34 வருஷமா என்னோட கனவு.. மனம் திறந்த டிராகன் பட இயக்குனர்.!

சமீபத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான திரைப்படம் டிராகன். இந்த திரைப்படத்தில் நடிகை அனுபாமா பரமேஸ்வரி மற்றும் கயடு லோகர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுக் கொடுத்தது டிராகன் திரைப்படம்.

இப்பொழுதும் திரையரங்குகளில் அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது டிராகன் திரைப்படம். இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தை மிகவும் பெருமையாக பேசி இருந்தார்.

மேலும் கடைசி காட்சிகளில் கண்ணீர் வந்து விட்டதாக கூறிய ரஜினிகாந்த் அஸ்வத் மாரிமுத்துவுக்கு போன் செய்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதனை கேட்ட அஸ்வத் மாரிமுத்து உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய 34 வருட கனவு சார் நான் வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு அஸ்வத் மாரிமுத்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். ரஜினிகாந்த் சமீப காலமாகவே பிரபலம் அடையும் திரைப்படங்களின் இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து வருகிறார் அந்த வகையில் அஸ்வத் மாரிமுத்துவிற்கும் மரியாதை செய்து இருக்கிறார் ரஜினிகாந்த்.