி.எஃப் படத்திற்கு முன்பே எழுதிவிட்டார் என கூறப்படுகிறது. ஆனால் இப்போதுதான் அவருக்கு இதை படமாக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரைலரில் இதன் கதை ஓரளவு தெரிந்துள்ளது.

கதைப்படி கான்சார் என்னும் பகுதியில் ஒரு மதிப்புமிக்க பொறுப்பில் பிரித்திவி ராஜ் இருக்கிறார். அவருக்கு கான்சாரில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை வரும்போது தனது நம்பிக்கைக்குரிய நண்பனான பிரபாஸை அழைக்கிறார். பிரபாஸின் பெயர்தான் சலார் என கூறப்படுகிறது. பிரபாஸ் ஒரு மெக்கானிக்காக இருக்கிறார்.

அதே சமயம் துப்பாக்கிகளை கொண்டு புது புது கருவிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் தெரிந்தவராக இருக்கிறார். இதனால் ஒரு படையே அவரை அழிக்க வந்தாலும் அதனை எதிர்க்கும் வல்லமை பிரபாஸிற்கு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கான்சாரின் பெரும் தலைக்கும், துப்பாக்கி தொழில்நுட்பம் தெரிந்த ஒருவனுக்கும் இடையே ஏற்படும் பிரச்சனையே கதையாக இருக்கும் என யூகிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதல் பாதி மோசம்!.. சலார் படக்கதை என்ன!.. சுருக்கமான விமர்சனம்…

முதல் பாகத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்பதாகதான் கதை இருக்கும். இந்த படத்தி இறுதியில்தான் இருவரும் எதிரிகளாக மாறுவார்கள் என்பது ரசிகர்களின் தியரியாக இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இரண்டாம் பாகம் இன்னமும் ரத்த களரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்சமயம் இந்த ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதற்கு நடுவே இந்த படமும் பார்ப்பதற்கு கே.ஜி.எஃப் மாதிரியே இருக்கிறது. கே.ஜி.எஃப் தாக்கமே இல்லாமல் இயக்குனரால் படம் பண்ண முடியாதா!.. ஒரே மாதிரியான திரைக்கதை அமைப்பை எத்தனை தடவைதான் பார்ப்பது என்பது சிலரின் கருத்தாக இருக்கிறது. வருகிற டிசம்பர் 22 இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.