Tag Archives: vaiyapuri

ஒரு பக்கம் உடம்பு அப்படியே தேஞ்சி போச்சு!.. அப்பயும் கூட ஒரு சிறுவனை காப்பாற்றிய கமல்.. நிஜமாவே ஹீரோதான்!.

Kamalhaasan : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடிய நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிப்பார்கள்.

ஒரு மாஸ் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் அதைத் தாண்டி ஒரு புது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர்கள் யோசிப்பார்கள். ஆனால் ஒரு பிச்சைக்காரனாகவோ திருடனாகவோ நடிக்க வேண்டும் என்றால் கூட யோசிக்காமல் நடிக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு பேர்தான்.

kamalhaasan

அதில் ஒன்று சிவாஜி கணேசன் மற்றொன்று கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிப்பு எப்படிப்பட்டது என்பது குறித்து வையாபுரி கொடுத்துள்ள பேட்டி பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது.

அதில் வையாபுரி கூறும் பொழுது மும்பை எக்ஸ்பிரஸ் என்கிற கமலஹாசனின் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து பணி புரிந்த அனுபவத்தை கூறியிருக்கிறார். மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தைப் பொறுத்தவரை மரணக்கிணறு என கூறப்படும் வித்தையை செய்யக்கூடியவராக கமல்ஹாசன் அதில் இருப்பார்.

கமல்ஹாசன் செய்த வித்தை:

அந்த படத்தில் ஒரு காட்சியில் ஒரு சிறுவனை வண்டிக்கு பின்னால் அமர வைத்து மரணக்கிணறு வித்தையில் வண்டியை எப்படி ஓட்டுவாரோ அதேபோல வண்டியை ஓட்டும் காட்சி ஒன்று இருந்தது. அந்த இரு சக்கர வாகனத்தை மிக உச்சகட்ட வேகத்தில் ஓட்டினால்தான் அந்த வித்தையை செய்ய முடியும்.

எனவே கமல்ஹாசன் அப்படி செய்து கொண்டிருந்த பொழுது அந்த வண்டியில் திடீரென்று இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை அடுத்து வண்டியை நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த சிறுவனிடம் தன்னை கெட்டியாக பிடித்துக் கொள்ளும்படி கூறிவிட்டு வண்டியை கீழே கொண்டு போய் தேய்த்து நிறுத்தி இருக்கிறார் கமல்ஹாசன்.

அதனால் அவரது உடலின் ஒரு பகுதி முழுக்க தரையில் தேய்ந்து விட்டது அந்த ரத்த காயங்களுடன் கூட வந்து எடுக்கப்பட்ட காட்சி சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார் கமல்ஹாசன்.

அதன் பிறகு அவரால் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே முடியவில்லை பிறகு ஆம்புலன்சை அழைத்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்படி நடிப்பின் மீது அபாரமான ஈர்ப்பு கொண்டவர் கமல்ஹாசன் என்று வையாபுரி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

படப்பிடிப்பில் என்னை அடிச்சுட்டு 50 தடவை சாரி கேட்டார் சஞ்சய் தத்!.. வையாபுரிக்கு நடந்த சம்பவம்!..

Leo movie vaiyapuri: தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படமாக லியோ திரைப்படம் இருக்கிறது. இதுவரை ஓடிய விஜய் திரைப்படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக லியோ இருக்கிறது.

இதனால் லியோ படத்திற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் இந்த திரைப்படம் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை மிஞ்சிவிடும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் அந்த அளவிற்கு இது ஓடாது என்றும் ஒரு சாரார் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் வையாபுரி நடித்திருந்தார். துள்ளாத மனமும் துள்ளும் காலம் முதலே விஜய்யுடன் பல படங்களில் நடித்தவர் நடிகர் வையாபுரி. ஆனால் விஜய் பெரிய உயரத்தை தொட்ட பிறகு அவருடன் சேர்ந்து நடித்த நடிகர் கூட்டத்தை தவிர்த்து விட்டார்.

இதனால் அவர்களெல்லாம் பெரிதாக வளராமல் இருந்தனர். இந்த நிலையில் வையாபுரி லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். அவருக்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார்.

leo

அதில் ஒரு காட்சியில் சஞ்சய் தத் வையாபுரியிடம் கேள்வி கேட்பது போன்ற காட்சி வரும் அதில் அவரது கழுத்தை பிடித்து கேள்வி கேட்க வா என்று இயக்குனரிடம் கேட்டிருக்கிறார் சஞ்சய் தத்.. பண்ணுங்க சார் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று கூறியுள்ளார் இயக்குனர்.

அதன்படி வையாபுரி கழுத்தை பிடித்துள்ளார் சஞ்சய் தத். படப்பிடிப்பு முடித்த பிறகு கிட்டத்தட்ட ஒரு 50 தடவையாவது வையாபுரி கழுத்தை தழுவி கொடுத்து மன்னிப்பு கேட்டுள்ளார் சஞ்சய் தத். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர் அவ்வளவு நல்ல மனிதராக இருந்தார் என்று சஞ்சய் தத் குறித்து பேட்டியில் கூறியிருந்தார் வையாபுரி.

வாய்ப்பு தேடி போனப்ப முதலில் காக்க வச்சுட்டார்!.. லோகேஷ் கனகராஜுடம் வாய்ப்பு கேட்டு போன வையாபுரி!..

தமிழ் திரையுலகில் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திற்குமே எப்போதும் தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு.

இதனாலேயே அவரது சம்பளமும் அதிகரித்து வருகிறது. சின்ன இடத்தில் இருந்து தற்சமயம் பெரிய இடத்திற்கு வந்திருப்பதால் வாய்ப்பு தேடும் கலைஞர்களின் பிரச்சினைகளை லோகேஷ் கனகராஜால் புரிந்துகொள்ள முடியும். எனவேதான் யார் வாய்ப்பு தேடி வந்தாலும் அவர்களுக்கு முடிந்த அளவு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கப் பார்ப்பார் லோகேஷ் கனகராஜ்.

ஆனால் அதுவே அவருக்கு கெட்ட பேரையும் உண்டாக்கி கொடுத்தது மாஸ்டர் திரைப்படம் வெளியான பொழுது அதில் வாய்ப்பு கேட்ட அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்ததால் எக்கச்சக்கமான முக்கிய நட்சத்திரங்கள் அதில் நடித்திருந்தனர்.

ஆனால் அவர்கள் அனைவருக்குமே முக்கியமான கதாபாத்திரம் இருக்க வில்லை அதனால் லோகேஷ் கனகராஜ் சும்மா எல்லா ஆட்களையும் வைத்து படத்தை எடுக்கிறார் ஆனால் அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்க மாட்டேங்குது என லோகேஷ் கனகராஜை அனைவரும் விமர்சித்தனர்.

இருந்தாலும் வாய்ப்பு தேடி வருபவர்களை இல்லை என்று அவர் அனுப்புவதில்லை. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பொழுது நடிகர் வையாபுரி லோகேஷ் கனகராஜிடம் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்பொழுது லோகேஷ் கனகராஜ் பிஸியாக இருந்ததால் வையாபுரியை ஒரு அறையில் அமர வைத்தனர்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் லோகேஷ் கனகராஜ் வராததால் அங்கிருந்து சென்ற வையாபுரி பிறகு படப்பிடிப்பு முடியும் போது அங்கு வந்தார். அவர் லோகேஷ் கனகராஜிடம் இந்த படத்தில் ஏதாவது வாய்ப்பு இருந்தால் கொடுக்குமாறு கேட்டார். உடனே அந்தப் படத்தில் வையாபுரிக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ்.