Tag Archives: Anjali

தேவையில்லாமல் வாயை விட்ட அஞ்சலி.. மேடையிலேயே பழி தீர்த்த விஜய் ஆண்டனி.!

அங்காடி தெரு, கற்றது தமிழ் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பெரும்பாலும் நடிகைகள் தங்களது அழகை காட்டிதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்துள்ளனர்.

சில நடிகைகள்தான் கருப்பாக இருந்தாலும் கூட தனிப்பட்ட நடிப்பை காட்டி அதன் மூலமாக வாய்ப்பை பெறுகின்றனர். அப்படியான நடிகைகளில் நடிகை அஞ்சலி மிக முக்கியமானவர். ஆனாலும் கூட அஞ்சலிக்கு உடல் எடை அதிகரித்த காரணத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் போனது.

இந்த நிலையில் 12  வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த மதகஜராஜா என்கிற திரைப்படம் தற்சமயம் திரையில் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

இதுக்குறித்து மேடையில் பேசிய அஞ்சலி அதில் சிறப்பாக இசையமைத்த விஜய் ஆண்டனி குறித்து பேசாமல் விஷாலை புகழ்ந்து பேசியிருந்தார். விஷால் பாடிய ஒரு பாடலுக்காகவே மக்கள் இப்போது மதகஜராஜாவை பார்க்க செல்வதாக அவர் கூறினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய விஜய் ஆண்டனி, “விஷால் பாடியதை கேட்டு கருநாடக இசையே ஸ்தம்பித்து விட்டது. ஒருவருக்கு கருநாடக சங்கீதம் கற்றுக்கொள்ள 3 வருடங்களாவது தேவைப்படும்.  ஆனால் விஷால் உடனே அந்த பாடலை பாடினார்.

இதற்காக விஷாலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் எங்கள் பெயரை கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பேசியிருந்தார் விஜய் ஆண்டனி.

நடிகைகள் கிட்ட இந்த மாதிரி நடந்துக்குறது தப்பு!.. அஞ்சலி விஷயத்தில் பாலய்யாவை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக பிரபலமானவர் நடிகை அஞ்சலி. அதன் பிறகு அவர் நடித்த அங்காடி தெரு மாதிரியான சில திரைப்படங்கள் தமிழில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

கருப்பாக பார்ப்பதற்கு ஊர்க்கார பெண் மாதிரி இருந்த காரணத்தினாலேயே அஞ்சலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்கள் எல்லாம அவருக்கு வரவேற்பை பெற்று தந்தன.

தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு:

ஆனால் சில காலங்களில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார் நடிகை அஞ்சலி. அதற்கு பிறகு மற்ற மொழிகளில் நடிக்க துவங்கினார். வெகு காலங்களுக்கு பிறகு தற்சமயம் இயக்குனர் ராம் இயக்கத்தில் தயாரான ஏழு மலை ஏழு கடல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அஞ்சலி.

இந்த நிலையில் தெலுங்கில் சமீபத்தில் ஒரு ஐட்டம் பாடலில் நடனமாடியது மூலமாக அங்கு பிரபலமானார் அஞ்சலி. இதனையடுத்து அங்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற திரைப்படத்தில் அஞ்சலி நடித்துள்ளார்.

வெளியீட்டு விழா:

இந்த படத்தின் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கின் பிரபல நடிகரான பாலகிருஷ்ணா வந்திருந்தார். அவர் மேடையில் அஞ்சலியிடம் மோசமாக நடந்துக்கொண்டார். பொதுவாக பெண்கள் விஷயத்தில் பாலகிருஷ்ணா மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

https://twitter.com/OutOfContextTel/status/1795779182082785657

இதற்கு நடுவே இன்னமும் கூட இப்படி ஏதாவது ஒன்றை இவர் செய்துகொண்டு இருக்கிறாரே என அவரை விமர்சித்து வருகின்றனர்.

அஞ்சலியை அழைச்சிட்டு போய் ஸ்கீரினை இயக்குனர் மூட சொன்னார்!.. நானும் செஞ்சேன்.. கடைசியில் சிக்கிக்கிட்டேன்..  அதிர்ச்சியடைந்த இயக்குனர்!.

Actress Anjali : தமிழ் சினிமாவில் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் நல்ல வெற்றியை பெரும் படங்களாக இருக்கும்.

திரையரங்கில் வெளியாகும் அதே திரைப்படம் வெளியாகி சில நாட்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு வரும் வரை மக்கள் பெரிதாக அதை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் சின்னத்திரைக்கு வந்த பிறகு நல்ல வெற்றி கொடுத்திருக்கும்.

அப்படியாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு திரைப்படம்தான் அங்காடித்தெரு. சென்னையில் டி நகர் டி நகரில் பணிபுரியும் பணியாளர்கள் அன்றாடம் தங்கள் வாழ்வில் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை வெளிக்கொணரும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படம்தான் அங்காடித்தெரு.

இந்த திரைப்படம் முக்கியமாக துணிக்கடைகளில் எவ்வளவு அதிகமான வேலைப்பளுவிற்கு நடுவில் அவர்கள் வாழ்கின்றனர் என்பதை விளக்கி இருக்கும். இதில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக இயக்குனர் வெங்கடேசன் நடித்திருந்தார்.

நடிகருக்கே ஷாக் கொடுத்த காட்சி:

இயக்குனர் வசந்தபாலன் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் ஒரு காட்சியில் நடிகை அஞ்சலியை ஒரு திரைக்கு மறுபக்கம் தள்ளிவிட்டு திரையை மூடுவது போன்ற காட்சி இருக்கும். அந்த காட்சியில் வெங்கடேசனை அடிக்க சொன்ன பொழுது அதற்கு அடுத்த காட்சி என்னவென்பதை அவரிடம் கூறவே இல்லை.

அவரும் சரி என்று நடித்து விட்டார் இதோடு இந்த காட்சி முடிந்து விட்டது என்று கூறியிருக்கிறார் இயக்குனர். உடனே வெங்கடேஷிற்கு சந்தேகமாகிவிட்டது காட்சியின் முடிவு என்னவென்று இறுதிவரை தெரியவில்லையே என்று அவர் யோசித்து இருக்கிறார்.

பிறகு உதவி இயக்குனரை அழைத்து இதற்கு அடுத்த காட்சி என்ன என்று கேட்கும் பொழுது உதவி இயக்குனரும் கூறுவதற்கு மறுத்திருக்கிறார் பிறகு இயக்குனரிடம் சென்று இதற்கு பிறகு வரும் காட்சி என்ன என்று கேட்ட பொழுதுதான் அஞ்சலியிடம் வெங்கடேஷ் தவறாக நடந்து கொண்டதாக அந்த காட்சி அமைக்கப்பட்டு இருப்பது அவருக்கு தெரிந்தது.

தன்னை மக்கள் திட்டி தீர்க்கும் விதமாக அல்லவா இவர் காட்சிகள் வைத்திருக்கிறார் என்று பதறியிருக்கிறார் வெங்கடேஷ். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அந்த படம் முழுக்க ரகுவரன் முட்டி போட்டுதான் நடிச்சார்… உண்மையை உடைத்த ரேவதி!..

எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை சரியாக நடிக்க கூடிய நடிகர்களில் முக்கியமானவர் ரகுவரன். பலருக்கும் ஒரு வில்லனாக மட்டுமே ரகுவரனை தெரியும். ஆனால் அதையும் தாண்டி ஒரு நடிகனாக பல படங்களில் தூள் கிளப்பி இருப்பார் ரகுவரன்.

சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் ஒரு குடும்ப தலைவனாக, விசுவின் மகனாக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதேபோல என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு என்கிற திரைப்படத்தில் மன நோயாளியான தனது மனைவிக்காக அவளது குழந்தையை தேடி அலையும் ஒரு கதாபாத்திரமாக நடித்திருப்பார்.

 வில்லனாக நடிப்பதற்கு முன்பே இப்படி பல கதாபாத்திரங்களில் நடித்தவர் ரகுவரன். அஞ்சலி திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அஞ்சலி திரைப்படம் எடுக்கும்போது மணிரத்தினத்திற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது.

பொதுவாகவே ரகுவரன் மிகவும் உயரமானவர். படத்தில் அவரை முழுமையாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு அதிக தூரத்தில் காமிராவை வைக்க வேண்டும். அஞ்சலி குழந்தைகள் சார்ந்த படம் என்பதால் குழந்தைகளைதான் அதிகம் காட்ட வேண்டி இருக்கும். ரகுவரன் வருகிற காட்சிகளில் குழந்தைகளை காட்டும்போது உயரம் காரணமாக ரகுவரனின் தலை தெரியாமல் போனது.

இதை புரிந்துக்கொண்ட ரகுவரன் படத்தில் அதிக காட்சிகளில் முட்டி போட்டு குழந்தைகளிடம் பேசியவாறே நடித்துள்ளார். இந்த நிகழ்வை நடிகை ரேவதி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

நல்லா பாத்துக்கோ – குனிஞ்சி காட்டும் அஞ்சலி.!

தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு திரைப்படங்கள் மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை அஞ்சலி.

அவரது இயல்பான அழகு காரணமாக இவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன.தொடர்ந்து மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதுவரை 50 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. அடிக்கடி இவர் சமூக வலைத்தளங்களில் போட்டோ அல்லது வீடியோ வெளியிடுவது வழக்கம்.

அப்படியாக இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அந்த வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.