Connect with us

லியோ படத்தோட உண்மை வசூல் இதுதான்… மொதலுக்கே மோசமா போயிட்டு.. புலம்பும் விநியோகிஸ்தர்கள்!..

vijay leo

Latest News

லியோ படத்தோட உண்மை வசூல் இதுதான்… மொதலுக்கே மோசமா போயிட்டு.. புலம்பும் விநியோகிஸ்தர்கள்!..

cinepettai.com cinepettai.com

தற்சமயம் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் தமிழக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலை பெற்று கொடுத்தது அந்த திரைப்படம். ஆனால் லியோ திரையரங்குகளுக்கு பெரிதாக வசூலை பெற்று கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து விநியோகஸ்தர்கள் பலரும் புகார் அளித்து வருகின்றனர் அதாவது லியோபடம் வெளியாவதற்கு முதல் நாள் வரை ரோகிணி, வெற்றி போன்ற சென்னையின் பிரபல திரையரங்களில் படம் வெளியாகவில்லை ஏன் வெளியாகவில்லை என்பதற்கு இதுதான் காரணமாக இருந்தது.

பொதுவாக படத்திற்கு வரும் கலெக்‌ஷனில் 30 சதவீதம் திரையரங்குகளுக்கு வழங்கப்படும். ஆனால் அதை குறைத்து குறைத்து இந்த படத்திற்கு 20% தான் திரையரங்குகளுக்கு கொடுக்க முடியும் என்று கூறி இருக்கின்றனர். இதனால் கடுப்பான திரையரங்க உரிமையாளர்கள் அந்த விலை கட்டுபடியாகாது எனக் கூறியதற்கு அப்படி என்றால் நீங்கள் படத்தை வெளியிட வேண்டாம் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் .

ஆனால் அந்த சமயத்தில் வேறு ஏதும் படம் கைவசம் இல்லாத காரணத்தினால் திரையரங்குகள் லியோ திரைப்படத்தை வாங்கி வெளியிட்டன. இருந்தாலும் ரோகிணி மாதிரியான பெரிய திரையரங்குகள் இவர்களின் பேச்சினால் கடும் கோபமாகி படத்தை வாங்கவே இல்லை.

இது குறித்து விநியோகஸ்தரும் திரையரங்க முதலாளியுமான திருப்பூர் சுப்ரமணியம் கூறும் பொழுது சின்ன படங்கள் கூட எங்களுக்கு அதிகமாக லாபத்தை பெற்றுக் கொடுக்கின்றன. குட் நைட் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் 50% லாபத்தில் தான் வெளியிடுவோம் படம் ஓடுவதில் 50 சதவீதம் எங்களுக்கு கிடைக்கும்.

ஆனால் லியோ மாதிரியான திரைப்படங்கள் கோடிகளை கொட்டி கொட்டி ஓடினாலும் கூட எங்களுக்கு அதில் பெரிதாக பணம் வருவதில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். எனவே லியோ படத்தை எடுத்ததே நாங்கள் செய்த தவறுதான் அந்த படம் எவ்வளவு ஓடி இருந்தாலும் அதில் எங்களுக்கு எந்த லாபமும் கிடையாது என்று மனம் வருந்தி கூறியுள்ளார் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம்.

POPULAR POSTS

samyuktha
poonam bajwa
vijay GOAT
velpari shankar
kamalhaasan lingusamy
rajini ajith
To Top