அனுமதி வாங்கிதான் ப்ரோ பாட்டை போட்டுருக்கோம்!.. இளையராஜா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மஞ்சுமல் பாய்ஸ் க்ரூப்!..
இளையராஜா தமிழ் சினிமாவில் பல காலங்களாக இருந்து வரும் முக்கியமான இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இளையராஜாவின் இசைக்காக தமிழ் சினிமாவில் பாடல்கள் வெற்றி பெற்ற காலக்கட்டங்களும் உண்டு. ஆனால் இப்போது நிறைய இளம் இசையமைப்பாளர்கள் வந்ததால் இளையராஜாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் வருவதில்லை. இந்த நிலையில் தான் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமை தனக்கே வேண்டும் என்று போராடி வருகிறார் இளையராஜா. இந்த நிலையில் அவரது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தும் படங்கள் மீதும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார் இளையராஜா….
