Tag Archives: aswath marimuthu

வடசென்னை பாகம் 2 இல் எஸ்.டி.ஆர்.. அதிர்ச்சி தகவல் கொடுத்த பிரபலம்.!

யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென நடிகர் சிம்புவும் வெற்றிமாறனும் இணைந்து அடுத்த படத்தை உருவாக்க துவங்கியிருக்கின்றனர். சிம்பு வரிசையாக நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

ஏற்கனவே இவர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதேபோல பார்க்கிங் திரைப்படத்தின் இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் திடீரென்று வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் படத்தில் நடிக்க துவங்கி இருப்பது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக அது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் நடைபெறுவதாக கூறப்படுகிறது ஒருவேளை வடசென்னை 2 திரைப்படத்திற்கான பட பிடிப்பாக இது இருக்குமா என்று ஒரு பக்கம் கேள்விகள் இருந்து வருகின்றன.

ஏனெனில் வடசென்னை திரைப்படத்திலேயே அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் தனுஷுக்கும் சிம்புவுக்கும் இருந்த போட்டியால் சிம்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை எனவே அதைப் பின்கதையாக கொண்டு இந்த படம் அமைந்திருக்குமோ என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

டிராகன் மாதிரி படம் பண்ணினதால் வெற்றிமாறனால் நீக்கப்பட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து..!

தற்சமயம் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வழியாகவும் ஹிட் கொடுத்த காரணத்தினால் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

அஸ்வத் மாரி முத்து இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கின்றன. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்து அஸ்வத் மாரிமுத்துவிற்கு வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார்.

இந்த நிலையில் நாளைய இயக்குனரில் அவர் பங்கேற்றது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அதில் அவர் கூறும்பொழுது நாளைய இயக்குனருக்காக நான் எடுத்த திரைப்படம் ஃபுட்பால் பற்றிய ஒரு திரைப்படம்.

aswath marimuthu

ஆனால் அதன் கிளைமாக்ஸ் கிட்டத்தட்ட டிராகன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாதிரி தான் இருக்கும். அப்பொழுது அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெற்றிமாறன் சார் அந்த படத்தை எலிமினேட் செய்துவிட்டார்.

ஏனெனில் காட்சிப்படுத்துவதில் அதில் சில தவறுகளை நான் செய்திருந்தேன். அவற்றை எல்லாம் சரி செய்து நான் எடுத்த படம்தான் ஓ மை கடவுளே, டிராகன் எனவே நாம் செய்யும் பிழைகளை ஒருவர் சுட்டிக்காட்ட இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் சரி செய்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

வி.ஜே சித்து கொடுத்த வார்னிங்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்.. வெளியிட்ட இயக்குனர்.!

யூ ட்யூப்பில் பிரபலங்களாக இருந்து வரும் ஒரு சில நபர்களில் முக்கியமானவர் வி.ஜே சித்து. கிட்டத்தட்ட 12 வருடங்களாக மீடியா துறையில் இவர் இருந்து வருகிறார். நிறைய டிவி நிகழ்ச்சிகளில் இவர் தொகுப்பாளராக இருந்து வந்துள்ளார்.

ஆனால் அதே சமயம் அவர் யூ ட்யூப் சேனல்களில் ப்ராங் நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். அப்படியாக ப்ளாக் ஷீப் யூ ட்யூப் சேனலில் இவர் செய்த ப்ராங்க் ஷோவுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பை பயன்படுத்தி கொண்ட வி.ஜே சித்து தனக்கென தனி சேனலை துவங்கினார்.

அப்படி அவர் துவங்கிய வி.ஜே சித்து வி லாக்ஸ் அவருக்கு இன்னமுமே அதிக வரவேற்பை பெற்று தந்தது. இந்நிலையில் சமீபத்தில் அவர் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படத்தில் அவருக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவருடன் சேர்ந்து ஹர்ஷத் கானும் அந்த படத்தில் நடித்திருந்தார். அந்த அனுபவத்தை இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது ஹர்ஷத் சில சமயங்களில் என்னிடம் வந்து அதிக டயலாக் வைக்க சொல்வார்.

அப்போது சித்து அவரை தனியாக அழைத்து அந்த இயக்குனர் ஒரு மாதிரி ஆளு. அந்தாளு பத்தி உனக்கு தெரியாது. கம்முன்னு இரு என ஹர்ஷத்தை எச்சரிக்கை செய்வார். ஏனெனில் வி.ஜே சித்து ஏற்கனவே என் கூட ஒரு படத்தில் பணிப்புரிந்துள்ளார் என கூறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

34 வருஷமா என்னோட கனவு.. மனம் திறந்த டிராகன் பட இயக்குனர்.!

சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபாமா பரமேஸ்வரி மற்றும் கயடு லோகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுக் கொடுத்தது டிராகன் திரைப்படம்.

இப்பொழுதும் திரையரங்குகளில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது டிராகன் திரைப்படம். இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தை மிகவும் பெருமையாக பேசி இருந்தார்.

மேலும் கடைசி காட்சிகளில் கண்ணீர் வந்து விட்டதாக கூறிய ரஜினிகாந்த் அஸ்வத் மாரிமுத்துவுக்கு போன் செய்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனை கேட்ட அஸ்வத் மாரிமுத்து உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய 34 வருட கனவு சார் நான் வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு அஸ்வத் மாரிமுத்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். ரஜினிகாந்த் சமீப காலமாகவே பிரபலம் அடையும் திரைப்படங்களின் இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து வருகிறார் அந்த வகையில் அஸ்வத் மாரிமுத்துவிற்கும் மரியாதை செய்து இருக்கிறார் ரஜினிகாந்த்.

 

 

எனக்கு இருந்த ஆசை உன்னால நிறைவேறாம போயிடுச்சு.. டிராகன் இயக்குனரை நேரடியாக கேட்ட சிம்பு.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்பட அப்டேட்களாக கொடுத்து வருகிறார் நடிகர் சிம்பு. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் நடவடிக்கைகள் என்பது தமிழ் சினிமாவில் வேற லெவலில் இருக்கிறது. தக் லைஃப் திரைப்படத்திற்கு பிறகு வரிசையாக தனது திரைப்படங்கள் குறித்த அப்டேட்களை கொடுத்துள்ளார் சிம்பு.

அந்த வகையில் சிம்புவின் 51 ஆவது திரைப்படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே டிராகன், ஓ மை கடவுளே ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். டிராகன் திரைப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் ஒரு பேட்டியில் எஸ்.டி.ஆர் 51 பற்றி கூறியிருந்தார். அதில் அவர் கூறும்போது சிம்புவுக்கு 6 லக்கி நம்பர். அவரது ஆறாவது திரைப்படம் மன்மதன். அந்த படத்தை அவர்தான் இயக்கினார். அதே போல 51 ஆவது படத்தையும் அவர்தான் இயக்க ஆசைப்பட்டார்.

simbu

5+1=6 என வருவதால் இந்த படத்தை இயக்க நினைத்தார். இதுக்குறித்து சிம்பு என்னிடம் கூறும்போது நான் இந்த படத்தை இயக்க இருந்தேன். நீ குறுக்க புகுந்துட்ட பரவாயில்லை. என்னோட 60 ஆவது படத்தை நான் இயக்கிக்கிறேன் என கூறியுள்ளார் சிம்பு.

இந்த விஷயத்தை அஸ்வத் மாரிமுத்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். எனவே 60 ஆவது திரைப்படத்தை சிம்பு இயக்குவார் என இதன் மூலம் தெரிகிறது.

நீங்க அதை பண்ணுனாலே தமிழ் பசங்களுக்கு பிடிச்சிடும்.. கயடுவை பார்த்து தமிழ் நடிகைகள் கத்துக்கணும்.!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது அதிகமாக பேசப்பட்டு வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை கயடு லோகர். இவர் தமிழில் டிராகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அடுத்து அதர்வா நடித்து வரும் இதயம் முரளி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

டிராகன் திரைப்படத்தில் பயங்கர மாடர்ன் லுக்கில் நடித்திருந்தார் கயடு. அவருக்கு அது அதிக வரவேற்பை பெற்று கொடுத்தது. தொடர்ந்து தமிழில் இவர் அதிக வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார். அடுத்து சினிமாவில் இவர் நயன் தாராவை இடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என பேச்சுக்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த நடிகைகள் கூட கொஞ்சம் பிரபலமான பிறகு தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அல்லது தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசுவார்கள். சாய் பல்லவி மாதிரி ஒரு சில நடிகைகள் மட்டுமே தெளிவான தமிழில் பேசுவதை பார்க்க முடியும்.

இந்த நிலையில் கயடு லோகர் தமிழ் நடிகை கிடையாது. அவர் முதலில் நடிக்கும் படமே டிராகன் திரைப்படம்தான். அப்படி இருந்தும் கூட டிராகன் திரைப்பட விழாவில் பேசிய கயடு தமிழில் டயலாக்குகளை மனப்பாடம் செய்துக்கொண்டு வந்து தமிழில் பேசினார்.

இதுக்குறித்து அதே மேடையில் பேசிய டிராகன் திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறும்போது, “கயடு மேடையில் ஏறுவதற்கு முன்பு தமிழில் எனக்கு சரியாக பேச வருமா? என  தெரியவில்லை. பேசவா? வேண்டாமா? என கேட்டார். நீங்கள் பேசுங்கள் அது போதும். தவறாக பேசினாலும் நீங்கள் பேச முயற்சி செய்ததற்கே தமிழ் பசங்களுக்கு உங்களை பிடித்துவிடும் என கூறினேன்” என்று கூறியுள்ளார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

என் அம்மா அப்பாக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. வெளிப்படையாக பதிவிட்ட டிராகன் பட இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியிருப்பவர் நடிகர் அஸ்வத் மாரிமுத்து. எப்படி பிரதீப் ரங்கநாதன் இரண்டே திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமாகி இருக்கிறாரோ அதே போல இரண்டே திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.

அவரது முதல் படமான ஓ மை கடவுளே திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் தொடர்ந்து அடுத்த கதையை சில வருடங்கள் கழித்தே படமாக்கினார்.

அப்படியாக அவர் படமாக்கிய திரைப்படம்தான் டிராகன்., தற்சமயம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது டிராகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் வழக்கமான காலேஜ் நாயகன் போலவே கதைக்களம் அமைந்தாலும் பிறகு கதையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வாழ்க்கையில் முன்னேற கல்லூரி படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை திரைப்படம் உணர்த்துகிறது. இந்த படம் பலருக்கும் பிடித்த படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அஸ்வத் மாரிமுத்து.

அந்த பதிவில் அவர் கூறும்போது என் தாய் தந்தையரிடம் நான் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். நான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற அவர்களது ஆசையில் மண்ணை அள்ளி போட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என் ஆசைக்காக என்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்து அதில் ஒழுங்காக படிக்காமலும் இருந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த மன்னிப்பு கேட்கும் விதமாகதான் டிராகன் படத்தை எடுத்தேன் என கூறியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

சிவகார்த்திகேயனை ஓரம் தள்ளிய பிரதீப்… ஸ்கோர் செய்யும் டிராகன். பட விமர்சனம்!..

இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தில் அனுபாமா மற்றும் கயடு லோகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். மேலும் கே.எஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், வி.ஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் கதை குறித்து ஏற்கனவே கலவையான விமர்சனங்கள் இருந்து வந்தன லவ் டுடே திரைப்படத்திலேயே நிறைய அபத்தமான விஷயங்கள் இருந்தன. அதே போலவே கல்லூரியில் மாஸ் காட்டுவதுதான் கெத்து என்று இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் கதை களமாக இது இருக்கலாம் என பேச்சு இருந்து வந்தது.

ஆனால் ஒரு நல்ல கதைகளத்தை கொண்டுள்ளது டிராகன் திரைப்படம். படத்தின் கதைப்படி பிரதீப் ரங்கநாதன் பள்ளியில் டாப் ரேங்க் வாங்கும் ஒழுக்கமான மாணவனாக இருந்து வருகிறார். அந்த சமயத்தில் அவர் ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அந்த பெண் நல்ல பையனை பிடிக்காது என கூறி அவரை நிராகரிக்கிறார்.

இதனால் கோபமடைந்த பிரதீப் கல்லூரியில் முழுக்க முழுக்க ரவுடித்தனம் செய்துக்கொண்டு சுற்றுகிறார். இதனால் காதல் எல்லாம் கிடைக்கிறது. ஆனால் கல்லூரி முடித்த பிறகு வேலை மட்டும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர் என காதலியும் பிரதீப்பை விட்டு செல்கிறார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் ஜெயிக்க பிரதீப் செய்யும் விஷயங்கள்தான் படமாக இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையை பொறுத்தவரை அதில் ஊதாரியாக சுற்றுவது மாஸ் கிடையாது. நன்றாக படிப்பதுதான் மாஸ் என்பதைதான் கதை விளக்குகிறது. அந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை கருத்தியல் ரீதியாக ஓரம் தள்ளியுள்ளது டிராகன்.

அதே மாதிரி ஒரு விஷயத்துக்காக தவறு செய்கிறேன் என இறங்கினால் பிறகு தவறு மட்டுமே செய்யும் சூழ்நிலைகள்தான் ஏற்படும் என்பதை படம் விளக்குகிறது. ஓ மை கடவுளே திரைப்படம் போலவே இந்த படமும் அஸ்வத் மாரிமுத்துக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.