அவெஞ்சர்ஸ் படத்துல என்னை கூப்பிட்டா அதை பண்ணுவேன்.. அர்ஜுன் தாஸ்க்கு இருக்கும் ஹாலிவுட் ஆசை.!
கைதி திரைப்படத்தில் இருந்தே கவனிக்கப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது நடிப்பை தாண்டி அவரது குரலுக்காகவே மிக பிரபலமானவராக இருந்து வருகிறார் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட குரல் அவருக்கு உண்டு.
அவரது குரலில் சொன்னதாலேயே அந்த லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்கிற வசனம் இன்னமுமே அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அந்த வகையில் அவர் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருந்துள்ளார்.
இந்த நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றுதான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அதிக பட வாய்ப்புகளை பெற துவங்கியுள்ளார் நடிகர் அர்ஜுன் தாஸ்.
சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது அவரிடம் பேசிய தொகுப்பாளர் நீங்கள் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் வரும் தனோஸ் கதாபாத்திரத்திற்கு தமிழ் டப்பிங் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினார்கள்.
ஏனெனில் ஆங்கிலத்திலேயே தனோஸ் கதாபாத்திரத்தின் குரல் கிட்டத்தட்ட அர்ஜுன் தாஸ் குரல் போலதான் இருந்தது. இதற்கு பதிலளித்த அர்ஜுன் தாஸ் கூறும்போது என் நண்பர்கள் பலரும் கூட நீங்கள் கூறியதை என்னிடம் கூறியுள்ளனர். வாய்ப்புகள் இருந்தால் ஒருவேளை அடுத்த அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் டப்பிங் செய்ய அழைத்தால் நான் கண்டிப்பாக செய்து கொடுப்பேன் என கூறியுள்ளார் அர்ஜுன் தாஸ்.