சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு, வதந்திகளுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றி வதந்திகள் வலம் வந்து கொண்டு தான் இருக்கும்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் இது குறித்து அவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்காத வரையில் நெட்டிசன்களின் கருத்துகள் ஓயாது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இரு நடிகர்கள் சர்ச்சையால் பெரும் இழப்பை சந்தித்து இருக்கிறார்கள். அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மைக் மோகன்
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய முதல் திரைப்படமான கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், அந்த படத்தில் இருந்து மைக் மோகன் என்றும் கோகிலா மோகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிறகு 1982ல் வெளிவந்த பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை இவர் பெற்றிருக்கிறார். அதன் பிறகு மணிரத்னம் இயக்கிய மௌன ராகம் என்ற திரைப்படம் 1986 இல் வெளிவந்து காதல் நாயகனாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக அவருக்கு புகழை தேடிக்கொடுத்தது.
இந்நிலையில் பல வெற்றி படங்களின் நடித்த மோகன் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. இவர் தற்போது விஜய் நடிக்கும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் தன்னை பற்றிய ஒரு சர்ச்சை என் வாழ்க்கையை பாதித்துவிட்டது என கூறியிருக்கிறார்.
இவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக யாரோ ஒருவர் சர்ச்சைகளை கிளப்ப அது உண்மை என பலரும் நம்பி விட்டார்கள். மேலும் இந்த சர்ச்சையை பாக்யராஜின் மனைவி பூர்ணிமா தான் ஏற்படுத்தி உள்ளார் என்றும் அப்போது ஒரு வதந்தி பரவி வந்தது.
நடிகை சாய் பல்லவி
தென்னிந்திய ரசிகர்களின் தற்போது கனவு நாயகியாக இருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் எந்த ஒரு கிளாமர் காட்சியிலும் நடிக்காமல் தற்போது வரை தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சாய் பல்லவி மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. ஆனால் அது அமரன் படத்தின் பூஜைக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருவரும் மாலை போட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வருத்தம் அடைந்த சாய் பல்லவி என்னை பற்றி பேசுவதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருந்தாலும், ஏன் இது போன்ற விஷயங்களை பேசுகிறீர்கள் என வருத்தமாக பதிவு ஒன்றே பதிவிட்டு இருந்தார்.