Cinema History
விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா!.. பயங்கர உருட்டா இருக்கும் போல!..
தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 30 ஆண்டு காலமாக சினிமாவில் இருக்கும் விஜய் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்சமயம் ரஜினிகாந்துக்கு பிறகு அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக மாறியுள்ளார்.
ஒரு படத்திற்கு 100 கோடிக்கு அதிகமாகதான் சம்பளம் வாங்குகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி பலருக்கும் உண்டு. இந்த 30 ஆண்டு காலத்தில் எவ்வளவு சம்பளங்கள் வாங்கி இருப்பார்.
அதில் எவ்வளவு சொத்துக்களை சேர்த்து இருப்பார் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. விஜய்யின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்ட பல்வேறு தளங்கள் மிகவும் குறைவான தொகையையே விஜயின் சொத்து மதிப்பாக அறிவித்துள்ளது.
அதன்படி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு 459 கோடி என கூறப்படுகிறது. மாதம் 3 லட்சத்திற்கும் அதிகமாக அவர் சம்பாதிப்பதாகவும், வருடத்திற்கு 150 கோடி வரை சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் அவரிடம் உள்ள அசையா சொத்துக்கள் 70 கோடிக்கு இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் விஜய்யின் ஒரு படத்திற்கான சம்பளமே 100 கோடிக்கு அதிகமாக இருக்கும் பொழுது மொத்த சொத்து மதிப்பு எப்படி 460 கோடிகளில் முடியும் என்று இது குறித்து சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.