Cinema History
5 முக்கிய நடிகர்களுக்கு நடிக்க தடை!.. அதுக்கு சாத்தியம் உண்டா?.
தமிழ் சினிமாவில் விளையாட்டில் இருப்பது போலவே ரெட் கார்டு என்கிற வழக்கம் உண்டு. சினிமாவை பொறுத்தவரை தயாரிப்பாளர்கள், நடிகர்கள், என அனைவரும் தனி தனி சங்கங்கள் வைத்துள்ளனர். அதில் அவர்களுக்கு எதிராகவோ அல்லது திருப்தியில்லாமலோ பணிப்புரிபவர்களை நீக்கிவிடுவார்கள்.
பிகில் திரைப்படத்திற்கு பிறகு தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் இயக்குனர் அட்லீக்கு ரெட் கார்டு கொடுத்ததாக ஒரு பேச்சு உண்டு. அவர் தொடர்ந்து பல திரைப்படங்களின் காட்சிகளை திருடி படம் எடுக்கிறார் என்கிற குற்றச்சாட்டே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
எனவேதான் பிறகு அட்லீ பாலிவுட்டில் படம் இயக்க சென்றுவிட்டார். இந்த நிலையில் தமிழ் நடிகர்கள் சிலருக்கு தற்சமயம் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரெட் கார்டு கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா ஆகிய நடிகர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த யாரும் ஒத்துழைப்பதில்லை என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்து சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறும்போது எந்த ஒரு தொழிலாளியின் வேலையை கெடுப்பதற்கும் இன்னொரு மனிதருக்கு உரிமை இல்லை. எனவே இப்படியான முடிவுகளை தயாரிப்பாளர் சங்கத்தால் எடுக்க முடியாது.
மேலும் தமிழ் சினிமாவில் குறைந்த சம்பளத்தில் நடிக்கும் நடிகர்கள் குறைவாகவே இருக்கின்றனர். எனவே இந்த செய்தி ஒரு வதந்தியாகதான் இருக்கும் என பிஸ்மி கூறியுள்ளார்.