தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் நிலையில் 80s களின் இறுதியிலும் 90ஸ்களின் தொடக்கத்திலும் பலரின் கனவு நாயகியாக இருந்தவர் சித்தாரா.
இவர் பல மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்த நடிகையாவார். தற்போது இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் காரணத்தை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சித்தாரா
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் அதிகமாக நடித்த சித்தாரா கே. பாலச்சந்தரின் புதுப்புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
மேலும் படையப்பாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தங்கையாக நடித்த இவர் பெரும் பிரபலம் அடைந்தார். 30 ஆண்டுகளாக திரைப்பட வாழ்க்கையில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் அடைந்தார்.

கேரளாவில் பிறந்த இவர் தாய், தந்தை இருவரும் மின்வாரியத்தில் பணிபுரிபவர்கள் ஆவார்கள். கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இவர் நடிப்பில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களான புதுப்புது அர்த்தங்கள், உன்னைச் சொல்லி குற்றமில்லை, புதுப்புது ராகங்கள், புதுவசந்தம், புரியாத புதிர், ஒரு வீடு இரு வாசல் போன்ற பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்து இருக்கிறார்.
திருமணம் செய்து கொள்ளாமல் இருபதற்கான காரணம்
30 வருடங்களாக சினிமா துறையில் பேரும் புகழுமாக இருக்கும் சித்தாரா திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். இந்த தலைமுறை நடிகர்களுடனும் நடித்துவரும் சித்தாரா? பல குணச்சித்திர வேடங்களில் நடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் இன்றளவும் அறியப்படுகிறார்.
தற்போது பல சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார். 50 வயதாகும் சித்தாரா திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் என்னவென்று அவர் கூறும் போது தன் தந்தை பரமேஸ்வர நாயர் மிகவும் பாசத்துடன் இருப்பார் என்றும், அவரின் மறைவிற்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள எண்ணம் வரவில்லை என்றும் தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.