பொதுவாக அதிக கவர்ச்சி காட்சிகளை சினிமாவில் அவ்வளவாக இருக்காது. ஏனெனில் தணிக்கை குழுவை பொறுத்தவரை அதிக கவர்ச்சியான காட்சிகளை அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் ஓ.டி.டிக்கு அப்படியான தணிக்கை எதுவும் கிடையாது.
இதனால் இரத்த காட்சிகள், கவர்ச்சி காட்சிகள் எல்லாமே அதில் அதிகமாகதான் இருக்கும். முக்கியமாக ஓ.டி.டி வந்தது முதல் ஆபாச காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிக கவர்ச்சி காட்சிகளை கொண்ட சில சீரிஸ்கள் வந்துள்ளன.
ஆட்டோ சங்கர்:
1985 இல் விபச்சாரம் கள்ளக்கடத்தல் அனைத்திலும் கொடிக்கட்டி பறந்த ரவுடிதான் ஆட்டோ சங்கர். இவரின் மரண வாக்குமூலத்தில் பல கட்சி ஆட்களின் பெயர் அடிப்பட்டதால் தொடர்ந்து அப்போது இது அதிக சர்ச்சைக்குள்ளானது. இவரின் கதை சீரிஸாக எடுக்கப்பட்டது அதில் அதிகமாக படுக்கையறை காட்சிகளும் இருந்தது.
கள்ளசிரிப்பு:
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உருவான தொடர்தான் கள்ளச்சிரிப்பு ஆபாச படங்கள், தன்பாலின ஈர்ப்பு, கருக்கலைப்பு, எல்.ஜி.பி.டி என்னும் பல பாலியல் தொடர்பான விஷயங்கள் குறித்து இந்த தொடரில் வெளிப்படுவதை பார்க்க முடியும்.
விலங்கு:
நடிகர் விமல் நடிப்பில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற தொடராக விலங்கு வெப் சீரிஸ் உள்ளது. ரத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகளும் அதிகமாக கொண்ட சீரிஸாக விலங்கு வெப் சீரிஸ் இருந்தது.
ஆசிரம்:
ஹிந்தியில் படமாக்கப்பட்டு தமிழிலும் டப்பிங் ஆகி வந்த சீரிஸ் ஆசிரம். தற்சமயம் கங்குவா திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பாபி தியோல்தான் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொள்ளும் சாமியாராக பாபி தியோல் இருந்தார். இதில் அதிகமாக படுக்கையறை காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த மாதிரி வேற்று மொழிகளில் வரும் சீரிஸ்களில் இன்னமுமே அதிகமாக கவர்ச்சி காட்சிகள் இருப்பதை பார்க்க முடிகிறது.