Tag Archives: actor vishal

என்னை யாராச்சும் காப்பாத்துங்க.. கதறி அழுத விஷால் பட நடிகை.. அட கொடுமையே..!

வெகு காலங்களாகவே சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா. 2005 ஆம் ஆண்டில் இருந்தே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில்தான் முயற்சி செய்தார்.

ஆனால் அவருக்கு பாலிவுட் சினிமாவில் அவ்வளவாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அடுத்து அவர் மற்ற சினிமாக்களில் முயற்சி செய்து வந்தார். முதல் படம் பாலிவுட்டில் தோல்வியடைந்ததை அடுத்து தெலுங்கு சினிமாவில் முயற்சி செய்தார் தனுஷ் ஸ்ரீ தத்தா.

2010 ஆம் ஆண்டு தீராத விளையாட்டு பிள்ளை திரைப்படத்தில் இவர் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகும் கூட தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை தனுஷ் ஸ்ரீ தத்தா.

அதில் அவர் தன்னுடைய வீட்டிலேயே தான் கொடுமைக்கு ஆளாவதாகவும் தனக்கு உதவும்படியும் கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டில் அப்படி என்னதான் நடக்கிறது என அதுக்குறித்து இப்போது பேசி வருகின்றனர் ரசிகர்கள்.

விஷால் இவ்வளவு பேசுறதுக்கு அந்த ஒரு விஷயத்தை சரி பண்ண சொல்லுங்க போதும்.. நேரடியாக கூறிய சினிமா விமர்சகர்..!

சமீப காலங்களாகவே தொடர்ந்து சினிமா விமர்சகர்களை சினிமா துறையை சேர்ந்தவர்கள் எதிரி போல பார்க்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏனெனில் ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தார்கள் என்றால் அது அந்த படத்தின் வசூலையே அது பாதிக்கிறது.

இதனால் தயாரிப்பாளர்களும் திரையரங்க முதலாளிகளும் தொடர்ந்து சினிமா விமர்சனங்களுக்கு எதிரான மனநிலையை கொண்டு இருக்கின்றனர். இதற்கு நடுவே தற்சமயம் நடிகர் விஷாலுமே கூட சினிமா விமர்சகர்கள் குறித்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு யாருமே விமர்சனம் செய்யக்கூடாது. விமர்சனம் செய்யவும் அவர்களை அனுமதிக்க கூடாது என்பதாக பேசியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த பிரபல தமிழ் சினிமா விமர்சனரான பிரசாந்த் கூறும் பொழுது திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுக்க கூடாது என்று கூறுவதே முதலில் ஒரு ஜனநாயக முறை கிடையாது.

கண்டிப்பாக அது நடந்து கொண்டுதான் இருக்கும் நீங்கள் மிக எளிதாக ஒரு திரைப்படத்தை நல்லபடியாக எடுத்து விட்டீர்கள் என்றாலே போதும் அந்த திரைப்படம் அனைத்தையும் தாண்டி வெற்றியை கொடுத்து விடும் எனவே விமர்சனங்களை நிறுத்துவதற்கு பதிலாக அதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறி இருக்கிறார் இட்ஸ் பிரசாந்த்.

இப்போ அது நடக்கல.. விஷால் வெளியிட்ட வீடியோ… ஆனாலும் தெளிவு இல்லை.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர். அவரது நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மதகஜ ராஜா திரைப்படம் தற்சமயம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. அந்த சந்திப்பில் கலந்துக்கொண்ட விஷால் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். அவர் கையில் மைக் வைத்து பேசும்போது அவர் கை மிகவும் நடுங்கியது.

அதனை பார்த்த பலரும் விஷால் மிகப்பெரும் உடல் பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளார் என்றெல்லாம் பேசி வந்தனர். ஆனால் விஷால் கடுமையான நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அதனால்தான் அவர் கை நடுக்குவதாகவும் அவர் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் பேட்டியில் பேசினார் விஷால். அதில் அவர் கூறும்போது கடந்த ஒரு வாரத்தில் என்னை பற்றிதான் பேச்சுக்கள் இருந்தன. ஏதோ மைக்கை பிடித்தாலே என் கை நடுங்குகிறது என்று பேசினார்கள். இப்போது பாருங்கள் என் கை எவ்வளவு ஸ்டெடியாக இருக்கிறது என்று.

அதே போல நிறைய பேர் எனது ஆரோக்கியம் குறித்து தொடர்ந்து கேட்டு வந்தனர். என் மீது பிரியமுள்ள நபர்கள் இவ்வளவு பேர் உள்ளனர் என அப்போதுதான் தெரிந்தது என கூறியிருந்தார் விஷால்.

ஆனாலும் அவரது குரலில் பெரிதாக தடுமாற்றம் இருப்பதை பார்க்க முடிந்தது.

 

அந்த கம்பெனிதான் எங்களை வளர்த்துச்சு.. அநியாயமா பழிய போடாதீங்க.. விஷால் குறித்து விசித்திரா காட்டம்

சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் நடந்து வரும் நிலையில், தற்போது பல நடிகர்களும், நடிகைகளும் அதற்கு குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஹேமா கமிட்டியின் மூலம் வெளிவந்த பல பிரச்சனைகள் குறித்து தமிழ் சினிமா துறையில் இருக்கும் நடிகர்களிடமும், நடிகைகளிடமும் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவலானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் விஷாலிடம் கேட்கும் போது அவர் கொடுத்த தகவலால் பல நடிகைகளும் கடுப்பாகி அதற்கு பதிலடி கொடுத்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதி

எந்த துறையாக இருந்தாலும் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு சினிமா மட்டும் விதிவிலக்கா என்ன? என்று கூறும் படியாக தற்போது சினிமா துறையில் உள்ள நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு கேரளா நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கேரளா அரசு ஹேமா கமிட்டி என்ற குழுவை அமைத்து அதன் மூலம் நடிகைகளுக்கு நடைபெறும் குற்றங்களை பதிவு செய்து வந்தது. தற்சமயம் கேரள கமிட்டியின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையையும் கதிகலங்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து பல்வேறு நடிகர்களும், நடிகைகளும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது விஷால் கூறி இருக்கும் தகவலுக்கு நடிகை விசித்ரா கூறிய பதிலடி பார்க்கலாம்

விஷால் VS விசித்ரா

நடிகைகளுக்கு சினிமா துறையில் ஏற்படும் வன்முறைக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள்கேட்டதற்கு.. விஷால் கூறியது, “நடிகைகளை தவறாக அழைக்கும் நபர்களுக்கு அவர்கள் செருப்பைக் கொண்டு அடிக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு விசித்ரா “ஒரு சினிமா துறையில் அறிமுகமாகும் புதுமுக நடிகையை மற்ற நபர்கள் பாலியல் ரீதியாக அணுகும் போது அவர் அனைவருக்கும் முன்பு அவரை செருப்பால் அடித்தால் அடுத்தது அந்த பெண்ணிற்கு யார் பாதுகாப்பு கொடுப்பார்” நடிகர் சங்கத்தில் இருக்கும் இவர் வந்து “அந்த பெண்ணின் படப்பிடிப்பு முடியும் வரை உடன் இருப்பாரா. அந்த நடிகையின் எதிர்கால வாழ்க்கை என்ன ஆகுவது” என கேள்வி கேட்டிருக்கிறார்.

மேலும் விசித்ராவிடம் பத்திரிக்கையாளர்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்து தானே அவர் பேசினார் ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள்? என கேட்டதற்கு. எனக்கு “பாலக்காட்டில் அவ்வாறு ஒரு சம்பவம் நடக்கும்போது நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு நடந்துவற்றை காமிக்கும் போதே எனக்கு எதுவும் நியாயம் கிடைக்கவில்லை ” அவ்வாறு இருக்கும்போது நடிகைகள் செருப்பைக் கொண்டு அடித்தால் அந்தப் பெண்கள் அடுத்து எதிர்காலத்தில் இந்த துறையில் எவ்வாறு நிலைத்திருப்பார்கள் என்ற கேள்வியை அவர் முன் வைத்திருக்கிறார்.

மேலும் விஷால் நடிகைகளை “சில உப்புமா கம்பெனிகள் ஏமாற்றுகிறார்கள் ” எனக் கூறினார். இதற்கு விசித்ரா பதிலடி கொடுக்கும் விதமாக ” பொதுவாக எல்லா நிறுவனங்களையும் உப்புமா கம்பெனி என்று கூறக்கூடாது ” ஏனென்றால் அந்த உப்புமா கம்பெனிதான் என்னைப் போன்ற நடிகைகளை வளர்த்து விட்டது.. அஜித் போன்ற முன்னணி நடிகையை வளர்த்து விட்டது என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

நீங்க பெரிய ஒழுங்கா.. பாலியல் விஷயத்தில் விஷாலுக்கு விழுந்த அடி.. கேள்வி கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!

தற்போது சினிமா துறையில் நடிகைகளுக்கு ஏற்படும் அவலங்கள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினை நாளுக்கு நாள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென் இந்திய சினிமாவையே கதிகலங்க வைத்திருக்கும் சம்பவம் என்றால், தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையில் இருந்து வெளிவந்த தகவல் தான்.

இந்தச் செய்தி தமிழ் சினிமா வரை எதிரொலித்து கொண்டிருக்கும் நிலையில் பத்திரிக்கையாளர்கள் இது குறித்து தமிழ் நடிகர்களிடம், நடிகைகளிடம் கேள்வி கேட்கும் போது அவர்கள் கொடுக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இது குறித்து கேள்வி கேட்கும்போது அவர் விஷால் பற்றி கூறிய ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமா துறையை அதிரச்செய்த சம்பவம்

சினிமாவில் சாதிப்பதற்காக நடிகைகள் பல கஷ்டங்களை கடந்து வரும் நிலையில் சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அவர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய பிரச்சினை கொடுத்து வருவது அனைத்து மொழி சினிமா துறையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மலையாள திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் பிரபல மலையாள சினிமா நடிகர் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மலையாள சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு குழு ஒன்றை கேரளா அரசு அமைத்தது . இதன் மூலம் நடிகைகளின் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை வெளிவந்து கேரளா சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பல முக்கிய நடிகர்களும் இதில் சிக்கியுள்ள நிலையில், மலையாள சூப்பர் ஸ்டாரின் மீதும் புகார்கள் எழுந்து வருகிறது.

விஷாலை சீண்டிய லட்சுமி ராமகிருஷ்ணன்

இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் விஷாலிடம் கேட்கும்போதும் அதற்கு அவர் கோபமான பதிலையும் அளித்திருந்தார். இது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடிகைகளுக்கு நடக்க கூடாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் விஷால் இவ்வாறு தெரிவித்திருக்கிறார் உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டதற்கு, முதலில் அவரை நடிகர் சங்கத்தை ஒழுங்குபடுத்த சொல்லுங்கள்.

ஒரு பிரச்சனை என்று பெண்கள் முன் வந்து கூறும் போது நடிகர் சங்கத்தை அணுகுவதற்கு எந்த ஒரு தயக்கமும், அச்சமும் இல்லாமல் இருக்கிறார்களா? என்ற கேள்வியை அவரிடம் கேளுங்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் விஷாலிடம் சில கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்.

தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், விஷால் மீது பல கலவையான விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.

தொடர்ந்து வரும் அரசியல் தொல்லைகள்!.. காலையிலேயே காண்டான விஷால்!..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து வரும் திரைப்படம் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். ஏற்கனவே ஹரி விஷாலை வைத்து தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

ஹரி, விஷால் காம்போவை பொறுத்தவரை அது ஒரு வெற்றி காம்போவாகவே இருந்து வருகிறது. இன்று ரத்னம் திரைப்படம் திரையில் வெளியான நிலையில் சில பிரச்சனைகளை ரத்னம் திரைப்படம் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரத்னம் திரைப்படத்திற்காக பேட்டி கொடுத்தப்போது ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தோடு தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அதுதான் தற்சமயம் அவரது படத்திற்கு குறைவான திரையரங்கம் கிடைக்க காரணம் என ஒரு பக்கம் பேச்சு உள்ளது.

ratnam

மறுப்பக்கம் கில்லி திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதில் திரையரங்குகளுக்கு உரிமை தொகையும் அதிகமாக இருப்பதால அவர்கள் விஷால் படத்தை வெளியிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடுப்பான விஷால் காலையிலேயே சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் எந்த பயமும் இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து சென்று கொண்டுள்ளது. இந்த வருடம் ராட்டினத்தில் சுற்றுவது போல்தான் தயாரிப்பாளர்களின் நிலை உள்ளது. என்னை போன்ற போராளியை உங்களால் சாய்க்க முடியாது. தாமதமாக கிடைத்தாலும் நீதி கிடைத்தே தீரும்.

இங்கு யாரும் பொழுதுப்போக்குக்காக படம் தயாரிக்க வரவில்லை. அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. அது வாழ்வதற்கு படம் ஓட வேண்டும் என கூறியுள்ளார் விஷால்.

இந்த பதிவு தற்சமயம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மூன்று கடவுள்களை வணங்கும் விஷால்….கேலிக்கு உள்ளாகும் வீடியோக்கள் குறித்து உருக்கமான பதில்!

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர், நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார். இவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் செல்லமே ஹிட் அடிக்க பின்ன்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து வருகிறார். சமீபத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் ஹிட் அடித்துள்ளது.

மேலும், இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் திரைப்படத் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலிலும் விஷால் அணி தான் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறது. தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்றும்  நடிகர் விஷாலை அழைக்கிறார்கள். 

இருந்தும், சமீப காலமாக விஷால் குறித்து பல கேலிகள் ஆளாக்கப்படுகின்றன. mgr பிறந்தநாளை முன்னிட்டு அனைவருடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட விஷால், சாப்பிடும் முன் சாமி கும்பிட, அப்போது அருகில் இருந்த யோகி பாபு கொடுத்த Reaction பெரும் வைரலானது. 

இந்த நிலையில், ரத்னம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இது குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்கு உருக்கமான ஒரு பதிலை அளித்துள்ளார் விஷால். அதாவது, தான் கழுத்தில் அணிந்திருந்த ஜீசஸ் மற்றும் சாமி மாலையை காண்பித்து பின்னர் கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட்டையும் காண்பித்து இது மூன்றும் சாமிதான். 10 வருடமாக செய்து கொண்டிருக்கிறேன்.

எனக்கு அல்லாவும் ஒன்றுதான் சாய்பாபாவும் ஒன்றுதான் ஜீசஸ்சும் ஒன்றுதான். நிறைய பேர் இது குறித்து என்னிடம் கேட்டார்கள் சமீபத்தில் கூட ஒரு பெண் என்னைப் போன்று செய்தது கட்டி வைரல் ஆகியுள்ளார். எனக்கு கேமரா தான் தெய்வம், அதுதான் எனக்கு சோறு போட்டது. கடவுளை நான் பார்த்தது கிடையாது, அந்த கேமரா தான் எனக்கு கடவுள் அந்த கேமரா முன்பு நான் வணங்கும் எல்லா தெய்வங்களும் ஒன்று என்று சொல்வது தான் என்னுடைய நோக்கம்என்று கூறியுள்ளார்.

தளபதியின் வழியில் அடுத்து புரட்சி தளபதி!.. களத்தில் இறங்கும் விஷால்!.. அடுத்த சம்பவம் ரெடி!..

Actor Vishal : வெகு நாட்களாகவே கட்சி துவங்க வேண்டும் என்று நினைத்து வந்த நடிகர் விஜய் தற்சமயம் தமிழக வெற்றி கழகம் என்கிற கட்சியை துவங்கி இருக்கிறார். இந்த கட்சி பெயரில் எழுத்துப் பிழை உள்ளது என்று சில பிரச்சினைகள் இருந்து வந்தது. ஆனால் அது ஒன்றும் பெரிய பிரச்சனையாக மாறவில்லை.

அதனை தாண்டி விஜய்க்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் அதே சமயத்தில் அவருக்கு நேர்மறையான விமர்சனங்களும் வந்து கொண்டுள்ளன. முக்கியமாக அரசியல் தலைவர்கள் பலரும் விஜய்யின் வரவை ஆதரித்திருக்கின்றனர்.

இன்னும் சிலர் அவர் பாஜகவின் ஆதரவில்தான் கட்சிக்கு வந்திருக்கிறார் என்று பேசுகின்றனர். திமுகவிற்கு எதிரான ஒரு கழகமாகத்தான் தமிழக வெற்றி கழகம் இருக்கும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் விஜய்யை பொருத்தவரை தற்சமயம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை மேலும் நாடாளுமன்ற தேர்தலிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

நடிகர்கள் கட்சி துவங்குவது என்பது தமிழ்நாட்டில் ஒன்றும் புதிது கிடையாது இது எப்போதும் நடந்து வரும் ஒரு விஷயமாகும். அந்த வகையில் தற்சமயம் புரட்சி தளபதி விஷாலும் கட்சி துவங்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. விஜய்யின் மக்கள் இயக்கம் போலவே விஷாலும் ஒரு இயக்கம் நடத்தி வருகிறார்.

தற்சமயம் அதனால் அந்த ரசிகர் கூட்டத்தை கொண்டு அவரும் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஷாலுக்கு அரசியல் மீது அதிக நாட்டம் உண்டு தொடர்ந்து அரசியல் குறித்து பேசி வருபவர் விஷால் என்பதால் அவர் கட்சி துவங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்காது என்கின்றனர் சினிமா துறையினர்!.