லட்சங்களில் கொடுத்தால்தான் ப்ரோமோஷனுக்கு வருவார்.. யோகி பாபுவை வச்சு செய்த தயாரிப்பாளர்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் யோகிபாபு இருந்து வருகிறார். பெரும்பாலும் யோகிபாபு நடிக்கும் திரைப்படங்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கதான் செய்கிறது. ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு இருந்த அளவிற்கான வரவேற்பு இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
முன்பெல்லாம் எந்த படத்தை பார்த்தாலும் அதில் காமெடி நடிகராக யோகி பாபுதான் இருப்பார். ஆனால் இப்போதைய படங்களில் பெரிதாக அவரை பார்க்க முடிவதில்லை. இதனால் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் இயக்குனர்கள் தொடர்ந்து யோகி பாபுவிற்கு வாய்ப்பளித்து வருகின்றனர்.

ஆனால் ரஜினிகாந்த் வரை பல பெரிய நடிகர்களுடன் நடித்து விட்டதால் இப்போது யோகி பாபு சம்பளத்தை அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த கஜானா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நடந்தது.
அதில் யோகிபாபு கலந்துக்கொள்ளவில்லை. இதுக்குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் யோகிபாபு இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கு வருவதற்கு 7 லட்ச ரூபாய் கேட்டார். ஒரு திரைப்படம் என்பது உங்கள் குழந்தை மாதிரி அதன் ப்ரோமோஷனுக்கு வருவது உங்கள் கடமை. இதுக்கூட இந்த நடிகர்களுக்கு புரியவில்லை என அவர் கூறியுள்ளார்.