Tag Archives: பிரபு சாலமன்

பிரபு சாலமன் இயக்கத்தில் களம் இறங்கும் வனிதா விஜயக்குமார் மகன்!.. புது அப்டேட்!.

மைனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். ஆரம்பத்தில் பிரபு சாலமனின் மைனா, கும்கி மாதிரியான திரைப்படங்கள் சோக க்ளைமேக்ஸ் கொண்ட திரைப்படங்களாகவே இருந்தன.

இதனால் அதற்கு பிறகு பிரபு சாலமன் திரைப்படம் என்றாலே சோக க்ளைமேக்ஸாகதான் இருக்கும் என்றெல்லாம் மக்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கு பிறகு அவர் இயக்கிய எந்த திரைப்படத்திலும் அவர் சோக க்ளைமேக்ஸே வைக்கவில்லை.

படத்தின் திரைக்கதையை பொறுத்தவரை பிரபு சாலமனின் திரைக்கதையும் அவர் கையில் எடுக்கும் கதையும் வித்தியாசமானதாக இருக்கும். இந்த நிலையில் அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கியுள்ளார் பிரபு சாலமன்.

கும்கி திரைப்படத்தில்தான் தமிழில் முதன் முதலாக கும்கி யானைகள் குறித்து திரைப்படம் இயக்கியவர் பிரபு சாலமன் தான். இந்த நிலையில் தற்சமயம் அடுத்து இவர் இயக்கும் இந்த திரைப்படத்தில் சிங்கங்களை குறித்து திரைப்படம் இயக்க இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக வனிதா விஜயக்குமாருக்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்த பையன் ஒருவன் இருக்கிறாராம். அவர்தான் இதில் கதாநாயகனாக நடிக்கிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்தியாவிலேயே முதல் முறையாக அப்படி படமெடுப்பவது பிரபு சாலமன் மட்டும்தான்!.. இதான் விஷயமா?..

Director Prabhu Soloman: உலகம் முழுக்க திரைத்துறையில் அனைத்து வகையான திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறிப்பிட்ட சில வகை படங்களை மட்டுமே மக்கள் அதிகமாக பார்த்து ஹிட் கொடுக்கும் நிலை உண்டாகியுள்ளது.

30 வருடங்களுக்கு முன்பு கூட குடும்ப படங்கள் காதல் படங்களுக்கு எல்லாம் ஓரளவு வரவேற்பு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சண்டை படங்களுக்கு மட்டுமே அதிக வரவேற்பு இருப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு நடுவே தொடர்ந்து இயற்கை சார்ந்த திரைப்படங்களை எடுப்பவராக இயக்குனர் பிரபு சாலமன் இருக்கிறார்.

பிரபு சாலமனின் திரைப்படங்கள் அதிகப்பட்சம் மலை மற்றும் மலையை சுற்றியுள்ள பகுதிகளை காட்டும் விதமாகதான் இருக்கும். அந்த வகையில் கும்கி யானைகளை மையப்படுத்தி கும்கி என்கிற திரைப்படத்தை எடுத்தார் பிரபு சாலமன்.

அதன் பிறகு காடு தொடர்பான மற்றொரு படமாக காடன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். தற்சமயம் பிரபு சாலமன் அடுத்ததாக சிங்கத்தை பற்றி ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நிஜ சிங்கங்களை படம் பிடிப்பதில் நிறைய பிரச்சனைகள் இருப்பதால் மொரிசியஸ் சென்று அங்கு படப்பிடிப்பை துவங்க உள்ளார் பிரபு சாலமன்.

இந்தியாவிலேயே இதுவரை சிங்கத்தின் வாழ்க்கையை பேசும் வகையில் திரைப்படம் வந்ததில்லை என்று கூறப்படுகிறது. எனவே பிரபு சாலமனின் இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த மூஞ்சு எனக்கு தேவைப்படாது!.. யோகி பாபுவை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய தனுஷ் இயக்குனர்..

தமிழில் நகைச்சுவை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் வந்த பொழுது அதிக கேள்விக்கும், கிண்டலுக்கும் உள்ளானாலும் கூட போக போக தனக்கு என ஒரு தனி காமெடி திறனை உருவாக்கிக் கொண்டு அதை வைத்து தற்சமயம் பிரபலமாகி உள்ளார் யோகி பாபு.

சின்ன நடிகர்களில் துவங்கி ரஜினிகாந்த் வரை பெரிய நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார் யோகி பாபு. தற்சமயம் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு.

ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு இயக்குனர் அவரை நேரில் வர சொன்னாராம். அப்போது மிகுந்த மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் யோகி பாபு மழையில் நனைந்து கொண்டே வாய்ப்பு தேடி சென்றுள்ளார்.

அப்பொழுது நனைந்து கொண்டு நின்ற யோகி பாபுவை பார்த்த அந்த இயக்குனர் உன்னிடம் போட்டோ ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். பொட்டோவை யோகி பாபு கொடுத்ததும் ஒரு ஐந்து நிமிடம் அந்த போட்டோவையும் அவரையும் மாற்றி மாற்றி பார்த்துள்ளார்.

சரி கண்டிப்பாக இந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என யோகி பாபு நம்பி இருக்கும் பொழுது இந்த மூஞ்சி எனக்கு பயன்படாது. அதனால் உனக்கு வாய்ப்பில்லை என்று கூறி அனுப்பி உள்ளார். அந்த இயக்குனர் யார் என்று யோகி பாபு பேட்டியில் கூறவில்லை. ஆனால் இது குறித்து கமெண்டில் மக்கள் பதிலளிக்கும் பொழுது பிரபு சாலமன் மைனா திரைப்படத்தை இயக்கும்போது தான் இந்த விஷயத்தை செய்தார் என்று கூறுகின்றனர்.