Actress Anjali : தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெரும் படங்களாக இருக்கும்.
திரையரங்கில் வெளியாகும் அதே திரைப்படம் வெளியாகி சில நாட்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு வரும் வரை மக்கள் பெரிதாக அதை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் சின்னத்திரைக்கு வந்த பிறகு நல்ல வெற்றி கொடுத்திருக்கும்.
அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு திரைப்படம்தான் அங்காடித்தெரு. சென்னையில் டி நகர் டி நகரில் பணிபுரியும் பணியாளர்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை வெளிக்கொணரும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அங்காடித்தெரு.
இந்த திரைப்படம் முக்கியமாக துணிக்கடைகளில் எவ்வளவு அதிகமான வேலைப்பளுவிற்கு நடுவில் அவர்கள் வாழ்கின்றனர் என்பதை விளக்கி இருக்கும். இதில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக இயக்குனர் வெங்கடேசன் நடித்திருந்தார்.
நடிகருக்கே ஷாக் கொடுத்த காட்சி:
இயக்குனர் வசந்தபாலன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் ஒரு காட்சியில் நடிகை அஞ்சலியை ஒரு திரைக்கு மறுபக்கம் தள்ளிவிட்டு திரையை மூடுவது போன்ற காட்சி இருக்கும். அந்த காட்சியில் வெங்கடேசனை அடிக்க சொன்ன பொழுது அதற்கு அடுத்த காட்சி என்னவென்பதை அவரிடம் கூறவே இல்லை.
அவரும் சரி என்று நடித்து விட்டார் இதோடு இந்த காட்சி முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார் இயக்குனர். உடனே வெங்கடேஷிற்கு சந்தேகமாகிவிட்டது காட்சியின் முடிவு என்னவென்று இறுதிவரை தெரியவில்லையே என்று அவர் யோசித்து இருக்கிறார்.
பிறகு உதவி இயக்குனரை அழைத்து இதற்கு அடுத்த காட்சி என்ன என்று கேட்கும் பொழுது உதவி இயக்குனரும் கூறுவதற்கு மறுத்திருக்கிறார் பிறகு இயக்குனரிடம் சென்று இதற்கு பிறகு வரும் காட்சி என்ன என்று கேட்ட பொழுதுதான் அஞ்சலியிடம் வெங்கடேஷ் தவறாக நடந்து கொண்டதாக அந்த காட்சி அமைக்கப்பட்டு இருப்பது அவருக்கு தெரிந்தது.
தன்னை மக்கள் திட்டி தீர்க்கும் விதமாக அல்லவா இவர் காட்சிகள் வைத்திருக்கிறார் என்று பதறியிருக்கிறார் வெங்கடேஷ். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.