சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் பிரபலமடைந்தவர் நடிகை நிதி அகர்வால்.. பெரும்பாலும் நிதி அகர்வால் நடிக்கும் திரைப்படங்கள் தெலுங்கு தமிழில் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு நிதி அகர்வால் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலக தலைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதற்கு பிறகு அவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் நிதி அகர்வால். அவரிடம் ஒரு பேட்டியில் பேசும்போது நிறைய இயற்கை காட்சிகள் உள்ள இடங்களுக்கு செல்லும் பழக்கம் எனக்கு உண்டு.
ஆனால் அங்கு சென்று செல்ஃபி எடுப்பது எனக்கு பிடிக்காது என கூறியுள்ளார் நித்தி அகர்வால். அதை கேட்ட தொகுப்பாளர் ரேர் பீஸ்தான் நீங்க என பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே காதல் கதாநாயகனாக அனைவராலும் அறியப்படும் ஒரு நபராக சிம்பு இருந்து வருகிறார். சிறு வயது முதலே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக சிம்பு இருந்திருக்கிறார்.
அவரது தந்தை டி ராஜேந்திரன் மூலமாக சிறுவயதில் சின்ன சின்ன திரைப்படங்களில் நடித்த சிம்பு அதற்குப் பிறகு கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார்.
கதாநாயகனாக நடிக்க துவங்கிய ஆரம்ப காலகட்டங்களில் அவர் நடிகை நயன்தாராவை காதலித்து வந்தார். அந்த காதல் அப்பொழுது திரை துறையிலேயே அதிகமாக பேசப்பட்ட ஒரு காதல் விவகாரமாக இருந்து வந்தது.
அதனை தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த காதல் முடிவடைந்தது. காதல் தோல்விக்கு பிறகு சில காலங்கள் கழித்து மீண்டும் நடிகை ஹன்சிகாவை காதலித்து வந்தார் சிம்பு.
சிம்பு காதல்:
நடிகை ஹன்சிகாவுடன் சிம்பு சேர்ந்து நடித்த திரைப்படம் வாலு. வாலு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு இந்த காதலும் அவருக்கு தோல்வியில் தான் முடிந்தது.
அதனை தொடர்ந்து இப்பொழுது வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார் சிம்பு. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இவர் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்த பொழுது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவருக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக ஒரு பேச்சு இருந்து வருகின்றன. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் சிம்புவுக்கும் நிதி அகர்வாலுக்கும் இடையே ஒரு கவர்ச்சி காட்சி கூட வைக்கப்படவில்லை.
இருந்தாலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் சிம்பு ரசிகர்கள் கூறும் பொழுது இதை வெறும் வதந்தி என்று கூறுகின்றனர்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips