தமன்னாவை அனுமதிக்க மாட்டோம்.. கடுப்பான கர்நாடக மக்கள்.. இதுதான் காரணம்..!

தென்னிந்தியாவில் பிரபல நடிகைகளில் முக்கியமானவராக நடிகை தமன்னா இருந்து வருகிறார். நடிகை தமன்னா நடிக்கும் படங்களுக்கு எப்பொழுதுமே வரவேற்பு என்பது இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா ஆடிய பாடல்களுக்கு பிறகு இப்பொழுது ஐட்டம் பாடல்கள் தான் அவருக்கு அதிகமாக வந்த வண்ணம் இருக்கின்றது.

தெலுங்கு ஹிந்தி தமிழ் என்று மூன்று மொழிகளிலும் இப்பொழுதும் வரவேற்பை பெற்ற நடிகையாக தமன்னா இருந்து வருகிறார். இந்த நிலையில் கர்நாடக அரசு நடத்தி வரும் சோப்பு நிறுவனமான மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்திற்கு தமன்னாவை இப்பொழுது ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர்.

thammana
thammana

மைசூர் சாண்டல் நிறுவனம் பல வருடங்களாக இந்தியா முழுவதும் சோப் விற்று வருகிறது இந்த நிறுவனம் கர்நாடகா அரசின் நேரடி முதலீட்டில்  இயங்கும் நிறுவனமாகும்.

இந்த நிலையில் விளம்பர ஒப்பந்ததாரராக இந்த நிறுவனத்திற்காக தமன்னாவை ஒப்பந்தம் செய்திருக்கிறது கர்நாடகா அரசு. ஆனால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். கர்நாடகா நடிகை யாராவது ஒருவரை தான் இதற்கு ஒப்பந்தம் செய்ய வேண்டுமே தவிர ஹிந்தி நடிகையான தமன்னாவை செய்ய கூடாது என்பது அவர்களது விருப்பமாக இருக்கிறது.

 

 

 

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version