Tag Archives: மங்கி டி லூஃபி

தமிழில் வெளியான ஒன் பீஸ் –  சீரிஸின் கதை என்ன? சுருக்கமான அறிமுகம்!..

ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமே கார்ட்டூன்களில் பிரபலமான சீரிஸாக ஒன் பீஸ் உள்ளது. இது 1997 ஆம் ஆண்டு முதலே கார்ட்டூனாக வந்து கொண்டிருந்தது. இணையம் வளர்ந்ததை அடுத்து ஜப்பான் அனிமேக்கள் உலகம் முழுக்க பிரபலமானதை அடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் அவற்றின் மீது ஆர்வம் காட்டி வந்தது.

இந்த நிலையில் ஒன் பீஸ் சீரிஸை லைவ் ஆக்‌ஷனாக வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ். ஒரு சிறப்பான அட்வெஞ்சர் கதையாக ஒன் பீஸ் அமைந்துள்ளது.

சீரிஸின் கதை:

இந்த கதை பைரேட் எனப்படும் கடற் கொள்ளையர்களை பற்றிய கதை. பைரேட்களின் ராஜா என அழைக்கப்படும் கேப்டன் கோல்டு ரோஜர், ஒரு நாள் மரேன் ஆட்களிடம் மாட்டி கொள்கிறார். அவர் இறப்பதற்கு முன்பு ஒன் பீஸ் என்று ஒரு புதையலை கடலில் ஒளித்து வைத்திருப்பதாக கூறுகிறார்.

அதிலிருந்து மக்களில் பலர் பைரேட்டாக மாறி ஒன் பீஸை தேட துவங்குகின்றனர். ஆனால் யாருக்குமே இது கிடைக்கவில்லை. இந்த நிகழ்வு நடந்து 22 வருடங்களுக்கு பிறகு மங்கி டி லூஃபி என்னும் சிறுவன் பைரேட் ஆகிறான்.

அவன் அந்த ஒன் பீஸ் புதையலை தேடி செல்கிறான். புதையலை ஒருவர் தனியாக தேடி செல்ல முடியாது அல்லவா!.. எனவே அவன் அவனுக்கான குழுவை தேடுகிறான். அவனுக்கு நாமி, ரோரோனா சோரோ, யூசஃப், சஞ்சி ஆகிய நண்பர்கள் கிடைக்கின்றனர்.

இவர்கள் உதவியுடன் பல ஆபத்துகளை தாண்டி மங்கி டி லூஃபி எப்படி ஒன் பீஸை கண்டறிய போகிறான் என்பதே முழுக்கதையாகும். அதன் ஒரு துவக்கமாக இந்த முதல் சீசன் அமைந்துள்ளது.