இண்டர்நெட் வர்றதுக்கு முன்னாடியே தமிழர்கள் மூலம் நாங்கள் பிரபலம்.. மனம் திறந்த புலி புலி டர்க்கி..!

திறமை உள்ளவர்களுக்கு கூட சில சமயங்களில் தாமதமாகதான் அதற்கான வரவேற்பு என்பது கிடைக்கிறது. இன்னமும் சிலருக்கு கடைசி வரை அந்த வரவேற்புகள் என்பது கிடைப்பதே இல்லை.

அப்படியாக பல காலங்களுக்கு பிறகு தற்சமயம் டர்க்கி என்கிற இசைக்குழு குட் பேட் அக்லி திரைப்படத்தின் மூலம் அதிக பிரபலமாகி வருகிறது. இந்த குழு பாடிய புலி புலி என்கிற பாடல் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஏற்கனவே இவர்களது பாடலான அக்கா மக பாடலை சசிக்குமார் நடித்த குட்டி புலி திரைப்படத்தில் பயன்படுத்தியிருந்தனர். அதற்கு பிறகு கபாலி திரைப்படத்தில் ஒரு காட்சியில் இந்த குழு வருவதை பார்க்க முடியும்.

1990 களில் இருந்தே இந்த குழு இசையமைத்து வருகிறது. இவர்களது பாடல்கள் மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக பிரபலமாக இருந்துள்ளன. இந்த நிலையில் எப்படி தமிழ்நாட்டில் அந்த பாடல்கள் பிரபலமானது என்பதை அவர்கள் விளக்கியுள்ளனர்.

அப்போதெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் இங்கு வேலைக்கு வரும்போது சிங்கப்பூர் மலேசியாவில் மொபைல் வாங்குவார்கள். அப்படி வாங்கும்போது அதில் 10 பாடல்கள் கடைகளிலேயே ஏத்தி தருவார்கள். அதில் எங்கள் பாடல்களும் இருக்கும்.

தமிழ்நாட்டுக்கு செல்லும் மக்கள் அதை அங்கு கேட்கும்போது அங்கேயும் அந்த பாடல்கள் பிரபலமாகிவிட்டன என்று கூறியிருக்கின்றனர்

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version