அப்பவே நடிகர் சிவக்குமார், சிவாஜி சேர்ந்து நடிச்ச ரஷ்ய படம் – என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ப்ளாக் அண்ட் வொயிட் காலத்தில் துவங்கி பல வருடங்கள் சினிமாவில் இருந்த முக்கியமான நட்சத்திரம் நடிகர் சிவக்குமார். மிகவும் இளம் பருவத்திலேயே சினிமாவிற்கு வந்த இவர் ஆரம்ப காலங்களில் கல்லூரி மாணவன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சிவக்குமார் பிறகு முண்ணனி கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

கதாநாயகனாக அவர் நடித்த ரோசா பூ ரவிக்கைக்காரி போன்ற திரைப்படங்கள் புகழ் பெற்றவை, இவர் ரோசா பூ ரவிக்கைக்காரி மற்றும் வண்டிச்சக்கரம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.

1965 ஆம் ஆண்டு சிவக்குமார் முதன் முதலாக நடித்து வெளியான படம் காக்கும் கரங்கள், அந்த சமயங்களில் கவியரசு கண்ணதாசன் அவர்கள் படங்கள் தயாரித்து வந்தார். எனவே அவர் 1966 ஆம் ஆண்டு சிவக்குமார் மற்றும் சிவாஜியை வைத்து ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் என முடிவு செய்தார்.

ஆனால் வித்தியாசமான கதை தேவை. அப்போதெல்லாம் அதிகப்பட்சம் தயாரிப்பாளர்களே திரைப்படத்தின் கதையை தேர்வு செய்துவிடுவார்கள். அப்படி கண்ணதாசன் யோசிக்கும்போது அவருக்கு Balad of a Soldier என்கிற ரஷ்ய படம் நினைவிற்கு வந்துள்ளது.1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை தழுவலாக கொண்டு அப்போது எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ”தாயே உனக்காக”.  இந்த திரைப்படத்தில் சிவாஜி மற்றும் சிவக்குமார் இருவரும் சேர்ந்து நடித்தனர். இருவருக்குமே முக்கிய கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படம் நடிகர் சிவக்குமாருக்கு இரண்டாவது படமாக அமைந்தது. மேலும் தமிழ் திரையுலகில் அவரை அடையாளப்படுத்திக்கொள்ள உதவிய முக்கிய படமாக அமைந்தது அந்த திரைப்படம்.

Refresh