Tag Archives: Vishal

இனிமே நாந்தான் தளபதி! – சர்ச்சையை கிளப்பிய நடிகர் விஷால்!

நடிகர் விஷால் திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தற்சமயம் இவர் நடித்த லத்தி என்கிற படம் வெளியானது. ஆனால் இந்த படம் பெரிதாக வசூல் சாதனை படைத்ததாக எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை.

இதுவரை விஷால் நடித்த எந்த படங்களுமே அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் வசூலித்த அளவில் வசூல் சாதனை செய்ததில்லை என கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாக முன்னணி கதாநாயகர்களோடு போட்டியில் இறங்கியுள்ளார் விஷால்.

விஷால் நடித்து லத்தி படம் வெளியான பிறகு ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார் விஷால். அங்கு விஷாலின் ரசிகர்களுமே வந்திருந்தனர். அப்போது அவரின் ரசிகர்கள் அனைவரும் புரட்சி தளபதி என ஆரவாரம் செய்தனர். உடனே அவர்களை தடுத்த விஷால் புரட்சி தளபதி இல்ல. தளபதின்னு சொல்லுங்க என கூறியுள்ளார்.

ஏற்கனவே தளபதி என்னும் பட்டத்தை விஜய் பெற்றிருக்கும்போது தன்னையும் ஏன் தளபதி என அழைக்குமாறு விஷால் கூறுகிறார். ஒருவேளை இவர் விஜய்யுடன் போட்டி போடுகிறாரா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொது மக்கள்.

இந்த நிலையில் தற்சமயம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான எம்.ஜி.ஆரின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார் விஷால். இந்த புகைப்படமும் தற்சமயம் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த வருடம் ப்ளாப் வாங்கிய 11 தமிழ் திரைப்படங்கள்

மற்ற சினிமா ரசிகர்களை விடவும் தமிழ் சினிமா ரசிகர்கள் சில விஷயங்களில் மாறுப்பட்டு காணப்படுகின்றனர். ஒரு திரைப்படத்தில் பெரும் கதாநாயகர்கள் நடித்திருந்தால் போதும், உடனே ஹிட் அடித்துவிடும். இது மற்ற மொழி சினிமாக்களில் உள்ள சங்கதி.

ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தாலும் கூட கதை சரியாக இல்லை என்றால் அந்த படம் ஓடாது. உதாரணத்திற்கு சுறா, கோச்சடையான் போன்ற திரைப்படங்களை கூறலாம்.

அதே போல இந்த வருடம் வெளியாகி பெரும் தோல்வியுற்ற பத்து படங்களை இப்போது பார்க்கலாம்.

01.கோப்ரா

தமிழில் 2020 ஆம் ஆண்டு முதலே பல்வேறு நாடுகளுக்கு சென்று பெரும் பொருட் செலவில் தயாரான திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார்.

கே.கி.எஃப் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளானது.

02.கேப்டன்

நடிகர் ஆர்யா நடிப்பில் தமிழில் வெளியான சயின்ஸ்பிக்ஸன் த்ரில்லர் திரைப்படம் கேப்டன். இந்த படத்தை இயக்குனர் சக்தி செளந்தர் இயக்கியிருந்தார். இந்த படத்தை ஆர்யாவே தயாரித்தார்.

பிரிடேட்டர் என்கிற ஹாலிவுட் படத்தின் கதையை கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெற்றியடையவில்லை.

03.என்ன சொல்ல போகிறாய்

இந்த வருடம் வந்த படங்களில் பெயர் கூட தெரியாத அளவிற்கு சில படங்கள் மக்கள் மத்தியில் தெரியாமல் போனது. அதில் என்ன சொல்ல போகிறாய் திரைப்படமும் ஒன்று.

இந்த படத்தில் குக் வித் கோமாளி அஸ்வின் கதாநாயகனாக நடித்திருந்தார். தேஜூ அஸ்வினி கதாநாயகியாக நடித்திருந்தார். காதல் கதையை கருவாக கொண்ட இந்த படம் ஒரு வாரம் கூட திரையரங்கில் ஓடவில்லை என கூறப்படுகிறது.

04.ப்ரின்ஸ்

இந்த வருடம் பெரும் நடிகர்கள் நடித்து ப்ளாப் அடித்த படங்களில் முக்கியமான திரைப்படம் ப்ரின்ஸ். சிவகார்த்திகேயன் நடித்த இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் வந்த சர்தார் படத்துக்கே மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ப்ரின்ஸ் திரைப்படத்தில் கதையே இல்லை என கூறப்பட்டது. பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்திய படமாக ப்ரின்ஸ் உள்ளது.

05.வீரமே வாகை சூடும்

விஷால் நடிப்பில் வெளியாகி குறைந்த வசூலை செய்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தை இயக்குனர் பா.சரவணன் இயக்கியிருந்தார். த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெகுவாக வரவேற்பை பெறவில்லை.

06.காஃபி வித் காதல்

பெரும் நட்சத்திர பட்டாளத்தை வைத்து இயக்குனர் சுந்தர் சியால் எடுக்கப்பட்ட திரைப்படம் காஃபி வித் காதல். ஆனால் அந்த படம் வெளியான அதே சமயம் லவ் டுடே திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமானது.

காஃபி வித் காதல் திரைப்படத்தில் ஜெய்,ஜீவா,திவ்ய தர்ஷினி,ஸ்ரீகாந்த் இன்னும் பலர் நடித்திருந்தனர். ஆனால் படம் தோல்வியை கண்டது.

07.ஐங்கரன்

நடிகர் ஜி.வி பிரகாஷ் நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம் ஐங்கரன். இந்த படத்தை இயக்குனர் ரவி அரசு இயக்கியிருந்தார். ஜி.வி பிரகாஷ் இதில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. இதனால் படம் தோல்வியை கண்டது.

08.இடியட்

நகைச்சுவை நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான காமெடி ஹாரர் திரைப்படம் இடியட். இந்த படத்தை தில்லுக்கு துட்டு திரைப்படத்தை இயக்கிய ராம்பாலா இயக்கியிருந்தார்.

ஆனால் தில்லுக்கு துட்டு அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படம் படு தோல்வியை கண்டது.

09.கொம்பு வச்ச சிங்கம்டா

நடிகர் சசி நடித்து இந்த வருடம் வெளியான திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம்டா. வந்த வேகத்திற்கு அனைத்து திரையரங்கை விட்டும் இந்த படத்தை எடுத்துவிட்டனர்.

படத்திற்கு எந்த ஒரு கூட்டமும் வரவில்லை என்பதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கியிருந்தார்.

10.மாறன்

தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படம் எதிர்பாராத விதமாக இந்த வருடம் தோல்வியை கண்டது. இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

படம் மிகவும் போர் அடிக்கும் விதமாக உள்ளது என இந்த படம் குறித்து கூறப்படுகிறது.

11.டி.எஸ்.பி

இந்த வருடம் பெரும் தோல்வி கண்ட ஹீரோக்கள் வரிசையில் விஜய் சேதுபதியும் கூட இருக்கிறார். இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் டி.எஸ்.பி.

உள்ளூர், வெளிநாடு என எங்கேயுமே இந்த படத்திற்கு கூட்டமே வரவில்லை. திரையரங்கில் தோல்வியை கண்டதால் வெகு சீக்கிரமாகவே இந்த படத்தை ஓ.டி.டிக்கு கொடுத்துவிட்டனர்.

இந்த மாதிரி டிவிட்லாம் போடக்கூடாது? – விஷாலை பயமுறுத்தியது தளபதியா?

பல வாரங்களாக கோலிவுட்டில் ட்ரெண்டிங்கில் உள்ள டாபிக் என்றால் அது வாரிசு துணிவு டாப்பிக்தான். இரண்டு படங்களுமே பயங்கரமான போட்டிகளுக்கு இடையே வெளியாக இருக்கிறது.

இரண்டு படங்களுமே ப்ரோமோஷனுக்காக பல விஷயங்களை செய்து வருகின்றன. அந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு பரங்கிமலை ஜோதி திரையரங்கில் பெரும் கட் அவுட் ஒன்று துணிவு படத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி எப்படியோ நடிகர் விஜய்க்கு செல்ல அவர் வாரிசு படத்திற்கு ஒரு பெரிய கட் அவுட் வைக்க முடிவு செய்துள்ளார். எனவே சத்யம் சினிமாஸில் பெரிய கட் அவுட்டை வாரிசு படத்திற்காக வைத்துள்ளனர். ஆனால் வாரிசு பட கட் அவுட் வைப்பதற்கு முன்பு அங்கு விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் கட் அவுட் இருந்ததாம்.

ஆனால் விஷாலை கேட்காமலே அதை அகற்றிவிட்டு வாரிசு படத்தின் கட் அவுட்டை வைத்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த விஷால் இந்த விஷயத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிறகு பதிவிட்டு சில நிமிடங்களிலேயே அதை நீக்கிவிட்டார்? யாருக்கு பயந்து விஷால் இந்த டிவிட்டை நீக்கினார் என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒரு வேளை அடுத்து தளபதி 67 இல் விஷால் விஜய்க்கு வில்லனாக நடிப்பதில் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கூட விஷால் இதையெல்லாம் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

விஷால் மற்றும் பல நட்சத்திரங்கள் இணையும் தளபதி 67 – இது லோகேஷின் புது யுனிவர்ஸா?

ஆங்கிலத்தில் மார்வெல் யுனிவர்ஸ் என கூறுவது போல தமிழகத்தில் லோகி யுனிவர்ஸ் என ஒன்று உருவாகியுள்ளது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இயக்கப்படும் படங்களை எல்லாம் சேர்த்து அவர் புது படங்களை உருவாக்குவதாக கூறப்படுகிறது. 

அப்படிதான் தற்சமயம் விக்ரம் 2 ஆம் பாகத்தின் கதை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தளபதி 67 படத்திற்கான ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் துவங்கியுள்ளன. தளபதியின் 67 வது திரைப்படத்தில் விஷால், கெளதம் மேனன் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது.

நேற்று விஷாலை நேரில் சந்தித்து லோகேஷ் இதுக்குறித்து நேரில் பேசியதாக கூறப்படுகிறது.

மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் நடித்து வரும் விஷால் அதற்கு பிறகு தளபதி 67 இல் கமிட் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கமலுக்கு ஒரு விக்ரம் திரைப்படம் போல தளபதிக்கு ஒரு முக்கிய படமாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பா பிள்ளை ரெண்டு பேருமே ட்வின்ஸாம் –  குழப்பும் மார்க் ஆண்டனி கதை

வித்தியாசமான கதைகளம் என்பதை தாண்டி, குழப்பமான கதைகளை படமாக்குவதும் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதுவும் கோப்ரா திரைப்படத்தில் வருவது போல பல கெட்டப்களில் ஹீரோக்கள் திரையில் வருவது என்பது ரசிகர்களால் வரவேற்கப்படும் விஷயமாக உள்ளது.

அந்த வகையில் தற்சமயம் விஷால் நடித்து வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் விஷாலுக்கு அப்பாவாக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் இருவருமே இரட்டை கதாபாத்திரங்களாக நடிக்கிறார்களாம்.

இதற்கு முன்பு ஜீன்ஸ் என்கிற படத்தில் இதே போல நாசர், பிரசாந்த் இருவருமே இரட்டை கதாபாத்திரங்களாக நடித்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் இந்த கதையில் இன்னும் மாற்றமாக சில விஷயங்கள் உள்ளன. படத்தின் கதையானது ஐந்து வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கிறதாம். இந்த ஐந்து காலக்கட்டங்களிலும் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா இருவரும் ஐந்து விதமான கெட்டப்களில் வருகிறார்களாம்.

அனேகன் படத்தில் வருவது போல ஜென்ம ஜென்மமாக நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதை செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு குழப்பமான கதையை படத்தில் பார்வையாளர்களுக்கு எந்த அளவில் விளக்க போகிறார்களோ? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.