Tag Archives: ஹன்சிகா

தம்பி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத!.. கேள்வி கேட்ட கல்லூரி மாணவனுக்கு மூக்குடைக்கும் விதம் பதிலளித்த ஹன்சிகா!..

ஹிந்தியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து அதிக பிரபலமடைந்தவர் நடிகை ஹன்சிகா. இவர் சிறு வயது முதலே பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் நடித்த ஷக்கலக்க பூம் பூம் என்னும் தொடர் விஜய் டிவியில் கூட ஒளிப்பரப்பானது.

அந்த தொடரில் பத்து வயது சிறுமியாக இருப்பார் ஹன்சிகா. இவருக்கு தமிழில் திருப்புமுனையான அமைந்த திரைப்படம் எங்கேயும் காதல். இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது கொலுக்கு மொழுக்கு அழகுடன் ரசிகர்கள் பலரை கவரும் வண்ணம் இருந்தார்.

hansika

சொல்லப்போனால் அவரை சின்ன குஷ்பு என்றே பலரும் அழைத்து வந்தனர். அதற்கு பிறகு சினிமாவில் வளர துவங்கிய பிறகு தற்சமயம் உடல் எடையை குறைத்துள்ளார் ஹன்சிகா. இதனால் ஹன்சிகாவின் முக அமைப்பும் மாறியது. ரசிகர்கள் பலருக்கே இது ஹன்சிகாதானா என சந்தேகம் வரும் அளவிற்கு அவருடைய தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது.

இந்த நிலையில் இடையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார் ஹன்சிகா. அந்த நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி கேட்ட மாணவர் ஒருவர் எங்கேயும் காதல் திரைப்படத்தில் நடித்தப்போது பேபி டால் போல அழகாக இருந்தீர்கள்.

இப்போது ஏன் உடல் எடையை இப்படி குறைத்துவிட்டீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஹன்சிகா சொல்றேன்னு தப்பா நினைச்சிக்க வேண்டாம். குண்டா இருக்குறவங்களை பழிச்சி பேசணும்னு இதை சொல்லலை. ஆனால் உடல் பருமனோட இருக்கிறது நல்ல விஷயம் கிடையாது. உடல் எடையை சரியா பராமரிக்கிறதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியம். அழகை பார்த்து ஆரோக்கியத்தை விட முடியாது என பதிலளித்துள்ளார் ஹன்சிகா.

இன்னமும் அழகு குறையல.. புடவையிலேயே ரசிகர்களை எகிற செய்யும் ஹன்சிகா!..

Actress hansika : தமிழ் சினிமாவில் அறிமுகமான உடனே பிரபலமான நடிகைகளில் ஹன்சிகா முக்கியமானவர்.

இவர் ஏற்கனவே ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில்தான் இவருக்கு வாய்ப்பு வரவேற்பும் கிடைத்தது.

தமிழில் எங்கேயும் காதல் திரைப்படம் இவரது வாழ்க்கையை மாற்றி அமைத்த திரைப்படம் என்று கூறலாம். அதன் பிறகு முன்னணி நடிகரான விஜய், தனுஷ் போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் ஹன்சிகா.

இந்த நிலையில் கொஞ்ச காலத்திலேயே அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்து விட்டது. இருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்ததால் தற்சமயம் வெப் சீரிஸ் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஹன்சிகாவிற்கு திருமணமான பிறகு பெரிதாக அவரைப் பற்றி பேச்சு எதுவும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகும் உடலை சரியாக பராமரித்து வரும் ஹன்சிகா ரசிகர்கள் மனம் கவரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

நீதாண்டா சொல்லி கொடுத்துருப்ப? –  சிவகார்த்திகேயனை ஏர்ஹோஸ்டரிடம் கோர்த்து விட்ட ஹன்சிகா

தமிழில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்சமயம் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் சிவகார்த்திகேயன் படங்கள் ஹிட் அடிப்பதால் தொடர்ந்து சம்பளத்தையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

தற்சமயம் இவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் வெளியானது. இது எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை. சிவக்கார்த்திகேயன் வளர்ந்து வந்த காலத்தில் நடித்த திரைப்படம் மான் கராத்தே. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்திருந்தார்.

அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துக்கொள்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். படப்பிடிப்பு சமயத்தில் பல நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்படியாக பல முறை ஹன்சிகா, சிவகார்த்திகேயன் எல்லோரும் ஏரோப்ளேனில் பயணித்துள்ளனர்.

அப்படி ஒருமுறை பயணிக்கும்போது ஹன்சிகா அங்கு சென்று கொண்டிருந்த ஏர்ஹோஸ்டரை திடீரென அழைத்தார். பிறகு ஏர்ஹோஸ்டரை பார்த்து சார் ப்ளைட்டை திருப்ப முடியுமா? என கேட்டுள்ளார். அதற்கு ஏர்ஹோஸ்டர் ஏன் என்ன பிரச்சனை? என கேட்டுள்ளார். இல்லை என் சார்ஜரை மறந்துவிட்டேன்? என கூறியுள்ளார் ஹன்சிகா.

உடனே அந்த ஏர்ஹோஸ்டர் பக்கத்தில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயனை நீதான் இப்படி சொல்லிக் கொடுத்துயா? என்பது போல பார்த்துள்ளார். இந்த விஷயத்தை சிவகார்த்திகேயன் பேட்டியில் விளக்கினார்.