Tag Archives: ப்ரதீப் ரங்கநாதன்

இன்ஜினியர் மாணவனாக களம் இறங்கும் பிரதீப் ரங்கநாதன்! – அடுத்த படத்தின் அப்டேட்!

சமீபத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பெரும் ஹிட்டை கொடுத்தது. 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமான அளவில் ஹிட் கொடுத்தது.

இதையடுத்து பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் ஒரே படத்தில் உயர்ந்துவிட்டது. அவரது அடுத்த படத்திற்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் நாங்கள் தயாரிக்கிறோம் என வரிசையில் நின்றுக்கொண்டுள்ளன. நடிகர் ரஜினியை வைத்து பிரதீப் ஒரு திரைப்படம் செய்ய போகிறார் எனவும் அரசல் புரசளாக செய்திகள் வலம் வந்து கொண்டுள்ளன.

ஏற்கனவே ரெட் ஜெயண்ட் மூவிஸ் இன்னும் பல நிறுவனங்கள் தங்களுக்கு படம் இயக்கி தர வேண்டும் என பிரதீப் ரங்கநாதனிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக இயக்க போகிறார் என கூறப்படுகிறது.

இந்த படத்திலும் பிரதீப் ரங்கநாதனே கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவர் ஒரு இன்ஜினியர் மாணவனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளன. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை வசூலை ப்ரேக் செய்த லவ் டுடே? –  முதல் படமே இந்த லெவலா?

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் லவ் டுடே. இந்த படத்தில் இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

நடிகை இவானா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரு காதலர்கள் தங்கள் மொபைலை மாற்றிக்கொள்வதை அடிப்படையாக கொண்டு நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது இந்த படம். ப்ரதீப் ரங்கநாதன் இயக்கும் இரண்டாவது படம் லவ் டுடே. 

ஆனால் அறிமுக கதாநாயகனாக அவர் களமிறங்கி இதுவே முதல் படமாகும். 5 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த படம் 50 கோடியை தாண்டி ஹிட் அடித்தது. எனவே இந்த படத்தை தெலுங்கு மொழிக்கு டப்பிங் செய்து தெலுங்கிலும் வெளியிட்டனர்.

தெலுங்கில் வெளியாகி மூன்றே தினங்களில் 6.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது லவ் டுடே. இதற்கு முன்னர் அஜித் நடித்த வலிமை படமும் தெலுங்கில் வெளியானது. ஆனால் வலிமை படம் மூன்று நாட்களில் 6 கோடிதான் வசூல் செய்திருந்தது.

இந்த நிலையில் ப்ரதீப் அறிமுக கதாநாயகனாக களமிறங்கி அதற்குள் இப்படி ஒரு வெற்றியை கொடுத்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.

இனிமேல் நானே ஹீரோ.. நானே டைரக்டர்! – ப்ரதீப் ரங்கநாதன் முடிவு?

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘கோமாளி’. இந்த படத்தை ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார்.

தற்போது ப்ரதீப் ரங்கநாதனே இயக்கி, நடித்து வெளியாகியுள்ள படம் ‘லவ் டுடே’. இந்த படம் பெரும் ஹிட் அடித்துள்ளது.

இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது.ஆனால் முதலில் லவ் டுடே கதையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தில் சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருந்தாராம் ப்ரதீப்.

ஆனால் ஸ்டுடியோ க்ரீன் கால தாமதம் செய்ததால் ஏஜிஎஸ் தயாரிப்பில் இந்த படம் வெளியாகியுள்ளது.அதனால் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திற்கு தனது அடுத்த படத்தை இயக்கி, அவரே நடிக்கவும் உள்ளாராம் ப்ரதீப் ரங்கநாதன்.

தற்போது லவ் டுடே மூலமாக அவருக்கு ஹீரோவாக நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதால், அடுத்தடுத்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ப்ரதீப் ரங்கநாதன் திட்டமிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.