Latest News
கண் கலங்கும் ரசிகர்கள்.. சித்தா படம் எப்படி இருக்கு!..
தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சித்தார்த் தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார்.
தற்சமயம் இவர் நடித்த சித்தா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது சித்தா திரைப்படம் குறித்து ஏற்கனவே பல பேச்சுக்கள் இருந்தன. இந்த திரைப்படத்தில் ஒரு சிறுமியின் சித்தப்பா கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் முதல் காட்சிகள் முடிந்த நிலையில் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. படத்தைப் பார்த்த பலரும் படம் குறித்து நல்ல வகையான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்த படம் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை பேசும் விதமாக இருக்கின்றது என்று கூறப்படுகிறது. காணாமல் போகும் தனது அண்ணன் மகளை சித்தார்த் கண்டறிவது படத்தின் கதையாக உள்ளது.
படத்தைப் பார்த்த பலரும் கூறும் பொழுது இந்த படத்தில் சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், பொதுவாக காமெடி திரைப்படங்கள், காதல் திரைப்படங்கள் என்று நடிக்கும் சித்தார்த் இந்த திரைப்படத்தில் கொஞ்சம் மாறுதலாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளனர். கண் கலங்க வைக்கும் காட்சிகள் திரைப்படத்தில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சித்தா திரைப்படத்திற்கு வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.