Tag Archives: மதகஜ ராஜா

தேவையில்லாமல் வாயை விட்ட அஞ்சலி.. மேடையிலேயே பழி தீர்த்த விஜய் ஆண்டனி.!

அங்காடி தெரு, கற்றது தமிழ் மாதிரியான திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பெரும்பாலும் நடிகைகள் தங்களது அழகை காட்டிதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வந்துள்ளனர்.

சில நடிகைகள்தான் கருப்பாக இருந்தாலும் கூட தனிப்பட்ட நடிப்பை காட்டி அதன் மூலமாக வாய்ப்பை பெறுகின்றனர். அப்படியான நடிகைகளில் நடிகை அஞ்சலி மிக முக்கியமானவர். ஆனாலும் கூட அஞ்சலிக்கு உடல் எடை அதிகரித்த காரணத்தால் ஒரு கட்டத்திற்கு மேல் அவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைக்காமல் போனது.

இந்த நிலையில் 12  வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த மதகஜராஜா என்கிற திரைப்படம் தற்சமயம் திரையில் வெளியாகி அவருக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.

இதுக்குறித்து மேடையில் பேசிய அஞ்சலி அதில் சிறப்பாக இசையமைத்த விஜய் ஆண்டனி குறித்து பேசாமல் விஷாலை புகழ்ந்து பேசியிருந்தார். விஷால் பாடிய ஒரு பாடலுக்காகவே மக்கள் இப்போது மதகஜராஜாவை பார்க்க செல்வதாக அவர் கூறினார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய விஜய் ஆண்டனி, “விஷால் பாடியதை கேட்டு கருநாடக இசையே ஸ்தம்பித்து விட்டது. ஒருவருக்கு கருநாடக சங்கீதம் கற்றுக்கொள்ள 3 வருடங்களாவது தேவைப்படும்.  ஆனால் விஷால் உடனே அந்த பாடலை பாடினார்.

இதற்காக விஷாலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தால் எங்கள் பெயரை கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பேசியிருந்தார் விஜய் ஆண்டனி.

பொங்கலுக்கு கேம் சேஞ்சராக அமைந்த மதகஜராஜா… மூன்றாவது நாள் நடந்த அதிசயம்.. வசூல் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. ஏனெனில் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்குவதற்கு தமிழில் நிறைய இயக்குனர்கள் இருக்கின்றனர். ஆனால் காமெடி திரைப்படங்களை இயக்குவதற்கு சுந்தர் சி மாதிரியான இயக்குனர்கள்தான் இருக்கிறார்கள்.

சுந்தர் சி 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய திரைப்படம் மதகஜராஜா. தற்சமயம் பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியானது. அதில் மதகஜராஜா திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். ஜனவரி 12 அன்று வெளியான மதகஜராஜா முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து அதன் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது மதகஜராஜா.

பொங்கலுக்கு வெளியான படங்களிலேயே தற்சமயம் அதிக வசூல் கொடுத்த தமிழ் படமாக மதகஜராஜாதான் இருந்து வருகிறது. மதகஜராஜா வெளியான முதல் நாள் 3 கோடி வசூல் செய்தது. இரண்டாவது நாளும் 3 கோடிதான் வசூலித்தது.

ஆனால் மூன்றாவது நாள் மட்டும் கிட்டத்தட்ட 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இதன் வசூல் அதிகரித்தால் கண்டிப்பாக 100 கோடி ரூபாய் வசூல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 வருசம் கழிச்சி வந்த படத்துக்கு இவ்வளவு மார்க்கெட்டா? புதிய சாதனையை படைத்த மதகஜராஜா திரைப்படம்.!

வெகு வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இப்போதெல்லாம் ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தனிப்பட்ட வரவேற்பை பெறுகின்றன. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களாக ரீ ரிலீஸ் ஆகாமல் இருந்த படமாக மதகஜ ராஜா திரைப்படம் இருந்து வந்தது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், மனோபாலா, அஞ்சலி, வரலெட்சுமி இன்னம் பல முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சந்தித்த சில பிரச்சனைகளின் காரணமாக அந்த திரைப்படம் திரைக்கு வராமலேயே இருந்தது.

ஆனால் திடீரென இந்த மாதம் படம் வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதனை தொடர்ந்து அந்த படம் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியானது. வெளியான முதல் நாளே இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தில் நடித்த அஞ்சலிக்கும் இந்த படம் நல்ல மார்க்கெட்டை பிடித்து கொடுத்தது.

இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விடுமுறை நாட்கள் அதிகமாக இருப்பதால் மதகஜ ராஜா திரைப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் மதகஜ ராஜா புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது.

அதாவது மதகஜராஜா திரைப்படம் கடந்த 24 மணி நேரத்தில் ஆன்லைன் மூலமாக 75,000 டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுள்ளன. 12 வருடம் கழித்து வந்த படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது பெரிய விஷயம் என கூறப்படுகிறது.

தட்டி தூக்கியதா மதகஜ ராஜா… முதல் நாள் வசூல் நிலவரம்..!

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்றுள்ளது மதகஜ ராஜா திரைப்படம். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் சந்தானம், அஞ்சலி, வரலெட்சுமி இன்னும் பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் முழுக்கவே காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 12 வருடங்களுக்கு முன்பு ஜெமினி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் மதகஜராஜா.

இந்த திரைப்படம் சில பிரச்சனைகளால் வெகு காலங்களாகவே வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த 12 வருடங்களில் சினிமாவில் காமெடி படங்கள் பெரிதாக உருவாகாமல் போனது.

இந்த நிலையில் இவ்வளவு காமெடி காட்சிகள் நிறைந்த படம் என்பதாலேயே மதகஜராஜா முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அளவில் குறைவான திரையரங்குகளில் வெளியானது என்றாலும் கூட 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பட்ஜெட் ரீதியாக இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட் படம் என்பதால் இதுவே படத்திற்கு நல்ல வெற்றி என கூறப்படுகிறது.

12 வருடம் கழித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..! அந்த பழைய சந்தானத்தை பார்க்க ரெடியா?.

தமிழில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அதிக வரவேற்புக்கு நடுவே உருவான திரைப்படம்தான் மத கஜ ராஜா. மதகஜராஜாவில் கதாநாயகனாக விஷால் நடித்தார்.

கதாநாயகிகளாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் காமெடி நடிகனாக சந்தானம் நடித்திருந்தார். இந்த படம் எடுக்கப்பட்டு 12 வருடங்கள் ஆன பிறகும் கூட இன்னமும் திரைக்கு வராமல் இருந்து வருகிறது.

ஆனால் சுந்தர் சி இந்த திரைப்படம் குறித்து நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்கனவே உருவாக்கி இருந்தார். சுந்தர் சி தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை எடுப்பதில் பிரபலமானவர் என்பது அனைவருமே அறிந்த விஷயம்.

அவர் இயக்கிய காமெடி திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஆனால் சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறும்பொழுது அவர் எடுத்த காமெடி திரைப்படங்களிலேயே உச்சபட்ச காமெடி படம் என்றால் அது மத கஜராஜா தான் என்று கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் ஏன் இன்னமும் திரைக்கு வராமல் இருக்கிறது என்று பலரும் கவலையில் இருந்தனர். அந்த படத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சனை தான் படம் வெளியாகாமல் இருப்பதற்கு காரணம் என்று எல்லாம் பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் வருகிற பொங்கலுக்கு மதகஜராஜா திரைக்கு வர இருக்கிறது 10 வருடங்களுக்கு முன்பு காமெடியனாக நடித்து வந்தார் நடிகர் சந்தானம் அதனால் அந்த திரைப்படத்திலும் அவர் காமெடி நடிகராகதான் நடித்திருக்கிறார்.

இப்பொழுது சந்தானத்தை அப்படி காமெடி நடிகராக பார்க்க முடியவில்லை ஏனெனில் அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கிவிட்டார். எனவே ஒரு காமெடி திரைப்படமாக மத கஜ ராஜா முக்கியமான படமாக மாறி இருக்கிறது. இந்த பொங்கலில் படங்களுக்கிடையே இருக்கும் போட்டியில் மதகஜ ராஜா முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னோட படத்துலையே எனக்கு பிடிச்ச காமெடி!.. ஆனால் தயாரிப்பாளரால் யாருமே பார்க்க முடியாமல் போயிட்டு!.. சுந்தர் சி டாக்!..

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் நகைச்சுவை திரைப்படங்களாகதான் இருக்கும். முதன் முதலாக முறைமாமன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் சுந்தர் சி.

அந்த திரைப்படமே முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாகதான் இருந்தது. அந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் மக்களுக்கு காமெடி திரைப்படங்கள் மீது நல்ல வரவேற்பு இருப்பதை சுந்தர் சி அறிந்துக்கொண்டார்.

அதனை தொடர்ந்து அவர் உனக்காக எல்லாம் உனக்காக என்று முழுக்க முழுக்க காமெடி வைத்து திரைப்படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து அவரது மார்க்கெட் இன்னமும் அதிகமானது. தலைநகரம் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கினார். தற்சமயம் அவரே நடித்து இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் உங்கள் படத்தில் உள்ள காமெடியிலேயே சிறப்பான காமெடி காட்சி என்றால் எதை கூறுவீர்கள் என கேட்டப்போது நான் இயக்கிய மதகஜ ராஜா திரைப்படத்தில் க்ளைமேக்ஸில் ஒரு 20 நிமிட காட்சி வைத்திருந்தேன். அதுதான் என்னுடைய காமெடி காட்சிகளிலேயே சிறந்த காமெடி காட்சி என்பேன்.

ஆனால் அந்த படம் இன்னமும் வெளியாகததால் உங்களால் அந்த காமெடியை பார்க்க முடியவில்லை என்றார் சுந்தர் சி. மேலும் அவர் கூறும்போது மதகஜ ராஜா இப்போது வெளியானாலும் சிறப்பான வெற்றியை கொடுக்க கூடிய படம். இப்போதும் அதை நல்ல விலைக்கு வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏற்கனவே வெளியிட்ட படங்களில் உள்ள கடன் பிரச்சனை காரணமாக இந்த படத்தை வெளியிடாமல் வைத்துள்ளார். அவர் நினைத்தால் மட்டுமே அந்த படம் வெளிவரும் என்கிறார் சுந்தர் சி.