லேட்டா வந்தா வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது ! – விஷால் வருவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடித்த தொகுப்பாளர்..

தமிழில் மதிக்கப்படும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். அதே சமயம் தமிழ் சினிமாவில் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகும் நபராகவும் விஷால் இருக்கிறார். துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டப்போது இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

சம்பள விஷயத்தில் ஏற்பட்ட அந்த பிரச்சனையால் இன்னும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதே மாதிரி குறித்த சமயத்தில் படங்களுக்கு நடிக்க வர மாட்டார் என்று விஷால் குறித்து திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு. இந்த நிலையில் தொகுப்பாளர் கரு பழனியப்பன் விஷாலோடு அவருக்கு நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ஒருமுறை ஜீ தமிழில் ஒரு நிகழ்ச்சிக்காக விஷால் மற்றும் இயக்குனர் பாலச்சந்தர் இருவரையும் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அப்போது குறித்த நேரத்திற்கு முன்பே பாலச்சந்தர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டார்.

ஆனால் விஷால் வரவே இல்லை. குறித்த நேரமும் தாண்டிவிட்டது. கரு பழனியப்பன் விஷாலுக்கு போன் செய்துள்ளார். போனை எடுத்த உதவியாளர் இந்தா வந்திட்டு இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவோம் என கூறியுள்ளார்.

காத்திருந்து கடுப்பான கரு பழனியப்பன் விஷால் வருவதற்கு முன்பே நிகழ்ச்சியை துவங்கிவிட்டார். விஷால் வரும்போது அந்த நிகழ்ச்சியே முடிந்துவிட்டது. ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை கரு பழனியப்பன் கூறியுள்ளார்.