Tag Archives: yogi babu

மனைவி அக்கவுண்டுக்கு காசு போனாதான் கால்ஷூட்.. தயாரிப்பாளர்களுக்கு ரூல் போட்ட யோகிபாபு..!

கோலிவுட் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் முக்கியமானவராக யோகி பாபு இருந்து வருகிறார்.

யோகி பாபுவுக்கு முன்பு காமெடி நடிகர்களாக நடித்த பலரும் இப்பொழுது கதாநாயகனாக நடிக்க துவங்கி விட்டதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு அதிகம் வறட்சி ஏற்பட்டு இருக்கிறது.

நடிகர் யோகி பாபுவும் கூட அவ்வப்போது கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்றாலும் கூட அவர் அடிக்கடி காமெடி நடிகராகவும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் அவர்களுக்கான கேரவனை அவர்களே வாங்கி வைத்துக் கொள்கின்றனர். ஆனால் அதற்கான வாடகையை மட்டும் தயாரிப்பாளரிடம் வசூலித்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

yogibabu

இதே மாதிரி யோகிபாபுவும் அவருக்கான கேரவனை அவரே வாங்கி இருக்கிறாராம். ஆனால் அந்த கேரவனுக்கான வாடகை செலவு ஒரு நாளைக்கு 40,000 ரூபாய். இந்த 40 ஆயிரம் ரூபாயை அவரது மனைவி கணக்கிற்கு அனுப்பினால் தான் அவர் மறுநாள் நடிப்பதற்கே வருவாராம் இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

லட்சங்களில் கொடுத்தால்தான் ப்ரோமோஷனுக்கு வருவார்.. யோகி பாபுவை வச்சு செய்த தயாரிப்பாளர்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் யோகிபாபு இருந்து வருகிறார். பெரும்பாலும் யோகிபாபு நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கதான் செய்கிறது. ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு இருந்த அளவிற்கான வரவேற்பு இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்பெல்லாம் எந்த படத்தை பார்த்தாலும் அதில் காமெடி நடிகராக யோகி பாபுதான் இருப்பார். ஆனால் இப்போதைய படங்களில் பெரிதாக அவரை பார்க்க முடிவதில்லை. இதனால் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்கள் தொடர்ந்து யோகி பாபுவிற்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.

yogi-babu

ஆனால் ரஜினிகாந்த் வரை பல பெரிய நடிகர்களுடன் நடித்து விட்டதால் இப்போது யோகி பாபு சம்பளத்தை அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த கஜானா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நடந்தது.

அதில் யோகிபாபு கலந்துக்கொள்ளவில்லை. இதுக்குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் யோகிபாபு இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவதற்கு 7 லட்ச ரூபாய் கேட்டார். ஒரு திரைப்படம் என்பது உங்கள் குழந்தை மாதிரி அதன் ப்ரோமோஷனுக்கு வருவது உங்கள் கடமை. இதுக்கூட இந்த நடிகர்களுக்கு புரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

இயக்குனராக களம் இறங்கும் ரவி மோகன்.. ஹீரோ யார் தெரியுமா?.

நடிகர் ரவி மோகன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடந்த சில காலங்களாகவே அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிகமாக வரவேற்புகளே கிடைக்காமல் இருந்து வருகின்றன

பெரும்பாலும் இவரது நடிப்பில் வரும் திரைப்படங்களில் கதைதான் சரியில்லை என ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதனை தொடர்ந்து அவர் நடித்த ப்ரதர், சைரன் போன்ற எந்த திரைப்படமும் பெரிய வெற்றி என்று எதையும் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் நடிகர் ரவி மோகன். அதற்கு பிறகு அவர் தேர்ந்தெடுத்திற்கும் திரைப்படங்களும் முக்கியமான கதை அம்சத்தை கொண்டவை என கூறப்படுகிறது.

இதற்கு நடுவே ரவி மோகனுக்கு திரைப்படங்களை இயக்குவதிலும் ஆர்வம் இருந்து வருகிறது. அடுத்து ஒரு திரைப்படத்தையும் இவர் இயக்க போகிறார் என பேச்சுக்கள் இருந்து வந்தன. அதனை தொடர்ந்து அடுத்து நடிகர் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ஜெயம் ரவி ஒரு திரைப்படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்சமயம் யோகி பாபு பிஸியாக இருப்பதால் தாமதமாகதான் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என பேச்சுக்கள் இருக்கின்றன.

உண்மையான மனுசன்னா உன் குழந்த மேல சத்தியம் பண்ணு.. யோகி பாபுவுக்கு கண்டிஷன் போட்ட பத்திரிக்கையாளர்..!

தமிழ் சினிமாவில் தற்போது பல புதிய நடிகர், நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் நகைச்சுவை நடிகர்களும் அவ்வப்போது அறிமுகம் ஆகிறார்கள்.

அந்த வகையில் காலத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவையும் மக்களுக்கு பிடித்த போக அவர்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன.

இந்த வகையில் தற்போது நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் யோகி பாபு அவரைப் பற்றிய ஒரு செய்தி தற்போது கோடம்பாக்கத்தை அதிர வைத்திருக்கிறது.

யோகி பாபுவுக்கு எதிராக சவால் விட்டிருக்கும் பத்திரிக்கையாளர்

வலைப்பேச்சு என்ற youtube சேனலை பிரபல பத்திரிக்கையாளரான அந்தணன் மற்றும் பிஸ்மி நடத்தி வருகிறார்கள். இவர்கள் நடிகர் யோகி பாபுக்கு எதிராக சவால் விட்டிருப்பது தற்போது சர்ச்சையாகி வருகிறது. இந்நிலையில் யோகி பாபுவுக்கு இவர்கள் சவால் விட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாகி வருகிறது.

வலைப்பேச்சில் யோகி பாபு சில இயக்குனர்களுக்கு டார்ச்சர் கொடுத்து வருவதாக அந்தணன் மற்றும் பிஸ்மி பேசியிருந்தார்கள். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட இயக்குனர்களே எங்களை பேச சொன்னார்கள் என்றும், ஆனால் யார் அந்த இயக்குனர்கள் என வலைப்பேச்சில் கூறவில்லை. இந்த செய்தி யோகி பாபு காதுக்கு செல்ல அதைப்பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் யோகி பாபு பேசியிருந்தது வலைப்பேச்சியில் உள்ளவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியது.

யோகி பாபு பற்றி சீக்ரெட் உடைத்த வலைப்பேச்சு

இவர்களின் பேச்சுக்கு யோகி பாபு பதிலடி கொடுக்க, இதை பார்த்த அந்தணன் மற்றும் பிஸ்மி கோபத்தில் யோகி பாபு பற்றி இதுவரை சொல்லப்படாத அனைத்து செய்திகளையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது ஒரு முறை யோகி பாபு ஒரு பெரிய நடிகரின் கையை தொட்டார் என்றும் அதற்கு அந்த நடிகர் டோன்ட் டச் மீ என்று சொன்ன செய்தி பெரிய அளவில் வைரலாகி வந்தது. ஆனால் அந்த நடிகரின் பெயரை இவர்கள் சொல்லவில்லை.

இந்த செய்தியை யோகி பாபு தான் வலைப்பேச்சியில் சொல்ல சொன்னதாக பிஸ்மியும், அந்தணனும் தெரிவித்தார்கள். நாங்கள் காசு கேட்டதாக அவர் கூறுவது முற்றிலும் பொய். வேண்டுமென்றால் அவரின் குடும்பத்தை விட பெரியதாக நினைக்கும் முருகன் மீது சத்தியம் செய்ய சொல்லுங்கள் என வலைப்பேச்சு சவால் விட்டிருக்கிறார்கள்.

குழந்தையின் மீது சத்தியம் செய்ய தயாரா?

இவ்வாறு கோபமாக பேசிய பத்திரிகையாளர்கள் நாங்களும் வருகிறோம். எங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறோம். அவரின் அவர் குழந்தையை அழைத்து வரச் சொல்லுங்கள் திருத்தணி முருகன் மீது சத்தியம் பண்ண சொல்லுங்கள். அவர் குழந்தையின் மீதும் சத்தியம் பண்ண சொல்லுங்கள். நாங்கள் பணம் கேட்டோமா என்று பிறகு தெரியும் என அவர்கள் கூறினார்கள்.

அவர் தான் பார்ட்னர் என்ற ஒரு திரைப்படத்தில் காசு வாங்கிக்கொண்டு ஷூட்டிங்க்கு வராமல் படக்குழு இவருக்காக காத்திருந்த செய்தி எல்லாம் எங்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் யோகி பாபு, 5 லட்சம் மட்டும் கணக்கில் வாங்கிக் கொண்டு மீதி 20 லட்சத்தை கருப்பு பணமாக தான் வாங்குகிறார்.

இவ்வாறு தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை பிஸ்மி அவர் மீது சுமத்தி வர நடிகர் அஜித் இவரை மிகவும் மோசமாக நடத்தினார் என்று யோகி பாபு இவர்களிடம் கூறினாராம். அந்தணனும், பிஸ்மியும் யோகி பாபுவின் நகைச்சுவை நன்றாகவே இல்லை பல திறமையான நடிகர்களை தமிழ் சினிமா கோபுரத்தில் உட்கார வைத்திருக்கும். அதே நேரங்களில் சில குப்பைகளும் அதில் சென்று போய் ஒட்டிக் கொள்ளும் அப்படிப்பட்ட குப்பைதான் யோகி பாபு என மிகவும் கோபத்தில் பேசி இருக்கிறார்கள்.

மூன்று கடவுள்களை வணங்கும் விஷால்….கேலிக்கு உள்ளாகும் வீடியோக்கள் குறித்து உருக்கமான பதில்!

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர், நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே ஹிட் அடிக்க பின்ன்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து வருகிறார். சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் ஹிட் அடித்துள்ளது.

மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலிலும் விஷால் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்றும்  நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். 

இருந்தும், சமீப காலமாக விஷால் குறித்து பல கேலிகள் ஆளாக்கப்படுகின்றன. mgr பிறந்தநாளை முன்னிட்டு அனைவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட விஷால், சாப்பிடும் முன் சாமி கும்பிட, அப்போது அருகில் இருந்த யோகி பாபு கொடுத்த Reaction பெரும் வைரலானது. 

இந்த நிலையில், ரத்னம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்கு உருக்கமான ஒரு பதிலை அளித்துள்ளார் விஷால். அதாவது, தான் கழுத்தில் அணிந்திருந்த ஜீசஸ் மற்றும் சாமி மாலையை காண்பித்து பின்னர் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டையும் காண்பித்து இது மூன்றும் சாமிதான். 10 வருடமாக செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு அல்லாவும் ஒன்றுதான் சாய்பாபாவும் ஒன்றுதான் ஜீசஸ்சும் ஒன்றுதான். நிறைய பேர் இது குறித்து என்னிடம் கேட்டார்கள் சமீபத்தில் கூட ஒரு பெண் என்னைப் போன்று செய்தது கட்டி வைரல் ஆகியுள்ளார். எனக்கு கேமரா தான் தெய்வம், அதுதான் எனக்கு சோறு போட்டது. கடவுளை நான் பார்த்தது கிடையாது, அந்த கேமரா தான் எனக்கு கடவுள் அந்த கேமரா முன்பு நான் வணங்கும் எல்லா தெய்வங்களும் ஒன்று என்று சொல்வது தான் என்னுடைய நோக்கம்என்று கூறியுள்ளார்.

நான் உன்னை காக்கா பிடிக்கிறேன்னே நினைச்சுக்க!.. யோகி பாபுவிடம் இளவரசு சொன்ன விஷயம்!..

சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக அந்த இடத்தை நிரப்புவதற்கு ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம். அந்த நிலையில் அந்த வெற்றிடத்தை நிரப்பியவர்தான் நடிகர் யோகிபாபு. தமிழ் சினிமாவில் கருப்பான தேகம் கொண்ட நடிகர்களால் சாதிக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்த போதெல்லாம் அதனை பொய் என நிரூபித்த பல நடிகர்கள் உண்டு.

ரஜினிகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு என்ற அந்த கருப்பு நடிகர்கள் வரிசையில் யோகி பாபு முக்கியமானவர். ஏனெனில் பெரும்பாலும் பேசும்போது மக்கள் லட்சணத்தை பற்றி விரிவாக பேசுவார்கள்.

கருப்பாக இருந்தாலும் பெரிய முக லட்சணம் இருந்தால் தான் அவர்கள் சிறப்பான நடிகர்களாக முடியும் என்று பேசுவார்கள். பலரையும் உருவ கேலியும் செய்வார்கள். அப்படி சமூகத்தால் உருவ கேலிக்கு உள்ளாகி தற்சமயம் அதே சமூகத்திடம் ஒரு அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார் நடிகர் யோகி பாபு.

ஆரம்பத்தில் காமெடியனாக நடிக்க துவங்கிய யோகி பாபு பிறகு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் அவருக்கு அதிலும் வெற்றி கிடைத்தது.

அப்படி அவர் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மண்டேலா. மண்டேலா திரைப்படம் அடிப்படையில் சாதிய அடிப்படையிலான கதையைக் கொண்டிருக்கும். அந்த படத்தில் ஒரு முடிவெட்டும் தொழிலாளியாக நடித்திருப்பார் யோகி பாபு.

முடி வெட்டும் பிரிவை சேர்ந்தவர்கள் பொதுவாகவே ஊரைவிட்டு ஒதுக்குப்புறமாகவே வைக்கப்பட்டிருப்பார்கள். அப்படியே வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபுவின் ஒரு ஓட்டை வைத்து படத்தின் கதை செல்லும்.

இந்த திரைப்படம் குறித்து இளவரசு ஒரு பேட்டியில் கூறும் பொழுது நான் அந்த படத்தை பார்த்தவுடனே யோகி பாபுவை நேரில் சந்தித்தேன் அப்பொழுது யோகி பாபுவிடம் ஒரு விஷயத்தை கூறினேன். யோகி பாபு நான் உன்னை காக்கா பிடிக்கிறேன் என்று நீ நினைத்துக் கொள். ஆனால் இந்த திரைப்படத்தில் நீ சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறாய் அப்படியான ஒரு நடிப்பை ஒரு பல வருடம் நடித்த ஒரு பெரும் நடிகர்களால் தான் கொண்டுவர முடியும்.

அதை நீ அசால்டாக செய்திருந்தாய் என்று அவரை நேரில் புகழ்ந்ததாக இளவரசு தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.

இந்த மூஞ்சு எனக்கு தேவைப்படாது!.. யோகி பாபுவை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய தனுஷ் இயக்குனர்..

தமிழில் நகைச்சுவை செய்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் யோகி பாபு. ஆரம்பத்தில் வந்த பொழுது அதிக கேள்விக்கும், கிண்டலுக்கும் உள்ளானாலும் கூட போக போக தனக்கு என ஒரு தனி காமெடி திறனை உருவாக்கிக் கொண்டு அதை வைத்து தற்சமயம் பிரபலமாகி உள்ளார் யோகி பாபு.

சின்ன நடிகர்களில் துவங்கி ரஜினிகாந்த் வரை பெரிய நடிகர்கள் அனைவருடனும் நடித்து வருகிறார் யோகி பாபு. தற்சமயம் பாலிவுட்டில் வெளியான ஜவான் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு.

ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு இயக்குனர் அவரை நேரில் வர சொன்னாராம். அப்போது மிகுந்த மழை பெய்து கொண்டிருந்த காரணத்தினால் யோகி பாபு மழையில் நனைந்து கொண்டே வாய்ப்பு தேடி சென்றுள்ளார்.

அப்பொழுது நனைந்து கொண்டு நின்ற யோகி பாபுவை பார்த்த அந்த இயக்குனர் உன்னிடம் போட்டோ ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுள்ளார். பொட்டோவை யோகி பாபு கொடுத்ததும் ஒரு ஐந்து நிமிடம் அந்த போட்டோவையும் அவரையும் மாற்றி மாற்றி பார்த்துள்ளார்.

சரி கண்டிப்பாக இந்த படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என யோகி பாபு நம்பி இருக்கும் பொழுது இந்த மூஞ்சி எனக்கு பயன்படாது. அதனால் உனக்கு வாய்ப்பில்லை என்று கூறி அனுப்பி உள்ளார். அந்த இயக்குனர் யார் என்று யோகி பாபு பேட்டியில் கூறவில்லை. ஆனால் இது குறித்து கமெண்டில் மக்கள் பதிலளிக்கும் பொழுது பிரபு சாலமன் மைனா திரைப்படத்தை இயக்கும்போது தான் இந்த விஷயத்தை செய்தார் என்று கூறுகின்றனர்.

யோகி பாபு படத்திற்கு க்ளாப் அடித்த விக்னேஷ் சிவன் – படப்பிடிப்பு துவங்கியது!

நமது தமிழ் சினிமாவில் கதாநாயகனை தவிர்த்து மற்ற நடிகர்கள் எல்லாம் எவ்வளவு போராடினாலும் 3 கோடியை தாண்டுவதே சிரமம் என்கிற நிலைதான் உள்ளது.

இதனால் பலரும் கதாநாயகன் ஆவதற்கான முயற்சியையே செய்கின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் கூட கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.

ஒரு சில படங்களில் ஏற்கனவே கதாநாயகனாக நடித்து வந்த நிலையில் தற்சமயம் சன்னிதானம் என்கிற படத்திலும் கூட கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றது.

படத்தின் பூஜைக்காக சபரிமலைக்கு சென்றுள்ளனர் படக்குழுவினர். ஏனெனில் இன்று சபரிமலை இன்று மகரஜோதி நாள் என்பதால் அங்கு சென்று பூஜையை செய்தனர்.

இந்த விழாவில் பங்கு கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் இவர்களின் க்ளாப்பை அடித்து படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.

சந்தானம் பட இயக்குனருடன் இணையும் யோகி பாபு – படக்கதை என்ன தெரியுமா?

சினிமாவிற்குள் பலவகையான கதாபாத்திரமாக உள்ளே வந்தாலும் திரைக்கு வந்த பிறகு அனைவருக்குமே கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். முக்கிய நகைச்சுவை நடிகர்களாக வரும் பலருக்கும் இந்த ஆசை இருப்பதுண்டு.

பழைய காமெடி நடிகரான கவுண்டமணியில் துவங்கி வடிவேலு, சந்தானம் வரை பலரும் கதாநாயகர்களாக நடித்துள்ள நிலையில் தற்சமயம் காமெடி நடிகரான யோகி பாபுவும் கதாநாயகராக சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஏ1 மற்றும் பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜான்சன் அவர்கள் யோகி பாபுவை வைத்து படம் இயக்க போவதாக தகவல்கள் வந்துள்ளன.

இரண்டு ஹிட் படங்கள் கொடுத்த பிறகும் கூட பெரிதாக தயாரிப்பாளர்கள் கிடைக்காத நிலையில் தானே தயாரித்து இந்த படத்தை இயக்குவதாக உள்ளாராம் ஜான்சன்.

இந்த படத்தின் பெயர் மெடிக்கல் மிராக்கல் என வைக்கப்பட உள்ளதாம். படத்தில் யோகிபாபு ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். ஜான்சன் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல நகைச்சுவையான திரைப்படங்களாக இருப்பதால் இந்த படத்திற்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.