Tag Archives: nidhhi Agerwal

ஆண் உறையை பயன்படுத்திய பிறகு இதை பண்ணுங்க.. கூச்சமில்லாமல் பேசிய சிம்பு பட நடிகை!.

Nidhhi Agerwal: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில நடிகைகள் மக்கள் மனதில் எப்பொழுதும் இடம் பிடித்து விடுவார்கள். அதிலும் தமிழ் ரசிகர்களுக்கு கனவு கன்னியாகவே மாறிவிடுவார்கள். இதனால் இந்த நடிகைகளை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.

மேலும் தமிழ் சினிமாவில் கிடைக்கும் வரவேற்பு பொறுத்து அவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வரும். அந்த வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருபவர் தான் நிதி அகர்வால்.

நடிகை நிதி அகர்வால்

தமிழில் நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு, நடனம் என அனைத்தும் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இவருக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.

மேலும் தெலுங்கு சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ‘முன்னா மைகேல்’ என்ற ஹிந்தி மொழி திரைப்படத்தில் முதன்முதலாக நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது பல படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

ஆனால் இவருக்கு வரவேற்பு கிடைத்தது ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் தான். தற்பொழுது தமிழில் இரு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நிதி அகலர்வால், தமிழ் திரைப்படங்களுக்கு காத்துக்கொண்டு இருக்கிறார்.

ஓப்பனாக பேசிய நிதி அகர்வால்

பல படங்களில் நடித்து வரும் நிதி அகர்வால் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருந்தார். அதனைப் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் ஆணுறை பயன்படுத்திய பிறகு வெளியில் வீசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் குப்பை தொட்டிகளில் போடக்கூடாது. இது மற்றவர்களுக்கு தொற்றுப் பரவும் அபாயம் உள்ளது என கருத்து தெரிவித்திருக்கிறார்.

இவர் கூறியிருக்கும் இந்த செய்தி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறாக இவர் வெளிப்படையாக பேசியிருப்பது குறித்து பலரும் பல கருத்துகளை பதவிட்டு வருகிறார்கள்.

நித்தி அகர்வாலின் க்யூட் பிக்ஸ்…

வெகு காலமாக தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நித்தி அகர்வால். 2017 ஆம் ஆண்டு வெளிவந்த முன்னா மைக்கேல் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அதனை தொடர்ந்து ஐ ஸ்மார்ட் சங்கர், மிஸ்டர் மஜ்னு போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தமிழில் 2021 ஆம் ஆண்டு வெளியான பூமி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் நித்தி அகர்வால். அதன் பிறகு சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நித்தி அகர்வால். இறுதியாக போனவருடம் உதயநிதி நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் நித்தி அகர்வால் தற்சமயம் சிறப்பான புகைப்படங்கள் சில்வற்றை பகிர்ந்துள்ளார்.